புதன்கிழமை, ஜனவரி 15, 2025

3வது முறை ஹாலிவுட் அவெஞ்சர்ஸ் ஆக கமிட்டான தனுஷ்.. பிரதர்ஸ் கூட்டணியில் இணைந்த ராயன்

Dhanush in Avengers Doomsday: தனுஷ் இயக்கி நடித்து வெளிவந்த ஐம்பதாவது படமான ராயன் அனைத்து திரையரங்களிலும் வெற்றி பெற்று வருகிறது. இதனை தொடர்ந்து தமிழ் மற்றும் தெலுங்கிலும் உருவாகி வருகின்ற குபேரா படத்திலும் நடித்து வருகிறார். இப்படத்தை சேகர் கம்முலா இயக்கி வருகிறார். அதே மாதிரி நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் படத்தை இயக்கியும் வருகிறார்.

இப்படி பிசியாக இருக்கும் தனுசுக்கு மூன்றாவது முறையாக ஹாலிவுட் படத்தில் நடிப்பதற்கு வாய்ப்பு கிடைத்திருக்கிறது. ஏற்கனவே ஹாலிவுட்டில் தி எக்ஸ்ட்ராடினரி ஜர்னி ஆஃப் தி ஃபகிர் மற்றும் தி கிரே மேன் படங்களில் நடித்திருக்கிறார்.

மூன்றாவது முறையாக ஹாலிவுட் படத்தில் தனுஷ்

தற்போது தனுஷ் நடிக்கும் மூன்றாவது ஹாலிவுட் படமாக ருஸ்ஸோ பிரதர்ஸ் (அந்தோனி ருஸ்ஸோ & ஜோ ருஸ்ஸோ) இயக்கும் அவெஞ்சர்ஸ் தி டூம்ஸ்டே(Avengers the doomsday) படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கப் போகிறார்.

அந்த வகையில் ஒட்டுமொத்தமாக அனைவராலும் ரசிக்கப்பட்டு பார்க்கப்பட்ட படங்களில் ஒன்று அவெஞ்சர்ஸ். அதில் கடைசியாக வெளிவந்த அவெஞ்சர்ஸ் எண்டுகேம் உலக அளவில் அதிக வசூல் செய்த படமாக மாறி வெற்றி பெற்றது. இப்படத்தில் Caption America, Iron Man, Spider Man, வில்லன் தெனோஸ் என Avengers:Endgame படத்தை மிரட்டலாக இயக்கி இருந்தனர் Russo brothers.

அதனால் மறுபடியும் Russo brothers கூட்டணியில் தனுஷ் Avengers the doomsday படத்தில் இணைந்திருக்கிறார். இதில் முக்கியமான கதாபாத்திரத்தில் தனுஷ் நடிக்கப் போவதாகவும் அது வில்லனாகவும் அல்லது ஹீரோவாகவும் நடிப்பதற்கான பேச்சு வார்த்தைகள் போய்க்கொண்டிருக்கிறது. தற்போது இந்த ஒரு விஷயம் தான் சோசியல் மீடியாவில் ட்ரெண்டாகி போய்க் கொண்டிருக்கிறது.

ஏனென்றால் தனுஷ் இதில் நடித்து விட்டால் தனுஷின் ரசிகர்களுக்கு மட்டுமின்றி தமிழ் சினிமா ரசிகர்கள் அனைவருக்கும் பெரிய சர்ப்ரைஸ் ஆக இருக்கும். அத்துடன் தமிழ் சினிமாவிற்கு பெருமை சேர்க்கும் வகையில் கண்டிப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஆரம்பத்தில் கேலிக்கும் கிண்டலுக்கும் ஆளான தனுஷ் தற்போது தமிழ் சினிமாவில் மட்டுமில்லாமல் ஹாலிவுட்டிலும் ஜெயித்துக் கொண்டே வருகிறார். இப்படிப்பட்ட படங்கள் நிச்சயம் தனுஷின் கேரியருக்கு ஒரு மைல் ஸ்டோன் ஆக அமையும்.

மொட்டை தலை ராயனாக ஜெயித்த தனுஷ்

Trending News