வியாழக்கிழமை, டிசம்பர் 26, 2024

பிளாக் மெயில் விஷயத்தை உளறி கொட்டிய ரோகிணி.. உண்மையை கண்டுபிடிக்கும் முத்து, ஜெயித்த மீனா

Sirakadikkum Asai Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற சிறகடிக்கும் ஆசை சீரியலில், ரோகிணி மற்றும் மனோஜ்க்கு இடையில் ஏற்பட்ட வாக்குவாதத்தில் மூக்கை நுழைத்த விஜயா மகனுக்காக ரோகினிடம் நியாயம் கேட்டு சண்டை போட்டுவிட்டார். இதனால் கோபமான ரோகினி எல்லா விஷயத்தையும் சின்ன பிள்ளை மாதிரி உடனே அம்மாகிட்ட போய் சொல்லுவது அசிங்கமாக இல்லையா என்று மனோஜை முறைத்துக் கொண்டு ரூம் கதவை அடைத்து விட்டார்.

அடுத்ததாக அனைவரும் ஆபீசுக்கு கிளம்பிக் கொண்டிருக்கும் போது அண்ணாமலை, முத்து எங்கே என்று கேட்கிறார். அதற்கு மீனா காலையிலே அவருக்கு வேலை இருக்கு என்று சொல்லி கிளம்பி விட்டார் என சொல்லிக் கொண்டிருக்கும் பொழுது முத்துவை நக்கல் அடிக்கும் விதமாக மனோஜ் மற்றும் விஜயா, ஆமாம் பெரிய தொழிலதிபர் காலையிலேயே வேலைக்கு போய் லட்ச கணக்கில் சம்பாதிக்க போயிட்டாரு என்று கிண்டல் பண்ணுகிறார்கள்.

முத்துக்கு லீட் கொடுத்து உண்மையை உளறிய ரோகினி

உடனே மீனா, அவர் நினைத்தால் அவரால் அந்த அளவுக்கு சம்பாதிக்க முடியும் ஒரு நாள் நாங்கள் அந்த மாதிரி வளர்ந்து நிற்போம் என்று சவால் விடுகிறார். அந்த நேரத்தில் முத்து கட்டில் வாங்கிக் கொண்டு வீட்டிற்கு வருகிறார். அந்த கட்டில் வித்தியாசமாகவும் பார்க்க அழகாகவும் இருக்கிறது. அதை ஹாலில் போட்டு மீனா மற்றும் முத்து தூங்குவதற்கு ஏற்பாடு பண்ணிவிட்டார்.

இதையும் நக்கல் அடிக்கும் விதமாக மனோஜ், முத்துவை மட்டம் தட்டி பேசுகிறார். அந்த நேரத்தில் சுருதி மற்றும் ரவி வீட்டுக்குள் வந்த பொழுது, சுருதி அந்த கட்டில் பார்த்து ரொம்பவே அழகாக இருக்கிறது. இந்த மாதிரி கட்டில் எல்லாம் எல்லா கடையிலும் கிடைக்காது. இது ரொம்பவே ஸ்பெஷலான கட்டில். விலையும் அதிகமாக இருக்கும் என்று அந்த கட்டில் ஏறிப் பார்த்து சின்ன பிள்ளை மாதிரி விளையாட ஆரம்பித்து விட்டார்.

இதை பார்த்து மனோஜ் மற்றும் விஜயா வைத்தெரிச்சல் படுகிறார்கள். அப்பொழுது முத்து, இதெல்லாம் உங்களுக்கு எங்கே புரிய போகிறது என்று சொல்லிய நிலையில் மாதம் கொடுக்க வேண்டிய பணத்தை ஏன் இன்னும் கொடுக்கவில்லை என்று கேட்கிறார். அதற்கு ரோகிணி, மனோஜிடம் கண்காட்டி அந்த பணத்தை பற்றி பேச சொல்கிறார். உடனே மனோஜ் நான் ஒன்னும் 27 லட்ச ரூபாயை எடுத்துட்டு போகலை.

என்னுடைய பங்கு 18 லட்சம் ரூபாய் தான் இன்று தெளிவான கணக்கை கூறுகிறார். இதை கேட்டதும் முத்து உனக்கு இந்த மாதிரி எல்லாம் யோசிக்க மூளை கிடையாதே. இது யாரோ சொல்லிக் கொடுத்து நீ அப்படியே செய்கிறாய், எவ்வளவு தூரம் தான் போகிறாய் என்று பார்ப்போம் என முத்து சொல்கிறார். அந்த நேரத்தில் ரவி எங்க ஹோட்டலில் ஒரு நிகழ்ச்சி நடக்கப்போகிறது.

அதில் பெஸ்ட் ஜோடி யார் என்று அவர்கள் தேர்ந்தெடுத்து விட்டால் அவர்களுக்கு ஒரு லட்ச ரூபாய் பணம் கிடைக்கும் என்று சொல்கிறார். இதை கேட்டதும் முத்து மனோஜ் நாங்கள் கலந்து கொள்கிறோம் என்று சொல்லிவிட்டார்கள். இதனை தொடர்ந்து நடக்க போற நிகழ்ச்சியில் ரோகினிடம் கேட்ட கேள்விக்கு ஒவ்வொன்றாக பதில் சொல்லும் போது செலவை பற்றி சொல்கிறார்.

அப்படி சொல்லும் போது பிளாக் மெயில் பண்றவனுக்கு நான் கொடுக்க வேண்டிய பணத்தையும் சேர்த்து மொத்தம் 25000 ஆகும் என்று உளறி விடுகிறார். இதைக் கேட்டு அங்கிருப்பவர்கள் மட்டுமல்லாமல் முத்து மற்றும் மீனாவும் அதிர்ச்சியாகி ஆச்சரியத்துடன் பார்க்கிறார்கள். கண்டிப்பாக இந்த ஒரு லீடை வைத்து முத்து சில உண்மைகளை கண்டுபிடிக்க போகிறார். அடுத்ததாக இந்த போட்டியில் கலந்து கொண்ட ஜோடிகளில் பெஸ்ட் ஜோடி என்று மீனா முத்து தேர்வாகி ஒரு லட்ச ரூபாய் பணத்தை பெறுகிறார்கள்.

சிறகடிக்கும் ஆசை சீரியலில் நடந்த சம்பவங்கள்

Trending News