கோட் படம் செப்டம்பர் 5 பிரமாண்டமாக 1500 திரையரங்குகளில் வெளியிடப்படுகிறது. விநாயகர் சதுர்த்தி விடுமுறை நாட்களை குறி வைத்து இந்த படத்தை வெளியிடுகின்றனர். இந்த படம் ரிலீஸ் ஆவதை ஒட்டி சிறுத்தை சிவா பல தில்லாலங்கடி வேலைகளை செய்து வருகிறார்.
நேற்று பிறந்த நாள் கொண்டாடிய சிறுத்தை சிவா அதனை முன்னிட்டு கங்குவா படத்தின் டிரைலரை வெளியிட்டு இருந்தார். அப்படியே இரண்டு பாகுபலி படத்துக்கு நிகராக எடுக்கப்பட்டிருக்கிறது கங்குவா படம். ஒவ்வொருத்தரும் அடி வயிற்றிலிருந்து பேசும் வசனங்கள் மிரட்டுகிறது
சுமார் 1500 திரையரங்குகளிலும் இடைவேளை நேரத்தில், கங்குவா படத்தின் டிரைலரை வெளியிடுகிறார்கள். இதை வைத்து படத்தை எல்லா பக்கமும் கொண்டு சேர்த்து விடலாம். ஒரு வாரம் ட்ரெய்லரை ஓட்டுவதற்கு தியேட்டர்களில் 850 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
தலை சுற்றலில் விடும் சிறுத்தை சிவா
இதற்கு மேல் இந்த படத்திற்கு எந்த ஒரு ப்ரோமோசனும் தேவையில்லை என சிறுத்தை சிவா முடிவு எடுத்துவிட்டார் இதுவே மக்களிடம் பெரிய அளவில் இந்த படத்தை கொண்டு சேர்த்து விடும். ஏற்கனவே இந்த ட்ரெய்லர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
ஒவ்வொரு தியேட்டரிலும் குறைந்தது நாள் ஒன்றுக்கு நான்கு காட்சியாவது இருக்கும். அதனால் தான் கோட் படம் ரிலீஸ் ஆவதற்கு முன்கூட்டியே இந்த ட்ரெய்லரை வெளியிட்டு பக்கா ஸ்கெட்ச் போட்டிருக்கிறார் சிறுத்தை சிவா. படம் கிட்டத்தட்ட300 கோடி பட்ஜெட்டில் எடுத்துள்ளனர்