வெள்ளிக்கிழமை, டிசம்பர் 27, 2024

கல்யாணி வாழ்க்கையில் குட்டையை குழப்பிய முத்து.. சிக்கலில் சிக்கிய விஜயா, ரோகினியை திட்டிய மனோஜ்

Sirakadikkum Asai Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற சிறகடிக்கும் ஆசை சீரியலில், க்ரிஷ் பிறந்தநாளுக்கு போன முத்து மீனாவிற்கு கல்யாணி வாழ்க்கையைப் பற்றி தெரிந்து கொண்டார்கள். ஆனாலும் தன்னுடைய ஆசைக்காக இப்படி பெத்த மகனை தவிக்க விட்டுப் போனது நியாயமே இல்லை என்று முத்து கோபப்படுகிறார். இதை மறைந்து நின்னு கேட்கும் ரோகிணி எரிச்சலுடன் இருக்கிறார்.

அடுத்து முத்துவை சமாதானப்படுத்தி மீனா கேக் கட் பண்ணுவதற்காக கூட்டு போகிறார். பிறகு க்ரிஷ் உடன் சேர்ந்து முத்து மீனா கேக் கட் பண்ணுகிறார்கள். இதை வெளியில் இருந்து வேடிக்கை பார்க்கும் ரோகினிக்கு ரொம்பவே கவலையாக இருக்கிறது. தன் மகனின் பிறந்தநாளை கொண்டாடி அவனை சந்தோஷப்படுத்த வேண்டும் என்று ஆசை ஆசையாக வந்த கல்யாணிக்கு பெருத்த ஏமாற்றத்தை முத்து கொடுத்து விட்டார்.

நாலா பக்கமும் அடிவாங்கும் ரோகிணி

அதே மாதிரி க்ரிஷுக்கும் அம்மாவுடன் சேர்ந்து கேக் கட் பண்ணி இந்த பிறந்த நாளை சந்தோஷமாக வேண்டும் என்ற ஆசையுடன் இருந்தார். ஆனால் அதை அனைத்தையும் சொதப்பும் விதமாக முத்து மீனா குட்டையை குழப்பி விட்டார்கள். போதாததற்கு கிரிஷை தத்தெடுத்துக் கொள்ளலாம் என்று முத்து மீனா இருவரும் ஆசைப்படுகிறார்கள்.

அதனால் எடுத்த முடிவு சரிதானா என்று கோவிலுக்கு சென்று சாமி முன்னாடி சீட்டு குலுக்கி போட்டு பார்க்கிறார்கள். அதில் சாமி வேண்டாம் என்று சொல்லும் அளவிற்கு ஒரு பதிலை கொடுக்கிறது. இதை எதிர்பார்க்காத மீனா கொஞ்சம் அப்செட் ஆகி விடுகிறார். பிறகு முத்து, வா பார்த்துக்கொள்ளலாம் என்று வீட்டிற்கு கூட்டிட்டு போகிறார்.

போனதும் கிரிஷ் பற்றிய விஷயங்களை சொல்கிறார். அப்பொழுது மனோஜ், இப்படியெல்லாமா ஒருத்தவங்க இருப்பாங்க. பெத்த பிள்ளையை விட்டுட்டு வேறொரு வாழ்க்கையை தேடி போனவங்க எல்லாம் ஒரு அம்மாவா என்று மனோஜ் திட்டுகிறார். இதை வெளியில் நின்னு ரோகிணி கேட்டுக்கொண்டு கஷ்டப்படுகிறார். இதனை தொடர்ந்து முத்து மீனா, கிரிஷை தத்தெடுக்கலாம் என்று நினைக்கிற ஆசையை வீட்டில் இருப்பவர்களிடம் சொல்லப் போகிறார்கள்.

இதை கேட்டதும் ரோகிணி வாழ்க்கையில் பெரிய பூகம்பமாக வெடிக்க போகிறது. ஆனாலும் மீனாவிற்கு வந்த இந்த ஆசை தேவையில்லாதது போல் தெரிகிறது. ஏனென்றால் ஏற்கனவே அந்த வீட்டில் மீனாவிற்கும் முத்துவுக்கும் மதிப்பும் மரியாதையும் இல்லை. இப்படி இருக்கும் பொழுது இவர்கள் கிரிஷை கூட்டிட்டு வந்தால் அவனுக்கும் நிம்மதி இல்லாத வாழ்க்கை தான் கிடைக்கும்.

இதற்கிடையில் விஜயா ஆசைப்பட்ட மாதிரி பார்வதி வீட்டில் நடன பயிற்சியில் கலந்து கொள்வதற்கு ஆட்கள் வந்து விடுகிறார்கள். அவர்களைப் பார்த்த சந்தோஷத்தில் விஜயா தோழிக்கு நன்றி சொல்கிறார். ஆனால் இதில் ஒரு பிரச்சனை வரும் விதமாக நடன கற்றுக் கொள்வதற்கு வந்த ஒரு பெண் கிளாசுக்கு உள்ளே போகாமல் வெளியே வேறு ஒருவருடன் போவதற்கு தயாராக இருக்கிறார்.

இதனால் விஜயா நடத்தும் நடன பயிற்சிக்கு பிரச்சனை வருவதற்கும் அதன் மூலம் விஜயா சிக்கலில் மாட்டிக்கொள்ளவும் வாய்ப்பு இருக்கிறது.

சிறகடிக்கும் ஆசை சீரியலில் நடந்த சம்பவங்கள்

Trending News