Sirakadikkum Asai Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற சிறகடிக்கும் ஆசை சீரியலில், ரவி சொன்ன போட்டியில் கலந்து கொண்டு சிறந்த தம்பதிகளாக வெற்றி பெற்று ஊக்கதொகையை வாங்க வேண்டும் என்று மனோஜ், ரோகிணியை வற்புறுத்துகிறார். ஆரம்பத்தில் ரோகிணிக்கு விருப்பம் இல்லாமல் இருந்தாலும் மனோஜ் கட்டாயப்படுத்தியதால், முத்து மீனாவை தோற்கடித்து ஜெயிக்க வேண்டும் என்று எண்ணம் வந்துவிட்டது.
அதேபோல் ரவி மற்றும் சுருதி நாம் தான் சிறந்த தம்பதிகளாக ஜெயிக்க வேண்டும் என்று பல முயற்சிகள் எடுத்து வருகிறார்கள். அதே மாதிரி முத்துவும் மீனாவும் எப்படி எல்லாம் கேள்விகள் கேட்பார்கள். அதற்கு எப்படி பதில் சொல்ல வேண்டும் என்று பிளான் பண்ணி பேசிக் கொள்கிறார்கள். ஆனாலும் எந்த மாதிரியான போட்டிகள் எல்லாம் நடக்கும் என்று தெரியாத நிலையில் இதைப் பற்றி ரவி மற்றும் சுறுதியிடம் கேட்கலாம் என்று போகிறார்கள்.
அண்ணாமலையிடம் முத்து மீனாவை மட்டம் தட்டி பேசிய விஜயா
அப்பொழுது அவர்கள் இருவரும் ரூமில் இல்லாமல் மொட்டை மாடியில் பயிற்சி எடுக்கிறார்கள். அங்கே போன முத்து மற்றும் மீனா, போட்டியை பற்றி கேட்டு விசாரிக்கிறார்கள். அதற்கு ஸ்ருதி, சில உதாரணங்களை சொல்லி ஒருத்தரை ஒருத்தர் எந்த அளவுக்கு புரிந்து வைத்திருக்கிறீர்கள் என்பதை பற்றி கேள்விகள் வரும்.
மீனாவைப் பற்றி முத்துவிடவும், முத்துவை பற்றி மீனாவுக்கும் கேள்விகள் நிறைய வர வாய்ப்பு இருக்கும். இதற்கான முக்கியத்துவமே சிறந்த ஜோடிகள் தேர்ந்தெடுக்க வேண்டும் என்பதினால் எந்த அளவிற்கு கணவன் மனைவிகள் புரிதலுடன் வாழ்கிறார்கள் என்பது தான் என்று சரியாக விளக்கத்தை சுருதி கொடுத்து விடுகிறார். இதனைத் தொடர்ந்து அனைவரும் மறுநாள் போட்டியில் கலந்து கொள்ள தயாராகி விட்டார்கள்.
அப்பொழுது வழக்கம்போல் விஜயா, இதில் எப்படியும் ரோகினி மனோஜ் தான் ஜெயிப்பார்கள். முத்து மீனா அங்க போய் அவமானப்பட்டு தான் வரப்போகிறார்கள் என்று அண்ணாமலை இடம் சொல்கிறார். அதற்கு அண்ணாமலை யார் ஜெயித்து விட்டு வருகிறார்கள் என்று பொறுத்து இருந்து பார்க்கலாம் என கூறுகிறார். அடுத்ததாக போட்டியில் கலந்து கொண்ட ஆறு ஜோடிகள் ஒவ்வொரும் அவர்களை பற்றி அறிமுகப்படுத்துகிறார்கள்.
அப்படி அறிமுகப்படுத்தும் போது அனைவரும் படித்தவர்களாகவும் நல்ல வேலையில் இருப்பவர்கள் ஆகவும் சொல்கிறார்கள். ஆனால் முத்து டிரைவர் என்பதையும், மீனா பூக்கட்டி விற்பனை செய்வதாகவும் சொல்கிறார்கள். ஆனால் இதை கேட்டதும் யாரும் கைத்தட்டி ஊக்கப்படுத்தாமல் அமைதியாக வேடிக்கை பார்க்கிறார்கள். இதனால் அந்த இடத்தில் முத்து மீனா அவமானத்தை சந்திப்பது போல் உணர்கிறார்கள்.
ஆனாலும் ஒருத்தரை ஒருத்தர் ஊக்கப்படுத்திக் கொண்டு போட்டிக்கு தயாராக இருக்கிறார்கள். பிறகு ஜோடிகளில் பெண்களை தனியாக கூப்பிட்டு அவர்களுக்கு இருக்கும் திறமைகளை தனியாக காட்டுமாறு சொல்லப்படுகிறது. அப்போது மீனா தனக்கு என்ன திறமை என்று யோசித்த நிலையில் முத்து எழுந்து அனைவரது முன்னிலையிலும் மீனாவுக்கு கண்ண கட்டிக்கிட்டு எவ்வளவு பூ மாலை கிட்ட சொன்னாலும் தாராளமாக கெட்டுவாள் என்று சொல்கிறார்.
அதன்படி மீனாவிற்கு அந்த டாஸ்க் கொடுக்கப்படுகிறது. அதை சரியாக செய்து அனைவரிடமும் பாராட்டுகளை பெறுகிறார். இப்படி ஒவ்வொரு போட்டியாக நடைபெற்று வரும் நிலையில் கடைசியாக கணவன் மனைவி புரிதல் விஷயங்களை தெரிந்து கொள்ளுமாறு கேள்விகள் கேட்கப்படுகிறது. அதில் வழக்கம் போல் முத்து மீனா சொல்லும் பதில்கள் அனைவரையும் ஆச்சரியப்படுத்தி கைத்தட்டலை கொடுக்க வைக்கிறது.
ரோகிணியும் இந்த விஷயத்தில் சொதப்பி விடுகிறார், அதே மாதிரி ரவி எங்களுக்கு மூன்று குழந்தை வேண்டும் என்று கேட்ட நிலையில் சுருதிக்கு இது விருப்பம் இல்லாததால் கோபப்பட்டு ரவி கையை உதறிவிட்டு போய்விடுகிறார். இதையெல்லாம் வைத்து பார்க்கும் பொழுது முத்து மீனா சிறந்த ஜோடிகளாக ஜெயித்து விட்டு பரிசுத் தொகையாக ஒரு லட்ச ரூபாய் பணத்துடன் விஜயா வீட்டுக்கு வருகிறார்கள்.
சிறகடிக்கும் ஆசை சீரியலில் நடந்த சம்பவங்கள்
- பிளாக் மெயில் விஷயத்தை உளறி கொட்டிய ரோகிணி
- ரோகினி மேல் சந்தேகப்பட்டு மனோஜை குழப்பிய விஜயா
- மனோஜை கண்கலங்க வைத்த ரோகினிக்கு விஜயா கொடுத்த பதிலடி