வியாழக்கிழமை, அக்டோபர் 31, 2024

கோட் படத்தின் 3வது பாடலில் சம்பவம் செய்த சுருதி.. யுவன் செய்த காரியத்தால் கடுப்பான வெங்கட் பிரபு

Goat 3rd Single: ஒரு விஷயத்துல முழுமையாக வெற்றி அடைந்து விட்டால் அதையே பிடித்து தொங்காமல் அடுத்த கட்ட லெவலில் காலடி எடுத்து வைத்து வெற்றியை பார்க்க வேண்டும். அப்படித்தான் விஜய், சினிமாவில் ஆட்டநாயகன் ஆகவும் வசூல் மன்னனாகவும் ஜெயித்து முன்னணி நடிகர்களில் ஒருவராக ஜொலித்து விட்டார். தற்போது சினிமாவில் ஜெயித்த பிறகு அடுத்த கட்டமாக அரசியலிலும் ஜெயிக்க வேண்டும் என்று தமிழக வெற்றி கழகத்தின் கட்சியை ஆரம்பித்திருக்கிறார்.

அந்த வகையில் கமிட்டாகி இருக்கும் இரண்டு படத்தை முடித்துவிட்டு சினிமாவில் பிரேக் எடுக்கப் போகிறார். இதற்கிடையில் வெங்கட் பிரபு இயக்கத்தில் நடித்துள்ள கோட் படத்தின் படப்பிடிப்பு முடிந்த நிலையில் போஸ்ட் ப்ரொடக்ஷன் வேலைகள் அனைத்தும் நடைபெற்று வருகிறது. இப்படம் செப்டம்பர் 5ஆம் தேதி அனைத்து திரையரங்களிலும் வெளிவர இருக்கிறது.

விஜய் பாடலில் புகுந்து விளையாடிய சுருதி

மேலும் விஜய் இனி நடிக்க மாட்டார் என்று தெரிந்த நிலையில் கோட் படத்திற்கு அதிக எதிர்பார்ப்பை வைத்து ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் இப்படத்தில் இருந்து வெளிவந்த இரண்டு பாடல்களுமே வழக்கமாக விஜய் பாடல்களுக்கு கிடைக்கும் வரவேற்பை விட கம்மியாக தான் கிடைத்திருக்கிறது. அதனால் படம் எப்படி இருக்குமோ என்ற ஒரு சந்தேகமும் ரசிகர்களிடம் இருக்கிறது.

இந்த சூழ்நிலையில் இப்படத்தில் இருந்து மூன்றாவது சிங்கிள் பாடல்கள் ரிலீஸ் ஆகப்போவதாக தயாரிப்பாளர் ஏஜிஎஸ் நிறுவனம் இணையதளத்தில் ஒரு பதிவு போட்டிருந்தார்கள். அந்த வகையில் இந்த வார இறுதிக்குள் மூன்றாவது சிங்கிள் பாடல் வெளிவந்துவிடும். இந்த பாடலில் விஜய் மற்றும் திரிஷா ஆடிய டான்ஸ் இருக்கிறது. இந்த பாடலை சுருதிஹாசன் தான் பாடியிருக்கிறார்.

ஏற்கனவே வந்த இரண்டு பாடல்களை விட சுருதிஹாசன் பாடிய பாடல் நிச்சயம் சம்பவம் செய்ய போகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த பாடலுக்கு “ஸ்பார்க்” என்னும் பெயர் வைத்திருக்கிறார்கள். அந்த வகையில் விசில் போடு பாடலுக்கு டஃப் கொடுக்கும் வகையில் தூக்கலாக இருக்கப் போகிறது. சும்மாவே சுருதிஹாசன் பாடும் பாடல் ஹைப்பை ஏற்படுத்தும் அளவிற்கு எனர்ஜிடீக்காக இருக்கும்.

அதிலும் விஜய் ஆடும் பாடல் என்றால் சும்மா கேட்கவா செய்யணும், அதிரும்ல என்று சொல்வதற்கு ஏற்ப சுருதி அவருடைய பெஸ்ட்டை கொடுத்து இருக்கிறார். ஆனால் இந்த பாடலை இந்த வாரத்திற்குள் ரிலீஸ் பண்ணுவதற்கு தயாராகிய நிலையில் யுவன் முடிக்க வேண்டிய வேலைகளை எதுவும் முடிக்காமல் அசால்ட்டாக இருக்கிறார். யுவனின் செய்கையை பார்த்து செம கடுப்பில் வெங்கட் பிரபு இருக்கிறார். எப்படியாவது இந்த வாரத்திற்குள் ரிலீஸ் பண்ண வேண்டும் என்பதால் தம்பிக்கு நெருக்கடி கொடுத்து வருகிறார் வெங்கட் பிரபு.

மேலும் கோட் படம் அடுத்த மாதம் வெளிவர இருப்பதால் இப்படத்தின் சிறப்பு காட்சியை ரிலீசுக்கு முன்னதாக இங்கிலாந்தில் திரையிட போகிறார்கள். இங்கிலாந்தில் கோட் படத்தை வெளியிடும் ‘ahimsa entertainment’ நிறுவனம் இத்தகவலை வெளியிட்டுள்ளது. அஜித்திற்கு மங்காத்தா, சிம்புக்கு மாநாடு போன்று விஜய்க்கும் கோட் படம் வெற்றியை கொடுக்கும் என்று ரசிகர்கள் நம்பிக்கை வைத்து காத்துக் கொண்டிருக்கிறார்கள்.

கோட் படத்தின் சுவாரசியமான விஷயங்கள்

- Advertisement -spot_img

Trending News