Veetuku Veedu Vasapadi: விஜய் டிவியின் வீட்டுக்கு வீடு வாசப்படி சீரியலில் பல்லவியின் ஆட்டம் நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டே இருக்கிறது. ஏதாவது ஒரு பிரச்சனையை கிளப்பி விட்டு குளிர்காயும் இவர் புது பஞ்சாயத்தை ஆரம்பித்துள்ளார்.
என்ன பிரச்சனை செய்யலாம் என காத்திருந்தவருக்கு பிரியா மூலம் புது ரூட் கிடைத்துள்ளது. நட்ட நடு ராத்திரியில் யாருக்கும் தெரியாமல் அவருடைய ஃப்ரெண்ட் சரவணன் திடீரென வீட்டுக்குள் நுழைந்து பிரியாவை பார்க்க வருகிறார்.
அந்த நேரத்தில் பல்லவி தண்ணீர் எடுக்க வரும்போது இந்த காட்சி கண்ணில் சிக்கி விடுகிறது. சும்மாவே ஆடுபவர் காலில் சலங்கை கட்டியது போல் பல்லவி இதனால் குதூகலமாகி விடுகிறார்.
பல்லவியால் குடும்பத்தில் வெடித்த பிரச்சினை
தன்னை அவமானப்படுத்திய பிரியாவை குடும்பத்தில் மாட்டி விட வேண்டும் என திட்டம் போட்டு திருடன் திருடன் என கத்த ஆரம்பிக்கிறார். உடனே வீட்டில் இருக்கும் அனைவரும் பிரியாவின் ரூமுக்கு வந்து விடுகின்றனர்.
இதனால் பிரியா சரவணனை மறைத்து வைக்கிறார். ஆனாலும் பல்லவி அதை கண்டுபிடித்து போட்டு கொடுத்து விடுகிறார். இதனால் உச்சகட்ட அதிர்ச்சி அடையும் அர்ஜுனின் அப்பா ப்ரியாவை அடிப்பதோடு இன்றைய எபிசோட் முடிந்துள்ளது.
ஏற்கனவே கண்ணன் பிரச்சனை ஒரு பக்கம் போய்க்கொண்டிருக்க பிரியாவும் தன் பங்குக்கு ஏழரையை இழுத்து வைத்துள்ளார். இது பஞ்சாயத்தாக மாறும் நிலையில் பல்லவி நினைத்தது நடக்குமா என அடுத்தடுத்த எபிசோடுகளில் தெரியவரும்.
பிரியாவை திட்டம் போட்டு மாட்டி விடும் பல்லவி
- சன் டிவியை விட விஜய் டிவியில் சுவாரசியமாக போகும் 6 சீரியல்கள்
- இந்த வார டிஆர்பி ரேட்டிங்கில் கொடி கட்டி பறக்கும் விஜய் டிவி
- மொத்தமாய் தூக்கி எறியப்பட்ட விஜய் டிவியின் செல்லப்பிள்ளை