பேயை விரட்ட போராடும் சொக்கன் சூரி.. கொட்டுக்காளி ட்ரெய்லர் எப்படி இருக்கு.? முதலாளி SK தப்பிப்பாரா.?

Kottukkaali Trailer: காமெடியனாக நாம் பார்த்து ரசித்த சூரி இப்போது கதையின் நாயகனாக நம்மை ஆச்சரியப்படுத்திக் கொண்டிருக்கிறார். வெற்றிமாறனின் விடுதலை மூலம் புது அவதாரம் எடுத்த இவருக்கு கருடன் மிகப்பெரும் வெற்றியாக அமைந்தது.

இதன் மூலம் ஹீரோ அந்தஸ்தை பெற்றுள்ள இவர் தற்போது கொட்டுக்காளி படத்தில் நடித்து முடித்துள்ளார். சிவகார்த்திகேயன் தயாரித்திருக்கும் இப்படத்தில் ஹீரோயின் ஆக அன்னா பென் நடித்துள்ளார்.

P.s வினோத் ராஜ் இயக்கியிருக்கும் இப்படம் சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்டதோடு விருதுகளையும் வென்றது. இப்படி ரிலீசுக்கு முன்பே பெரும் ஆர்வத்தை ஏற்படுத்தி இருக்கும் இப்படம் வரும் 23ஆம் தேதி திரைக்கு வருகிறது.

இதன் ப்ரோமோஷன் ஒரு பக்கம் ஜோராக நடந்துவரும் நிலையில் இன்று டிரைலர் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதை தொடர்ந்து தற்போது ட்ரெய்லர் வெளியீட்டு விழாவும் கோலாலமாக ஆரம்பித்துள்ளது.

சிவகார்த்திகேயன் சூரி கூட்டணி

இதில் சிவகார்த்திகேயன், சூரி, மிஷ்கின் உட்பட பலரும் கலந்துகொண்டு படம் பற்றிய சுவாரசிய விஷயங்களை பகிர்ந்து கொண்டனர். இப்படி ஆரவாரப்படுத்தும் கொட்டுக்காளி ட்ரெய்லர் தற்போது வெளியாகி உள்ளது.

இதன் ஆரம்பத்திலேயே சேவல் தான் காட்டப்படுகிறது. அதை குறுகுறுவென பார்க்கிறார் ஹீரோயின். அதை தொடர்ந்து சூரி தொண்டை கட்டிய குரலில் எங்க வீட்டு பிள்ளைக்கு பேய் புடிச்சிருக்கு விரட்ட போறோம் என சொல்கிறார்.

அதைத்தொடர்ந்து குடும்பம் முழுவதும் கோவிலுக்கு சென்று ஏதோ சாங்கியம் செய்கின்றனர். பெரிய அளவில் பின்னணி இசை இல்லாவிட்டாலும் எதார்த்தமான சத்தத்தோடு பயணிக்கிறது ட்ரெய்லர்.

இதில் திடீரென சூரி ஆங்கிரி மோடுக்கு மாறுகிறார். அதைத் தொடர்ந்து கலவரத்தோடு ட்ரெய்லர் முடிகிறது. பார்க்கும்போது எதுவும் புரியாவிட்டாலும் நிச்சயம் ஏதோ ஒன்று இருக்கும் என தெரிகிறது. இருப்பினும் கருடன் அளவுக்கு இப்படம் இருக்குமா என்பது விரைவில் தெரிந்து விடும்.

வெளியானது சூரியின் கொட்டுக்காளி ட்ரெய்லர்

Next Story

- Advertisement -