Sirakadikkum Asai Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற சிறகடிக்கும் ஆசை சீரியலில், மீனாவின் தங்கை சீதா ஆஸ்பத்திரியில் வேலை பார்ப்பதற்காக மீனாவை கூட்டிட்டு இன்டர்வியூ போயிருக்கிறார். அதே ஆஸ்பத்திரியில் ரோகினி, தோழியை கூட்டிட்டு செக்கப்புக்காக வந்திருக்கிறார். போன இடத்தில் ரோகினி புலம்புகிறார். நான் சீக்கிரத்தில் ஒரு குழந்தை பெற்றால் தான் மனோஜ் மற்றும் அந்த குடும்பத்தில் இருந்து தப்பிக்க முடியும்.
அதற்கு எனக்கும் மனோஜுக்கும் சேர்ந்து ஒரு குழந்தை வேண்டும். அதனால் என்ன காரணத்திற்காக இன்னும் தள்ளிப் போய்க் கொண்டிருக்கிறது என்பதை செக் பண்ணி பார்த்துவிடலாம் என்று முடிவு பண்ணி இருக்கிறேன் என்று சொல்கிறார். அதற்கு ரோகிணியின் தோழி, உனக்கு தான் குழந்தை பெறுவதற்கு எல்லா தகுதியும் உண்டு. ஏனென்றால் ஏற்கனவே நீ குழந்தை பெற்றவள் தானே என்று சொல்கிறார்.
ரோகிணி எஸ்கேப்பாக பலிகாடாக சிக்கும் மனோஜ்
அப்பொழுது ரோகினி மெதுவாக பேசு தெரிந்தவர்கள் யாராவது கேட்டிடப்போகிறார்கள் என்று திட்டுகிறார். பிறகு ரோகிணி நினைத்தபடி செக்கப்பில் எந்த பிரச்சினையும் இல்லை. குழந்தை பிறப்பதற்கான வாய்ப்பு இருக்கிறது என்று மருத்துவர் சொல்லிவிட்டார். ஆனால் இவர்கள் அங்கு வந்திருப்பதை சீதா பார்த்து மீனாவிடம் போன் பண்ணி சொல்லுகிறார். அத்துடன் எனக்கு இதே ஆஸ்பத்திரியில் வேலை கிடைத்து விட்டது என்பதையும் சொல்கிறார்.
இதைக் கேட்ட மீனா, டபுள் சந்தோஷமான விஷயத்தை சொல்லி இருக்கிறாய். ஒன்று வேலை கிடைத்தது இன்னொன்று ரோகிணி கர்ப்பமாக இருப்பார் அதனால்தான் செக்கப்புக்கு வந்திருப்பார் என்று அரைகுறையாக புரிந்து கொண்டு சந்தோஷப்பட்டு கொண்டார். இந்த விஷயத்தை வீட்டில் இருப்பவர்களிடம் சர்ப்ரைஸ் ஆக சொல்ல வேண்டும் என்று மீனா அனைவருக்கும் கேசரி பண்ணி கொடுக்கிறார்.
அப்பொழுது அண்ணாமலை, மீனாவின் தங்கை ஃபர்ஸ்ட் கிளாஸ் பாஸ் பண்ணி இருப்பதால் மீனா கேசரி பண்ணி இருக்கிறார் என்று எல்லோரிடமும் சொல்கிறார். அதற்கு மீனா அதற்காக நான் பண்ணவில்லை. ரோகிணி ஆஸ்பத்திரிக்கு போய் கன்ஃபார்ம் பண்ணிட்டு வந்திருக்காங்க. அவங்க கர்ப்பமாக இருக்கிறார் அதை சந்தோஷத்துடன் கொண்டாட வேண்டும் என்பதற்காகத்தான் கேசரி பண்ணினேன் என்று சொல்கிறார்.
உடனே ரோகிணி, நான் அதற்காக போகவில்லை சாதாரண ஒரு செக்கப் தான் போயிட்டு வந்தேன் என்று சொல்கிறார். உடனே விஜயா, இந்த மீனாவுக்கு முந்திரிக்கொட்டை மாதிரி ஏதாவது ஒரு விஷயத்துல முந்துவதையே வேலையா போச்சு என்று திட்டுகிறார். அடுத்ததாக ரோகிணி மற்றும் மனோஜ் இருவரும் பேசிக் கொள்கிறார்கள். அப்பொழுது எனக்கு எந்த பிரச்சினையும் இல்லை என்று டாக்டர் சொல்லிவிட்டார்கள்.
அதனால் நீ நாளைக்கு என்னுடன் ஆஸ்பத்திரிக்கு வா, உன்னையும் செக்கப் பண்ணி பார்த்திடலாம் என்று சொல்கிறார். இதை கேட்டதும் மனோஜ் தடுமாறி கோபப்பட்டு அதெல்லாம் ஒன்னும் தேவையில்லை வேண்டாம் என்று மறுப்பு தெரிவிக்கிறார். அதற்கு ரோகிணி, நீ ஏன் வரமாட்டேன் என்று சொல்கிறாய். ஜீவா உடன் லிவ்விங் ரிலேஷன்ஷிப்பில் இருந்தியா என்று குதர்க்கமான கேள்வியை கேட்டு மனோஜை தடுமாற வைக்கிறார்.
அதற்கு மனோஜ் அப்படி எல்லாம் ஒன்னும் இல்லை, இப்ப என்ன அவசரம் அவசியம் வந்துச்சு இதுக்கெல்லாம். அது வர வேண்டிய நேரத்துல எல்லாம் தானா நடக்கும் என்று சொல்கிறார். ஆனால் ரோகிணி விடாப்பிடியாக இந்த விஷயத்தில் இருப்பதால் மனோஜை வற்புறுத்தி கூப்பிடுகிறார். ஆக மொத்தத்தில் கிரிஷ் விஷயம் வீட்டில் தெரிவதற்கு முன் மனோஜ் மூலமாக ஒரு குழந்தை பிறந்து விட வேண்டும்.
அதுதான் தன்னுடைய வாழ்க்கைக்கு ஒரு பிடிமானமாக இருக்கும் என்று ரோகிணி நினைக்கிறார். இதனைத் தொடர்ந்து சின்ன சின்ன விஷயங்களில் ரோகிணி மாட்டிக்கொண்டு கூடிய சீக்கிரத்தில் கையும் களவுமாக பிடிபட போகிறார். ஏனென்றால் மீனாவின் தங்கை சீதாவும் அதே ஆஸ்பத்திரியில் தான் வேலை பார்க்கப் போகிறார். அதனால் அதன் மூலமாக ரோகிணி பற்றிய விஷயங்கள் மீனா மற்றும் முத்துக்கு தெரிய வரலாம்.
சிறகடிக்கும் ஆசை சீரியலில் நடந்த சம்பவங்கள்
- கிரிஷ் பிறந்தநாளுக்கு போகும் மீனா முத்து
- விஜயாவிடம் இருந்து தப்பித்த ரோகிணி, க்ரிஷ் மூலம் வரும் சந்தேகம்
- மனோஜை ஏமாற்ற மொட்டை கடிதாசி போட்ட கடையாட்கள்