Sirakadikkum Asai Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற சிறகடிக்கும் ஆசை சீரியலில், மீனாவை பொருத்தவரை தினமும் வீட்டில் இருப்பவர்களிடம் அவமானப்படவில்லை என்றால் தூக்கமே வராது. அதனால் தேடி போயாவது ஏதாவது பிரச்சனையில் மாட்டிக்கொண்டு வீண் வம்பை இழுத்து அதில் அசிங்கப்படுவதை வேலையாக போச்சு. அப்படித்தான் ரோகிணி ஆஸ்பத்திரிக்கு செக்கப் வந்ததை கர்ப்பமாக இருக்கிறார் என்பது போல் மீனா தவறாக புரிந்து கொண்டார்.
புரிந்ததோடு மட்டுமில்லாமல் வீட்டுக்கு வந்து அனைவருக்கும் சர்ப்ரைஸ் ஆக ஒரு ஹேப்பி நியூஸ் சொல்லும் விதமாக கேசரி செய்து அதை அனைவருக்கும் கொடுக்கிறார். பிறகு எல்லோரும் என்ன என்று கேட்கும் பொழுது ரோகிணி கர்ப்பமாக இருக்கிறார் செக்கப்புக்காக ஆஸ்பத்திரிக்கு போனாரு என்று மீனா சொல்கிறார். இதை கேட்டதும் அனைவரும் சந்தோஷப்பட்டு ரோகினிக்கு வாழ்த்துக்கள் சொல்ல ஆரம்பித்து விட்டார்கள்.
விஜயாவிடம் ரோகிணியை போட்டுக் கொடுத்த மனோஜ்
ஆனால் விஜயா மட்டும், நீ அம்மாவாக போகிற விஷயத்தை முதலில் என்கிட்ட தானே சொல்லி இருக்கணும். ஏன் சொல்லாமல் மறைத்தாய் என்று கோபமாக கேட்கிறார். அதற்கு ரோகிணி, முதலில் கொஞ்சம் எல்லோரும் நிறுத்துங்கள். நான் கர்ப்பமாக இருக்கிறேன் என்று யார் சொன்னா. நான் சும்மா செக்கப்காகப் போனேன் என்று சொல்லி மீனாவை கோபத்துடன் திட்டுகிறார்.
உங்களுக்கு ஒரு வேலையே இல்லையா, ஏதாவது ஒரு விஷயத்தை அரைகுறையாக புரிந்து கொண்டு நீங்களா ஒரு முடிவு பண்ணி விடுவீங்களா? எதுவாக இருந்தாலும் முதலில் நீங்கள் என்னிடம் தானே கேட்டிருக்கணும், அதை விட்டுட்டு நீங்களா ஏதாவது யோசித்து சொல்ல, இப்ப வீட்டில் இருப்பவர்களுக்கு ஒரு தர்ம சங்கடமாக போய்விட்டது. அத்துடன் என்னையும் ஒரு இக்கட்டான சூழ்நிலையில் தள்ளி விட்டீர்கள் என்று ரோகிணி கோபமாக திட்டி விடுகிறார்.
இதற்கு பதில் எதுவும் சொல்ல முடியாமல் மீனா மற்றும் முத்து வாயை மூடி கொள்கிறார்கள். அடுத்ததாக ரோகிணி, மனோஜிடம் குழந்தை பிறக்க வேண்டும் என்பதை ஆசையாக ஒவ்வொரு விஷயங்களையும் சொல்லி சந்தோஷப்படுகிறார். தற்போது என்னுடைய கனவில் குழந்தை பிறப்பது போல் அந்த குழந்தையை நாம் வளர்ப்பது போல் தான் வந்து கொண்டிருக்கிறது. உனக்கு அப்படி எதுவும் இல்லையா என்று கேட்கிறார்.
அதற்கு மனோஜ் நானும் தினமும் கனவு கண்டு கொள்வேன். ஆனால் நீ நினைக்கிற மாதிரி கனவு கிடையாது. நான் ஒரு கோடீஸ்வரனாக இருப்பது போல் கனவு காண்பேன் என்று பணத்தைப் பற்றி பேசுகிறார். இதைக் கேட்டு கோபப்பட்ட ரோகினி, உனக்கு எப்போதும் பணம் தான் பெரிதாக தெரிகிறதா? குழந்தை ஆசை இல்லையா என்று கேட்கிறார்.
அதற்கு மனோஜ் அதெல்லாம் தானாக நடக்கக்கூடிய விஷயம். அதுக்காக நம்ம உக்காந்து யோசித்துக் கொண்டிருக்கக் கூடாது என்று சொல்கிறார். உடனே ரோகினி நம் இருவரும் ஹாஸ்பிடல்ல போய் செக்கப் பண்ணலாம் என்று கூப்பிடுகிறார். அதற்கு மறுப்பு தெரிவிக்கும் மனோஜை ஜீவா உடன் வைத்து சந்தேகப்படும் படி பேசி விடுகிறார்.
உடனே மனோஜும், அப்படி என்றால் நீயும் கல்யாணத்துக்கு முன் இந்த மாதிரி ஏதாவது பண்ணி இருக்கியா என்று சந்தேகப்பட்டு கேள்வி கேட்கிறார். இதை கேட்டு அதிர்ச்சியில் கோபமான ரோகினி, மனோஜை திட்டி விடுகிறார். பிறகு மனோஜ் கவலையில் வெளியில் உட்கார்ந்து கொண்டிருக்கும் போது நடந்த விஷயத்தை விஜயாவிடம் சொல்கிறார். அதற்கு விஜயா,ரோகிணியை திட்டி எப்படி என் பிள்ளையை நீ இந்த மாதிரி கேள்வி கேட்டு அவனை கஷ்டப் படுத்தலாம்.
இதே மாதிரி நாங்க ரெண்டு பேரும் சேர்ந்து ஒன்று கேட்டால் உனக்கு வலிக்கும்ல? அதே மாதிரி தான் அவனுக்கும், இனி இவனிடம் இப்படி பேசுற வேலைய வச்சுக்காத என்று சொல்லி திட்டிவிட்டார். இதனை எடுத்து ரவி ஹோட்டலில் ஒரு போட்டி நிகழ்ச்சி நடக்கப் போகிறது.
அதில் கலந்து கொண்டு வின் பண்றவர்களுக்கு பணம் கிடைக்கப் போகிறது என்று சொல்கிறார். உடனே ரவி, முத்து மற்றும் மனோஜ் ஜோடிகளுடன் கலந்து கொள்ள போகிறார்கள். வழக்கம்போல் இதில் முத்து மற்றும் மீனா ஜெய்ப்பதற்கு வாய்ப்பு இருக்கிறது.
சிறகடிக்கும் ஆசை சீரியலில் நடந்த சம்பவங்கள்
- ஆஸ்பத்திரியில் ரோகிணி பேசியதை கேட்டு மீனாவிடம் போட்டுக் கொடுத்த சீதா
- முத்து மீனாவிற்கு சம்மதம் சொல்லும் கல்யாணி
- ரோகிணி மேல் சந்தேகப்படும் மனோஜ்