Bigg Boss 8: கடந்த 2017 ஆம் ஆண்டிலிருந்து பிக் பாஸ் நிகழ்ச்சி என்றால் கமலஹாசன் தான் என நம் மனதில் பதிந்து விட்டது.
அப்படி இருக்கும்போது கமல் இந்த நிகழ்ச்சியில் இருந்து விலகியதை மக்கள் எந்த அளவுக்கு ஏற்றுக் கொள்வார்கள் என்பது எல்லோருக்குமே புரியாத புதிர் தான். அது மட்டும் இல்லாமல் கமல் இடத்தை இன்னொருவர் நிரப்ப வேண்டும் என்பது சாத்தியமா என எல்லோருக்குமே சந்தேகம் இருக்கத்தான் செய்கிறது.
கமல் என்று இல்லை சீரியல், ரியாலிட்டி ஷோக்களில் கூட ஒருத்தருக்கு பதிலாக இன்னொருவர் வரும்பொழுது அதை ஏற்றுக் கொள்வது என்பது கடினமாக இருக்கும். சனி ஞாயிறு என்றால் கமலஹாசன் வந்து பேசுவதை கடந்த ஏழு ஆண்டுகளாக நாம் பார்த்து பழகி விட்டோம்.
பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க வேண்டும் என்ற ஆசை இருந்தாலும் கமலின் இடத்தை நிரப்ப முடியாது என்பதால் கண்டிப்பாக எந்த நடிகர்களும் தயங்குவார்கள். விஜய் டிவிக்கு தான் இது பெரிய போராட்ட காலம்.
மக்களால் கணிக்கப்பட்ட நடிகர்கள்
கமலுக்கு பதிலாக ஒருத்தரை கொண்டு வந்து அவரை மக்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பது இமாலய விஷயம் தான். ஏற்கனவே பிக் பாஸ் அல்டிமேட் ஷோவை சிம்பு தொகுத்து வழங்கியிருப்பதால் இனி பிக் பாஸ் நிகழ்ச்சியையும் அவர் தொகுத்து வழங்க வாய்ப்பிருப்பதாக சொல்லப்பட்டது.
அதை தொடர்ந்து பிரகாஷ்ராஜ், சூர்யா, சரத்குமார் என பலரது பெயர்களும் அடிபட்டது. ஒரு கட்டத்தில் பார்த்திபன் தான் பிக் பாஸ் ஷோவை தொகுத்து வழங்க இருக்கிறார் என உறுதியாகவும் சொல்லப்பட்டது.
நடிகர்கள் மட்டும் ஏன், நடிகைகள் கூட தொகுத்து வழங்க வாய்ப்பு இருக்கிறது ரம்யா கிருஷ்ணன், நயன்தாரா என நடிகைகளின் லிஸ்ட் நீண்டது. தற்போது இந்த வதந்திகளுக்கு எல்லாம். வைக்கும் விதமாக ஒரு செய்தி வெளியாகி இருக்கிறது.
அதாவது அடுத்த பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவதற்கு விஜய் டிவி ஒரு நடிகரை லாக் செய்து விட்டதாகவும், அவர் விஜய் டிவியின் ஒப்பந்த பத்திரத்திலேயே கையெழுத்து போட்டு விட்டதாகவும் செய்தி வெளியாகியிருக்கிறது.
வசூல் நாயகனை லாக் செய்த சேனல்
சமீபத்தில் மகாராஜா படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களை மிரளவைத்த விஜய் சேதுபதி தான் அந்த நடிகர். விஜய் சேதுபதி ஏற்கனவே விஜய் டிவியில் பல நிகழ்ச்சிகளில் சிறப்பு விருந்தினராக வந்திருக்கிறார். மக்களுடன் சகஜமாக பழகக் கூடியவர்.
பிக் பாஸ் சீசன் 8
இருந்தாலும் இவரை கமலிடத்தில் வைத்து மக்கள் பார்ப்பார்கள் என்பது கொஞ்சம் சந்தேகம்தான். அதுமட்டுமில்லாமல் விஜய் சேதுபதி ரொம்பவே யதார்த்தமானவர். அவருக்கு இந்த டிஆர்பி கன்டென்ட் எல்லாம் செட் ஆகுமா என்பது சந்தேகம்தான்.
பிக் பாஸ் நிகழ்ச்சியின் எட்டாவது சீசன் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானால்தான் விஜய் சேதுபதி தொகுத்து வழங்குவது பற்றியும் உறுதியான தகவல் தெரியும்.
எது எப்படியோ என்னதான் கமலஹாசனை கடந்த ஏழு வருடங்களாக திட்டி தீத்திருந்தாலும், அவர் பிக் பாஸில் இல்லாத பெருமை கண்டிப்பாக ரசிகர்களுக்கு ஏற்படும்.
ஆண்டவரை எலிமினேட் செய்த விஜய் டிவி
- கமல், சிம்புவை நம்பி மோசம் போன சூப்பர் ஹிட் பட இயக்குனர்
- பிக் பாஸில் இருந்து விலகுகிறேன், அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்ட கமல்
- இந்தியன் 2 ஓடிடி ரிலீசில் நெட்பிலிக்ஸ் செய்த அநியாயம்