புதன்கிழமை, ஜனவரி 15, 2025

சரவணனிடம் காதலை சொன்ன பிரியா.. அப்பா வாக்கை மீறி கல்யாணத்தை நடத்துவாரா அர்ஜுன்.?

Veetuku Veedu Vaasapadi: விஜய் டிவியின் வீட்டுக்கு வீடு வாசப்படி சீரியலில் தற்போது பிரியாவின் திருமண பேச்சுதான் ஓடிக்கொண்டிருக்கிறது. பல்லவியின் சதி திட்டத்தால் டுபாக்கூர் சிவாவை மாப்பிள்ளை பார்க்க வர சொல்கின்றனர்.

திருமணத்தில் விருப்பம் இல்லை என்றாலும் அர்ஜுன் மீது நம்பிக்கை வைத்து பெண் பார்க்கும் படலத்திற்கு தயாராகிறார் பிரியா. இது தொடர்பான ப்ரோமோ ஒன்று தற்போது வெளியாகி இருக்கிறது.

அதன்படி மாப்பிள்ளைக்கு பிரியாவை பிடித்துப் போன நிலையில் குடும்பத்தினரிடம் பேசிவிட்டு சொல்வதாக விஸ்வநாதன் கூறுகிறார். அதை அடுத்து சரவணனுக்கு திருமணம் என கேள்வி பட்டு பிரியா பதற்றத்தோடு அங்கு ஓடுகிறார்.

தங்கைக்கு வாக்கு கொடுக்கும் அர்ஜுன்

அவர் போவதற்குள் கல்யாணம் நடந்த நிலையில் தன் காதலையும் அழுது கொண்டே கூறுகிறார். அப்பொழுதுதான் இது போலி கல்யாணம் என தெரிய வருகிறது. அதைத்தொடர்ந்து அங்கு வரும் அர்ஜுன் பிரியா, சரவணன் காதலுக்கு பச்சைக்கொடி காட்டுகிறார்.

மேலும் அப்பாவிடம் பேசி திருமணத்திற்கு சம்மதம் வாங்குவதாகவும் வாக்கு கொடுக்கிறார். அப்படியே விஸ்வநாதன் பக்கம் சென்றால் அவர் சிவாவை மாப்பிள்ளையாக ஏற்றுக் கொள்வதற்கு பரிபூரண சம்மதம் என சம்மந்தி வீட்டாரிடம் வாக்கு கொடுக்கிறார்.

இதனால் பல்லவி போட்ட திட்டம் சரியாக வேலை செய்திருக்கிறது. ஆனால் இந்த கல்யாண விஷயத்தில் அர்ஜுன் அப்பாவை மீறி தங்கை கல்யாணத்தை நடத்துவாரா? விஸ்வநாதன் இந்த காதலுக்கு சம்மதிப்பாரா? என்பது தான் அடுத்தடுத்த எபிசோடுகளில் காட்டப்பட இருக்கிறது.

இதில் பல்லவி நிச்சயம் தன் பங்குக்கு ஏதாவது ஒரு குட்டி கலாட்டா செய்வார். அதை எல்லாம் தாண்டி அர்ஜுன் ஜெயிக்க வேண்டும் என்பது ரசிகர்களின் எண்ணமாக இருக்கிறது.

வீட்டுக்கு வீடு வாசப்படி சீரியலின் இந்த வார எபிசோட்

Trending News