CWC 5: சன் டிவி மற்றும் விஜய் டிவிக்கு இடையே நடக்கும் டிஆர்பி போட்டி ஊர் அறிந்த விஷயம் தான். அதிலும் விஜய் டிவியின் பெரிய வெற்றி பெற்ற நிகழ்ச்சியான குக் வித் கோமாளி கை மாறியது அந்த சேனலுக்கு பெரிய அடியாக அமைந்துவிட்டது.
குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கான அத்தனை மசாலாக்களும் இருந்தும் நிகழ்ச்சியில் ஏதோ பிசுறு தட்டுவது எல்லோருக்குமே தெரிகிறது. நமக்கே தெரியும் பொழுது அந்த சேனலுக்கு தெரியாமல் இருக்குமா. அதனால் புதுசு புதுசாக எதை எதையோ செய்து வருகிறார்கள்.
கோமாளிகளை நம்பி எந்த பிரயோஜனமும் இல்லை என இந்த வாரம் வேறு ஒரு புதிய திட்டத்துடன் குக் வித் கோமாளி நிகழ்ச்சி இறங்கி இருக்கிறது. அதாவது இந்த வாரம் இன்டர்நேஷனல் சமையல் ரவுண்டு நடக்கிறது.
CWC-5 vs டாப் குக் டூப் குக்
இதில் கோமாளிகள் இருந்தாலும் குக்குகளுக்கு உதவி செய்ய கிராமத்திலிருந்து வயதான பெண்களை அழைத்து வந்திருக்கிறார்கள். இன்டர்நேஷனல் சமையலை கிராமத்து பெண்களை வைத்து எப்படி செய்கிறார்கள் என்பது பார்ப்பதற்கு கலகலப்பாக தான் இருக்கும்.
அது மட்டுமில்லாமல் சோயா இல்லாமல் இந்த சீசனை ஓட்ட முடியாது என விஜய் டிவிக்கு தெரிந்து விட்டது போல. இதனால் எலிமினேட் ஆகி போன சோயாவை செக்கிங் இன்ஸ்பெக்டர் என்ற கேரக்டரில் இந்த வாரம் உள்ளே இறக்குகிறார்கள்.
இதனால் இந்த வாரம் இரண்டு எபிசோடுகளும் கலகலப்புக்கு பஞ்சம் இல்லாமல் போகப் போகிறது என தெரிந்து விட்டது. விஜய் டிவிக்கு போட்டியாக அதிரடியாக டாப் குக் டூப் குக் நிகழ்ச்சியிலும் ஒரு சின்ன மாற்றத்தை கொண்டு வந்திருக்கிறார்கள்.
இந்த நிகழ்ச்சியில் வைல்ட் கார்டு என்ட்ரி ஆக சிங்க பெண்ணே சீரியலில் ஆனந்தி கேரக்டரில் நடிக்கும் மானசாவை கொண்டு வந்து இருக்கிறார்கள். மானசாவுக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் பட்டாளம் இருப்பதால் இதை வைத்து டிஆர்பியை ஏத்தி விடலாம் என சன் டிவி முடிவு எடுத்திருக்கிறது.