ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 22, 2024

அஜித்தை இயக்க ஆசைப்பட்ட ஷங்கர்.. வாய்ப்பை ரிஜெக்ட் செய்து ஏ கே சொன்ன அதிர்ச்சி காரணம்

Ajith: இப்போதெல்லாம் கதை முக்கியமோ இல்லையோ படம் பிரமாண்டமாக இருக்க வேண்டும் என்பது ஒரு விதியாக இருக்கிறது. அதனாலயே இயக்குனர்கள் தயாரிப்பாளரை பற்றி கவலைப்படாமல் அதிக பட்ஜெட்டில் படம் எடுத்து வருகின்றனர்.

ஆனால் இவர்களுக்கெல்லாம் முன்னோடியாக இருந்தவர்தான் பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர். இவருடன் ஒரு படத்திலாவது இணைந்து விட வேண்டும் என்பது பல முன்னணி ஹீரோக்களின் கனவாக இருந்தது.

ஆனால் அஜித் மட்டும் இவருடன் இணைய விரும்பவில்லை. இதற்கு முக்கியமான ஒரு காரணமும் இருக்கிறது. சில வருடங்களுக்கு முன்பு ஷங்கர் அஜித்தை வைத்து படம் இயக்க ஆசைப்பட்டு அவரிடம் போன் செய்து கேட்டிருக்கிறார்.

ஆனால் அவரோ நாம் இப்பொழுது இருக்கிற மாதிரி நண்பர்களாகவே இருப்போம். படத்தில் இணைவதெல்லாம் சரிப்பட்டு வராது என்று கூறியிருக்கிறார் ஏனென்றால் ஷங்கர் தன் ஹீரோக்கள் இப்படித்தான் இருக்க வேண்டும் என்ற வரைமுறை வைத்திருப்பார்.

அஜித்தின் பல வருட கொள்கை

அதற்காக நடிகர்கள் கடின உழைப்பை கொடுக்க வேண்டியது இருக்கும். இதெல்லாம் எனக்கு செட்டாகாது என்று அஜித் ஷங்கரிடம் சொன்னாராம். உண்மையில் அஜித் தனக்கு ஏற்ற மாதிரி இயக்குனர்களை மட்டுமே கமிட் செய்வார்.

ஏனென்றால் தமிழ் ஹீரோக்களை பொறுத்தவரையில் இவருக்கு கொஞ்சம் ஈகோ அதிகம். இப்படித்தான் இருப்பேன் என்ற கொள்கையுடையவர். அதேபோல் தான் ஷங்கரும் இருப்பார்.

அதனாலயே இவர்கள் இருவரும் தற்போது வரை இணையவில்லை. ஆனால் இவர்கள் இருவரும் சேர்ந்து படம் பண்ணப் போகிறார்கள் என ஏகப்பட்ட செய்திகள் வந்தது. ஆனால் அது அத்தனையும் வதந்தி தான். இனிமேல் இவர்கள் இருவரும் இணைவதற்கான வாய்ப்பு கூட குறைவுதான்.

ஷங்கர் படத்துக்கு நோ சொன்ன அஜித்

Trending News