Veetuku Veedu Vaasapadi: விஜய் டிவியின் வீட்டுக்கு வீடு வாசப்படி சீரியலில் பிரியாவுக்கு அவசர கல்யாணம் ஏற்பாடு ஆகி வருகிறது. சரவணன் தேவையில்லாமல் அர்த்த ராத்திரியில் வீட்டுக்குள் வந்ததன் விளைவு இப்போது பிரியா தலையில் விழுந்துள்ளது.
இன்றைய எபிசோடில் பிரியா தனக்கு கல்யாணம் வேண்டாம் என அர்ஜுனிடம் அழுது கெஞ்சுகிறார். அதையும் மீறி திருமணம் செய்து வைத்தால் ஓடிப் போய் விடுவேன் என்றும் மிரட்டுகிறார்.
ஆனால் அர்ஜுன் உடனே கல்யாணம் நடந்து விடாது. இன்னும் எவ்வளவோ விஷயங்கள் இருக்கு அதற்குள் எப்படி வேண்டுமானாலும் மாறலாம் என தங்கையை சமாதானப்படுத்துகிறார். அதை தொடர்ந்து அடுத்தடுத்த சம்பவங்கள் விறுவிறுப்பாக நடக்கிறது.
பிரியாவுக்கு நடக்கும் அவசர கல்யாணம்
பல்லவியின் ஏற்பாட்டின் படி ப்ரோக்கர் எல்லா கெட்ட பழக்கத்தையும் வைத்திருக்கும் சிவாவின் ஜாதகத்தையும் போட்டோவையும் கொண்டு வந்து காட்டுகிறார். அப்போது கண்ணன் மட்டும் மாப்பிள்ளைக்கு கெட்ட பழக்கம் இருக்கா? காதல் இருக்கா? என கேள்வி கேட்டு புரோக்கரை திணற வைக்கிறார்.
இதனால் பல்லவி எங்க மாட்டிக்கொள்வோமோ என முழித்தபடி இருக்கிறார். அர்ஜுனும் இதற்கு சப்போர்ட்டாக இருக்கும் நிலையில் விரைவில் பல்லவியின் நரி தந்திரம் வெளியில் வந்துவிடும் என தெரிகிறது.
இதற்கிடையில் சரவணன் பிரியாவிடம் மன்னிப்பு கேட்க போன் போடுகிறார். அப்பொழுது இந்த அவசர திருமண ஏற்பாடும் தெரிய வருகிறது. தன் காதலை காப்பாற்றிக் கொள்ள சரவணன் போராடுவாரா? பல்லவி எண் பித்தலாட்டம் உடையுமா? அர்ஜுன் பிரியாவை காப்பாற்றுவாரா? என்பது போன்ற பல திருப்பங்கள் சீரியலில் அடுத்தடுத்து நிகழ இருக்கிறது.
பல்லவியின் சதித்திட்டத்தை கண்டு கொள்வாரா அர்ஜுன்.?
- அவசரமாக நடக்கும் கல்யாண ஏற்பாடு
- பல்லவிக்கு ரூட் போட்டு கொடுத்து சிக்கிய பிரியா
- பல்லவிக்கு மூக்கனாங்கயிறு போட்டு கொட்டத்தை அடக்கும் கண்ணன்