திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

நீலிக்கண்ணீர் வடித்த மருமகளை நம்பும் பாண்டியன்.. அல்லல்படும் செந்தில் கதிர், ஏமாறப்போகும் தங்கமயில்

Pandian Stores Serial 2: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில், சரவணனை உசுப்பேத்தி அதன் மூலம் தங்கமயில் சந்தோஷமாக இருக்க வேண்டும் என்று பாக்கியம் ஃபோன் பண்ணி என் பொண்ணுக்கு தான் விபரம் தெரியாது உங்க எல்லாத்துக்கும் விவரம் தெரியும்ல. அப்புறம் ஹோட்டல் புக் பண்ணனும்னு அது எல்லாம் நீங்கள் செக் பண்ணிக்கிட்டு பார்க்க வேண்டியது தானே.

அதை விட்டுவிட்டு இப்பொழுது என் பொண்ணு இப்படி வெளியே அசிங்கப்படுத்தும் அளவிற்கு அழவைத்து வேடிக்கை பார்க்கிறீர்கள் என்று மொத்த பழியையும் சரவணன் மீது தூக்கி போட்டு விட்டார். இதை கேட்டு கடுப்பான சரவணன் போனை கட் பண்ணி விடுகிறார். பிறகு தங்கமயிலின் அப்பா போன் பண்ணி உங்களுக்கு பணம் தான் பிரச்சனைனா என்றால் சொல்லுங்க இந்த நம்பருக்கு நான் 50,000 ரூபாய் போட்டு விடுகிறேன் என்று வெட்டியாக கெத்து காட்டுகிறார்.

மருமகளை நம்பி மகனை உதாசீனப்படுத்தும் பாண்டியன்

அதற்கு சரவணன் அதெல்லாம் ஒன்னும் வேண்டாம் நான் பார்த்து சமாளித்துக் கொள்கிறேன் என்று சொல்லி போனை வைக்கிறார். பிறகு செந்திலுக்கு போன் பண்ணி பார்க்கிறார். செந்தில் போன் எடுக்காததால் கதிருக்கு போன் பண்ணுகிறார். கதிர் எல்லா விஷயத்தையும் தெரிந்த பிறகு நான் ஏற்பாடு பண்ணி அனுப்புகிறேன் கொஞ்சம் பொறுமையாக இரு என்று சொல்கிறார்.

அடுத்து இந்த விஷயம் செந்திலுக்கு தெரிய வந்த பொழுது செந்திலும் சரவணனுக்கு ஃபோன் பண்ணி நான் பணம் ஏற்பாடு பண்ணி அனுப்புகிறேன் என்று சொல்லிவிட்டார். ஆனால் இருவரிடமும் பணம் இல்லாததால் தெரிந்தவர்களிடமும் கையில் இருந்த பணத்தை வைத்துக்கொண்டு அடுத்து என்ன பண்ணலாம் என்று யோசிக்கிறார்கள்.

அப்பொழுது பாண்டியன் போனை வைத்துவிட்டு வெளியே போய்விட்டார். இதை பயன்படுத்தி கதிர் அவருடைய போனிலிருந்து பணத்தை ட்ரான்ஸ்பர் பண்ணலாம் என்று முடிவு செய்கிறார். ஆனால் செந்தில் இது வேண்டாம் தெரிந்தால் அப்பா பெரிய பிரச்சனை பண்ணுவார் என்று தடுக்கிறார். இப்படி இவர்கள் இருவரும் சரவணனுக்காக அல்லல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

ஆனால் சரவணன், தங்கமயில் நீலி கண்ணிரை பார்த்து ஏமாந்து போய் நிற்கிறார். கடைசியில் பிரச்சனையை சரி செய்யும் விதமாக கதிர் மற்றும் செந்தில் பணத்தை அனுப்பி விடுவார்கள். ஆனால் தங்கமயில் நினைத்தபடி சரவணன் இந்த மூன்று நாளும் சந்தோசம் இல்லாமல் தவிக்கப் போகிறார். கடைசியில் தங்கமயில் மற்றும் பாக்கியம் போட்ட பிளான் ஏமாற்றத்தில் முடியப் போகிறது.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் நடந்த விஷயம்

Trending News