Sirakadikkum Asai Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற சிறகடிக்கும் ஆசை சீரியலில், ரவி ஹோட்டலில் சிறந்த ஜோடி யார் என்று நடத்தும் நிகழ்ச்சியில் முத்து, மனோஜ், ரவி, அனைவரும் மனைவியை கூட்டிட்டு கலந்து கொள்கிறார்கள். இதில் வைக்கப்படும் ஒவ்வொரு டாஸ்கிலும் இதுவரை சமமாக மூன்று பேரும் ஜெயித்திருக்கிறார்கள். ஆனால் முத்து மீனா எதார்த்தமான உணர்வுகளை வெளிப்படுத்தும் விதமாக அங்கே இருப்பவர்கள் மனதில் இடம் பிடித்திருக்கிறார்கள்.
இதனை தொடர்ந்து ஒவ்வொரு டாஸ்கிலும் வெற்றி பெற்று வருகிறார்கள். அந்த வகையில் கணவன் மனைவிகளின் சம்பளங்களையும் செலவுகளையும் பற்றி கேட்கப்படுகிறது. இதில் ரவி மற்றும் சுருதி, எங்களுடைய சம்பளம் என்னவென்று ஒருத்தர் ஒருத்தருக்கு தெரியாது. எதுவானாலும் நாங்கள் இரண்டு பேரும் சேர்ந்து பார்த்துக் கொள்வோம் என்று சொல்கிறார்கள்.
எதிர்பாராத திருப்பத்தை கொடுத்த விஜயாவின் வாரிசு
அதே மாதிரி மனோஜிடம் கேட்கப்பட்ட பொழுது, தெனாவட்டாக இது தவறான கேள்வி. எந்த ஆண்களிடமும் சம்பளம் என்னவென்று கேட்கக் கூடாது. அதனால் நான் சொல்ல மாட்டேன் உங்க கேள்வியை தவறாக இருக்கிறது என்று ஓவர் ஆட்டிட்யூட் காட்டி ஜட்ஜை கடுப்பேத்தி விட்டார். பிறகு ரோகிணி அவருடைய சம்பளத்தை சொல்லி வீட்டு செலவுக்காக இவ்வளவு கொடுக்கிறேன் என்று சொல்கிறார்.
அத்துடன் பிளாக் மெயில் பண்றவனுக்கு இவ்ளோ கொடுப்பேன் என்று உளறிய நிலையில் அதை சமாளிக்கும் விதமாக சமாளித்து மற்றவர்களுக்கு சந்தேகம் வராதபடி மறைத்து விட்டார். அடுத்து முத்து மற்றும் மீனா விடம் கேட்ட பொழுது மீனா வாங்கும் சம்பளம் செலவுகளை பற்றி முத்து சொல்கிறார். அதை மாதிரி முத்து எவ்வளவு சம்பாதிப்பார் என்னெல்லாம் செலவு பண்ணுகிறார் என்பதை மீனா தெளிவாக சொல்கிறார்.
இப்படி இவர்கள் மாற்றி மாற்றி ஒருத்தரைப் பற்றி ஒருத்தர் சொல்லிய நிலையில் அங்கு இருப்பவர்கள் அனைவரும் இவர்களுடைய பேச்சுக்கு கைதட்டி உற்சாகப்படுத்தி விட்டார்கள். அடுத்ததாக கடைசியாக கேட்கப்பட்ட கேள்வி ஒரு இக்கட்டான சூழ்நிலையில் உங்களுடைய அம்மா மற்றும் மனைவி மாட்டிக் கொள்கிறார்கள். நீங்கள் அந்த வழியாக பைக்கில் போய்க் கொண்டிருக்கும் பொழுது அங்கிருந்து யாரை முதலில் காப்பாற்றுவீர்கள் என்று கேட்கப்படுகிறது.
அதற்கு மனோஜ் மற்றும் ரவி என்னுடைய மனைவியை தான் முதலில் கூட்டிட்டு போவேன் என்று சொல்கிறார்கள். இதே கேள்வி முத்துவிடம் கேட்கப்பட்ட பொழுது முத்து சொன்ன பதில் என்னவென்றால் என்னுடைய பைக்கை என் மனைவி மீனாவிடம் கொடுத்துவிட்டு என் அம்மாவை கூட்டிட்டு போய் முதலில் காப்பாற்ற சொல்வேன். அதன் பிறகு எங்க அம்மாவை மீனா காப்பாற்றி விடுவார்.
அடுத்து நிச்சயம் என் மனைவி என்னை அங்கிருந்து கூட்டிட்டு போக திரும்பி வந்து காப்பாற்றி விடுவாள் என்று சொல்லி எப்போதுமே வாழ்க்கையில பொண்டாட்டி வந்த பிறகு அம்மாவை மறந்து விடக்கூடாது என்று மற்றவர்கள் ஆச்சரியப்படும் அளவிற்கு ஒரு பதிலை கொடுத்து அனைவரையும் வியப்பில் ஆழ்த்திவிட்டார். அந்த வகையில் நிச்சயம் இந்த போட்டியில் முதலாவதாக ஜெயித்து ஒரு லட்ச ரூபாய் பணத்தை வாங்கி வீட்டுக்கு திரும்பும் ஜோடி முத்து மீனா தான்.
இதை எதிர்பார்க்காத விஜயா, ரோகினி வீட்டிற்கு வந்ததும் ஜெயித்து விட்டாயா பணம் எங்கே என்று கேட்கிறார். அதற்கு ரோகிணி நாங்க ஜெயிக்கவில்லை என்று சொல்லிய பொழுது ரவியும் ஸ்ருதியும் ஜெயித்து விட்டார்களா என்று சந்தோஷப்படுகிறார்.
அப்பொழுது ரவி நாங்களும் ஜெயிக்கவில்லை முத்து மற்றும் மீனா அண்ணி தான் ஜெயித்திருக்கிறார்கள் என்று சொல்கிறார். இதை கேட்டதும் அப்படியே விஜயா மூஞ்சி சுருங்கி போய்விட்டது. எந்த இடத்திலும் மனைவியும், அம்மாவையும் விட்டுக்கொடுக்காமல் முத்து ஜெய்த்து கொண்டே வருகிறார்.
சிறகடிக்கும் ஆசை சீரியலில் நடந்த சம்பவங்கள்
- முத்து மீனாவை கண்டுக்காமல் உதாசீனப்படுத்தும் போட்டியாளர்கள்
- ரோகினி மேல் சந்தேகப்பட்டு மனோஜை குழப்பிய விஜயா
- மனோஜை கண்கலங்க வைத்த ரோகினிக்கு விஜயா கொடுத்த பதிலடி