சனிக்கிழமை, டிசம்பர் 14, 2024

ரிலீஸ் தேதியுடன் மிரட்டி விட்ட MUFUSA.. ட்ரெண்டிங் ஆகும் தி லயன் கிங் பட ட்ரைலர்

Mufusa The Line King: முஃபாசா தி லயன் கிங், சிங்கக்குட்டியின் பயணத்தை வைத்து படம் ஆரம்பமாகிறது. அனாதையாக இருப்பதால் தன்னை தற்காத்துக் கொள்ள வேண்டும் என்பதை விட்டுவிட்டு அதோட விதியை வடிவமைக்கும் விதமாக ஒரு வித்தியாசமான சாகசத்தில் இறங்குகிறது. அப்பொழுது சிம்பா மற்றும் நலாவின் ஆர்வமுள்ள இளம் மகளான கியாராவிடம் முஃபாசாவின் புராணக் கதையை ரபிக் விவரிக்கும் போது பிளாஷ்பேக் மூலம் கதை செயல்படுகிறது.

டிமோன் மற்றும் பும்பா நகைச்சுவையை அதிகரித்து முஃபாசாவின் ஆரம்ப நாட்களையும் சிங்க இளவரசனாக இருக்கும் டக்காவுடன் ஏற்படும் சந்திப்பையும் தொடர்ந்து ஆபத்தான தேடுதலை நோக்கி பயணிக்கிறது. இவர்கள் அனைவரும் சேர்ந்து வல்லமை மிக்க எதிரியை எதிர்கொள்ளும் போது தவறான கூட்டத்தில் மாட்டிக் கொள்கிறார்கள்.

இப்படி மிரட்டலாக வரும் இப்படத்தை உலகத்தில் உள்ள ரசிகர்கள் அனைவரும் பார்ப்பதற்கு ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்த முஃபாசா ட்ரெய்லருடன் ரிலீஸ் செய்தியை வெளியிட்டு ரசிகர்களை மிரட்டி விட்டிருக்கிறார்கள். தற்போது இந்த ட்ரெய்லர் தான் சோசியல் மீடியாவில் ட்ரெண்டிங் என்று சொல்லும் அளவிற்கு தி லயன் கிங் ரசிகர்களை கவர்ந்திருக்கிறது.

இப்படம் டிசம்பர் 20ஆம் தேதி உலகத்தில் உள்ள அனைத்து திரையரங்களிலும் ரிலீசாக போகிறது. இதை டிஸ்னி அதிகாரப்பூர்வ அறிவுப்புடன் வெளியிட்டிருக்கிறார்கள்.

- Advertisement -

Trending News