SJ Suryah: எஸ் ஜே சூர்யா என்ற பெயர் தற்போது தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத ஒன்றாகிவிட்டது. ஒரு இயக்குனராக எஸ் ஜே சூர்யா ஜெயித்ததை விட தற்போது நடிகராக புதிய உச்சத்தை அடைந்திருக்கிறார். அறிமுக படமே அஜித் குமாருடன், அடுத்த படம் விஜய் உடன் என அதிர்ஷ்டம் அவருக்கு கை கொடுத்துக் கொண்டுதான் இருந்தது.
கடந்த சில வருடங்களுக்கு முன்பு வரை ஏகண்டன் படங்கள் தான் இவர் எடுப்பார் என்ற முத்திரை இவர் மீது இருந்தது. ஆனால் அதை மொத்தமாக மாற்றி இப்போது நடிப்பு அரக்கன் என்ற பெயரை வாங்கி இருக்கிறார். சிறந்த நடிகர் என்பதை தாண்டி நான்கு முக்கியமான டாப் ஹீரோக்களின் சினிமா வாழ்க்கையை புரட்டி போட்டு இருக்கிறார் எஸ் ஜே சூர்யா. அதைப்பற்றி பார்க்கலாம்.
4 ஹீரோக்களின் வாழ்க்கையை புரட்டிப்போட்ட ஜாக்கி பாண்டியன்
சிம்பு: சிம்புவின் சினிமா கனவை மீண்டும் அவர் கைகளில் கொடுத்தது மாநாடு படம் தான். இந்த படத்தில் பெரிய வெற்றிக்கு காரணம் எஸ் ஜே சூர்யா என்று சொன்னால் யாராலுமே மறுக்க முடியாது. மாநாடு படத்தின் பட்ஜெட் 30 கோடி. இந்த படம் ஒட்டுமொத்தமாக 100 கோடி வசூல் செய்தது. அது மட்டும் இல்லாமல் சிம்பு கேரியரில் முதல் முதலில் 100 கோடி கிளப்பில் இணைந்த படம் மாநாடு தான்.
சிவகார்த்திகேயன்: சிவகார்த்திகேயன், எஸ் ஜே சூர்யா கூட்டணியில் உருவான டான் படம் எல்லோரையும் வயிறு குலுங்க சிரிக்க வைத்தது. சிவகார்த்திகேயன் குடும்பங்கள் கொண்டாடும் ஹீரோவாக இருந்தாலும் இளைஞர்கள் அவரை கொண்டாடியது டான் படத்திலிருந்து தான். ஏற்கனவே டாக்டர் படம் 100 கோடி கிளப்பில் இணைந்து இருந்தாலும் டான் படம் சிவகார்த்திகேயனை வசூல் நாயகனாக மாற்றியது.
விஷால்: பத்து வருடங்களுக்கும் மேலாக தொடர் தோல்விகளை சந்தித்து வந்தார் விஷால். அவரை வெற்றி முகத்தில் ஏற்றி வைத்தது ஜாக்கி பாண்டியன் தான். மார்க் ஆண்டனி படம் எஸ் ஜே சூர்யா நடிப்புக்காக தான் வெற்றி பெற்றது என்பது நிதர்சனமான உண்மை. . அதுமட்டுமில்லாமல் விஷாலின் நடிப்பில் இதுவரை வெளியான படங்களில் மார்க் ஆண்டனி படம் தான் முதன் முதலில் 100 கோடி கிளப்பில் இணைந்தது.
தனுஷ்: நடிகர் தனுஷின் ஐம்பதாவது படமான ராயன் படத்திலும் எஸ் ஜே சூர்யா கைகோர்த்து இருந்தார். ஒரு நடிகராக தன்னுடைய ஐம்பதாவது படத்தில் ஜெயித்தது மட்டுமில்லாமல் இயக்குனராகவும் தனுஷ் ஜெயித்து விட்டார். அது மட்டும் இல்லாமல் இந்த படம் ரிலீஸ் ஆன 6 நாளில் 100 கோடி கிளப்பில் இணைந்து இருக்கிறது.
வில்லனாக மிரட்டும் எஸ்ஜே சூர்யா