திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

ஈஸ்வரியுடன் சேர்ந்து கோபியை அவமானப்படுத்திய பாக்யா.. நிம்மதி இல்லாமல் தவிக்கும் ராதிகா

Bhakkiyalakshmi Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாக்கியலட்சுமி சீரியலில், இனியா காலேஜுக்கு பாக்யா, ஈஸ்வரி மற்றும் தாத்தா போய் கல்லூரியின் முதல்வரை பார்த்து பேசுகிறார்கள். அப்பொழுது இனியா செய்த காரியத்துக்கு நாங்கள் டீசி கொடுத்து அனுப்பப் போகிறோம் என்று சொல்கிறார். இதை கேட்டு அதிர்ச்சியான பாக்கியா காலில் விழாத குறையாக கெஞ்சுகிறார். அத்துடன் தாத்தா மற்றும் ஈஸ்வரியும் சேர்ந்து இனியாவுக்காக பேசுகிறார்கள்.

அப்பொழுது இனியாவின் அப்பா எங்கே என்று கல்லூரி முதல்வர் கேட்கிறார். அதற்கு ஈஸ்வரி, இவளுடைய அப்பா வேறொரு கல்யாணம் பண்ணிக்கிட்டு எங்களை நடுத்தெருவில் விட்டுட்டு போய்விட்டார். அவனுக்கும் எங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. எங்களையும் இனியாவையும் பார்த்துக் கொள்வது பாக்கியா தான். குடும்பத்தையும் வெளி வேலையும் பார்த்து வருகிறார் என்று ஈஸ்வரி சொல்கிறார்.

குடும்பத்துடன் கோபியை அவமானப்படுத்திய சம்பவம்

உடனே பாக்யா மறுபடியும் கெஞ்சிய நிலையில், கல்லூரி முதல்வர் உங்களுக்காக நான் இனியாவிற்கு கடைசி ஒரு சான்ஸ் கொடுக்கிறேன். இனி இனியா மீது ஒரு சின்ன புகார் வந்தாலும், நீங்கள் என்னை வந்து சந்திக்க வேண்டாம். நேரடியாக ஆபீஸ்க்கு சென்று டிசி வாங்கிட்டு போகலாம் என்று வார்னிங் கொடுக்கிறார். பிறகு பாக்கியா நன்றி தெரிவித்து இனியாவை கிளாஸ்க்கு அனுப்பி வைக்கிறார்.

இதனை தொடர்ந்து வீட்டிற்கு வந்த இவர்களிடம் ஜெனி மற்றும் அமிர்தா காலேஜில் ஒரு பிரச்சனையும் இல்லல்ல என்று கேட்கிறார்கள். அதற்கு ஈஸ்வரி, மிகப்பெரிய பிரச்சினை தான் வந்தது. ஆனால் நாங்கள் பேசி சமாளித்து விட்டோம் என்று சொல்கிறார். இதற்கு இடையில் கோபி கல்லூரியின் முதல்வரை பார்த்து பேசுவதற்காக போகிறார். போனதும் கல்லூரியின் முதல்வர் கோபியை பார்த்து உங்களுக்கெல்லாம் வெக்கமாக இல்லையா.

இரண்டாவதாக கல்யாணம் பண்ணுவது உங்களுடைய ஈஷ்டம். ஆனால் அதற்காக உங்க பிள்ளைகளை இப்படி அஜாக்கிரதையாக விட்டுட்டு போகலாமா என்று அசிங்கப்படுத்தி பேசுகிறார். இந்த கோபத்துடன் கோபி, பாக்கியா வீட்டிற்கு போய் நீங்கள் ஏன் தேவை இல்லாமல் என்னை பற்றி அங்கே பேசினீர்கள் என்று கேட்கிறார். அதற்கு ஈஸ்வரி கூலாக நாங்கள் ஏதும் தப்பாக சொல்லவில்லையே.

அவர் தான் இனியாவின் அப்பா எங்கே என்று கேட்டார், அதற்கு நாங்கள் உண்மைதான் சொல்லிட்டு வந்தோம் என்று தாத்தா மற்றும் ஈஸ்வரி கோபியை வச்சு செய்தார்கள். அப்பொழுது கோபி, உங்களுக்கு வேணா நான் பிள்ளை இல்லாமல் இருக்கலாம், ஆனால் இனியாவிற்கு நான் அப்பா இல்லை என்று யாராலும் சொல்ல முடியாது என்று தெனாவட்டாக பேசுகிறார்.

இதை கேட்டதும் பாக்யா, வெறும் வாய் வார்த்தைக்கு மட்டும் நீங்கள் அப்பா என்று சொன்னால் அது எப்படி பாசமாக இருக்கும். பிள்ளைகளை வளர்த்து அவர்கள் சொந்த காலில் நிற்கும் வரை நாம் தான் கையை பிடித்து கூட்டிட்டு போக வேண்டும். நீங்கள் எதைப் பற்றியும் கவலைப்படாமல் உங்க சந்தோஷத்தை தேடி போனீர்கள். இப்ப மட்டும் ஏன் வந்து வந்து எங்களை டார்ச்சர் பண்ணுகிறீர்கள் என்று கோபியை அவமானப்படுத்தி பேசி விட்டார்.

இங்கே எதுவும் பேச முடியாத கோபி, ராதிகா வீட்டிற்கு போய் தலையில் கையை வைத்து ஃபீல் பண்ணுகிறார். இதை பார்த்ததும் ராதிகா என்ன ஆச்சு என்று கேட்கிறார். அதற்கு கோபி ஒன்றும் இல்லை என்று சொல்லிய நிலையில், பரவாயில்லை என்னவென்று என்னிடம் சொல்லுங்கள் என்று ராதிகா கேட்கிறார். உடனே கோபி நடந்த விஷயத்தை சொல்லி அசிங்கப்பட்டதையும் ரொம்ப பீல் பண்ணி சொல்கிறார்.

இதற்கு தான் நீங்கள் காலேஜுக்கு போகும் பொழுது நான் வேண்டாம் என்று சொன்னேன். ஆனால் நீங்கள் நான் ஏதோ அப்பா பிள்ளை பாசத்தில் தலையிடுகிறேன் என்று என்னை தப்பாக நினைத்திருப்பீர்கள். ஆனால் எனக்கு அதைப் பற்றி கவலை இல்லை. மீண்டும் மீண்டும் நீங்கள் தான் போய் அசிங்கப்பட்டு வருகிறீர்கள். அதனால் நானும் நிம்மதி இல்லாமல் தவித்து வருகிறேன். இதெல்லாம் பார்க்கும் பொழுது ஏன் தான் கல்யாணம் பண்ணினேன் என்று தோன்றுகிறது என்று ராதிகா புலம்புகிறார்.

பாக்கியலட்சுமி சீரியலில் நடந்த சம்பவங்கள்

Trending News