Samantha: கடந்த சில வருடங்களாகவே திரை உலகில் திருமணம், விவாகரத்து என்பது சர்வ சாதாரணமாகிவிட்டது. பிடித்தால் உடனே திருமணம் இல்லை என்றால் பிரிவு என்ற கலாச்சாரம் கோலிவுட்டில் தலை விரித்து ஆடுகிறது.
சமந்தாவில் ஆரம்பித்து இப்போது ஜிவி பிரகாஷ் வரை பலரும் விவாகரத்து செய்தியை வெளியிட்டுள்ளனர். அதில் சமந்தா நாகசைத்தன்யா பிரிவுதான் பெரும் பிரளயத்தை ஏற்படுத்தியது.
இது குறித்து பல்வேறு சர்ச்சை செய்திகளும் கிளம்பியது. ஆனால் சம்பந்தப்பட்ட இருவரும் அதை எல்லாம் ஓரம் கட்டி நடிப்பில் கவனம் செலுத்தி வந்தனர். இந்நிலையில் நாகசைத்தன்யா தற்போது இரண்டாவது திருமணத்திற்கு தயாராகி விட்டதாக செய்திகள் கசிந்துள்ளது.
ரகசியமாக நடக்கும் நாகசைத்தன்யா நிச்சயதார்த்தம்
ஏற்கனவே இவர் பொன்னியின் செல்வன் புகழ் சோபிதாவை டேட்டிங் செய்து வருவதாக கூறப்பட்டது. அதை நிரூபிக்கும் வகையில் இருவரும் ஒன்றாக இருக்கும் புகைப்படங்களும் அவ்வப்போது வெளியானது. அதற்கு அவர்கள் எந்த விளக்கமும் அளிக்கவில்லை.
இந்த சூழலில் இருவருக்கும் நாகசைத்தன்யா தனியாக வீட்டில் வைத்து எளிமையாக இன்று நிச்சயதார்த்தம் நடைபெற இருக்கிறது. இந்த செய்தி தான் இப்போது வைரலாகி வருகிறது. இதில் முக்கிய ட்விஸ்ட் ஒன்றும் இருக்கிறது.
அதாவது இதே நாளில் தான் நாகசைத்தன்யா சமந்தாவிடம் தன் காதலை சொல்லி இருக்கிறார். அதனால் தான் தன்னுடைய அடுத்த திருமண நிச்சயதார்த்தத்தையும் அவர் இதே நாளில் நடத்த திட்டமிட்டாராம்.
விரைவில் இவர்களுடைய நிச்சயதார்த்த புகைப்படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. சமந்தா மீண்டும் தன் கணவருடன் எப்படியாவது சேர்ந்து விடுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இந்த செய்தி அவரின் ரசிகர்களுக்கு அதிர்ச்சி தான். இருந்தாலும் இந்த ஜோடிக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.
2வது திருமணத்திற்கு தயாரான நாகாசைத்தன்யா
- சொந்த செலவில் சூனியம் வைத்த சமந்தா
- தனுஷ், சமந்தா கூட்டணியில் ஒரு மாதமா உருவான படம்
- சமந்தா மாதிரி மார்க்கெட்டை இழக்கும் பகத் பாசில்