புதன்கிழமை, ஜனவரி 15, 2025

ரேஞ்சே வேற அதர்வா கூடலாம் நோ சான்ஸ்.. சிக்கிய டைனோசருக்காக குழந்தை ஹீரோயின் செய்த சூழ்ச்சி சேட்டை

நம்ம பக்கம் காற்றடிக்கும் போதே காரியத்தை கச்சிதமாக செயல்படுத்திவிடனும்னு வளரும்போதே வந்த பெரிய வாய்ப்பை கன கச்சிதமாக சுருட்டியுள்ளார் இளம் ஹீரோயின். அதற்காக அவர் செய்த சேட்டைகள் ஒன்றல்ல இரண்டல்ல, அதர்வா கூட கமிட்டாகிருக்கும் ஒரு படத்தையே சூழ்ச்சி செய்து நிராகரித்துள்ளார்.

விக்னேஷ் சிவனிடம் வேலை பார்த்த உதவி இயக்குனர் ஆகாஷ் பாஸ்கரன். இவர் அதர்வாவை வைத்து ஒரு படம் இயக்க திட்டமிட்டு இருந்தார். அதற்காக ப்ரேமலு பட ஹீரோயின் மம்தா பைஜ்லுவை கமிட் செய்திருந்தார். படம் முழுக்க முழுக்க அமெரிக்காவில் நடப்பதால் எல்லோருக்கும் பாஸ்போட், விசா வேலைகளில் மும்மரமாக இருந்திருக்கிறார் இயக்குனர் ஆகாஷ்

அப்படி ஹீரோ, ஹீரோயின் படக்குழு என எல்லோருக்கும் டிராவல் ட்ரிப் அரேஞ்ச் பண்ணி உள்ளனர். இன்னும் ஓரிரு நாட்களில் அமெரிக்கா கிளம்பும் நேரத்தில், ஹீரோயின் மம்தா பைஜ்லு போன் சுவிட்ச் ஆஃப். அவர் ஏதோ ஒரு படத்திற்காக ஊட்டி சென்று இருக்கிறாராம். அதனால் தற்சமயம் இந்த படத்தில் நடிக்க முடியாது என மம்தாவின் வட்டாரங்கள் அலைக்கழித்துள்ளனர்.

சிக்கிய டைனோசருக்காக ஹீரோயின் செய்த சேட்டை

ஒரு கட்டத்தில் ஏன் இப்படி செய்கிறார் என்று அலசி பார்த்தால் அவருக்கு இதைவிட ஒரு பெரிய படம் கிடைத்துள்ளதாம். அதனால் அதர்வா படத்தை விட அதுதான் முக்கியம் என்று அதற்கு ரெடியாகி விட்டாராம். இவர் கமிட்டான படம் தான் அனைவருக்கும் பெரும் அதிர்ச்சியை அளித்துள்ளது கிளப்பியுள்ளது.

மம்தா பஜுலு விஜய் 69 படத்தில் கமிட்டாகி இருக்கிறார். ஆனால் ஹீரோயின் ஆக இல்லை படத்தில் இவருக்கு விஜய்யின் மகளோ, அல்லது தங்கை கதாபாத்திரத்தில் நடிக்க வாய்ப்பு வந்திருக்கிறதாம். இதனால் அதுதான் முக்கியம் என அதர்வா படத்தை தட்டிக் கழித்து விட்டார். இப்பொழுது திமிங்கலம் இல்லை டைனோசருக்கே ரூட் போட்டு விட்டார்.

Trending News