Sirakadikkum Asai Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற சிறகடிக்கும் ஆசை சீரியலில், முத்து மற்றும் மீனா கிரிஷை தத்தெடுக்கும் விதமாக கோவிலில் சீட்டு போட்டு பார்த்தார்கள். ஆனால் சாமி கொடுத்த பதில் வேண்டாம் என்றுதான். இருந்தாலும் முத்து இதெல்லாம் தாண்டி கிரிஷை தத்தெடுக்கலாம் என்று முடிவு பண்ணி விட்டார். எந்த காரணத்தை கொண்டும் ஒரு நல்ல காரியத்தை தள்ளிப் போடக்கூடாது என்பதற்கு ஏற்ப வீட்டில் இருப்பவர்களிடம் இந்த விஷயத்தை பற்றி சொல்ல முடிவு பண்ணி விட்டார்.
அதன்படி மீனா கொஞ்சம் பொறுமையாக இருந்து பேசலாம் என்று சொல்கிறார். ஆனால் முத்து முதலில் நம்முடைய ஆசையை பற்றி சொல்லலாம். அதன் பிறகு முடிவு பண்ணிக்கலாம் என்று சொல்கிறார். அடுத்ததாக விஜயா பரதநாட்டியம் நடத்தும் ஸ்கூலில் கிட்டத்தட்ட ஆறு பேர் படிப்பதற்காக வந்து விட்டார்கள். அதில் இரண்டு பேர் சும்மா டைம் பாஸுக்காக அந்த இடத்தை பயன்படுத்திக் கொள்கிறார்கள்.
முதல் வாரிசை கொடுக்க போகும் ரோகிணி
அந்த வகையில் அதில் ஒரு பையன் விஜயாவை ஐஸ் வைத்து ரொம்பவே நம்ப வைக்கிறார். விஜயாவும் அந்த பையனை நம்பி வீட்டுக்கு கூட்டி வருகிறார். அந்த பையனும் மாஸ்டர் மாஸ்டர் என்று விஜயாவை ஐஸ் வைக்கிறார். இதெல்லாம் பார்த்த முத்து கிண்டல் அடித்து பேசுகிறார். அப்பொழுது வழக்கம் போல் மனோஜ், முத்துவை நக்கல் அடிக்க, மீனா திருப்பி பதிலடி கொடுக்க இப்படி பேச்சுவார்த்தை போய்க்கொண்டிருக்கிறது.
பிறகு அனைவரும் அவங்கவங்க வேலையை பார்க்க போய் விட்டார்கள். அதன்படி வீட்டிற்கு திரும்பிய நிலையில் அண்ணாமலையிடம் தத்தெடுக்கும் விஷயத்தை சொல்லலாம் என்று முத்து வீட்டில் இருப்பவர்கள் அனைவரையும் கூப்பிடுகிறார். அப்பொழுது விஜயா வந்த நிலையில் க்ரிஷ் அம்மாவை பற்றி சொல்கிறார். இதை எல்லாம் வெளியில் நின்னு ரோகினி கேட்டுக் கொண்டிருக்கிறார்.
ஆனால் மனோஜ், க்ரிஷ் அம்மாவை பற்றி திட்டி அவமானப்படுத்தி பேசுகிறார். அடுத்ததாக முத்து, நானும் மீனாவும் கிரிஷை தத்தெடுத்து வளர்க்கலாம் என்று முடிவு பண்ணி விட்டோம். இதைப் பற்றி உங்களிடம் சொல்லலாம் என்று தான் கூப்பிட்டேன் என்று சொல்கிறார். உடனே விஜயா ஏன் உங்களால குழந்தை பெத்துக்க முடியாதா? ஏன் யாரோ பெத்த குழந்தையை நீங்க எடுத்து வளர்க்கணும்.
இது என்ன சத்திரமா வீடா, உங்க இஷ்டத்துக்கு எல்லாம் முடிவு பண்றீங்க என்று திட்டுகிறார். பிறகு ரோகிணி வந்த நிலையில் முதலில் முத்து மீனா எடுத்த முடிவு தவறு என்பது மாதிரி பேசுகிறார். ஆனால் இதைப் பற்றி அம்மா மற்றும் தோழியிடம் ரோகிணி டிஸ்கஸ் பண்ணுகிறார். அப்புறம் அவர்கள் கொடுத்த ஐடியாவின் பேரில் முத்து மீனாவிற்கு சம்மதம் தெரிவிக்கப் போகிறார்.
ஏனென்றால் முத்து மீனா குழந்தையை நல்லபடியாக பார்த்து வளர்த்துக் கொள்வார்கள். அத்துடன் க்ரிஷ் வீட்டிற்கு வந்துவிட்டால் தினமும் பார்த்து பேசிக் கொள்ளலாம் என்று ரோகினி தத்தெடுக்க சம்மதம் கொடுக்கப் போகிறார். இந்த சூழ்நிலையில் விஜயாவின் ஆசை மருமகளாக இருக்கும் ரோகினி அம்மாவாக போகிறார். இதைக் கேள்விப்பட்ட மனோஜ் ரொம்பவே சந்தோஷப்பட்டு கொள்வார்.
ஏனென்றால் ஒரு பக்கம் குழந்தை என்றாலும் இன்னொரு பக்கம் பாட்டி, முதல் வாரிசுக்கு சொத்துக்களை கொடுப்பதாக சொல்லி இருக்கிறார். அந்த வகையில் கிரிஷ் கண்ணு முன்னாடியே இன்னொரு குழந்தையை ரோகிணி நல்லபடியாக பார்த்துக் கொள்வது போல் காட்சிகள் வரப்போகிறது.
சிறகடிக்கும் ஆசை சீரியலில் நடந்த சம்பவங்கள்
- ரோகிணி மேல் சந்தேகப்படும் மனோஜ்
- முத்துக்கு பணத்தை கொடுக்காமல் டிமிக்கி கொடுக்கும் மனோஜ்
- மனோஜ்க்கு வார்னிங் கொடுத்த ஜீவா