திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

பாண்டியனை புரிஞ்சிக்க முடியாமல் தவிக்கும் செந்தில்.. கதிரிடமிருந்து எஸ்கேப் ஆகிய ராஜி, மீனா கொடுத்த ஐடியா

Pandian Stores 2 Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில், ராஜி அண்ணனுக்கு கல்யாணம் பண்ணுவதற்கு பொண்ணு பார்த்து விட்டாச்சு. இரண்டு வீட்டார்கள் சம்மதத்துடன் கல்யாணம் நடக்கப்போகிறது. அந்த வகையில் பெண் வீட்டார்கள் மாப்பிள்ளை வீட்டிற்கு வந்து நாள் நட்சத்திரம் குறித்து பேசி கல்யாணத்தை முடிவு பண்ண வருகிறார்கள். இது சம்பந்தமாக ராஜி அப்பா மற்றும் சித்தப்பா பேசிக் கொள்கிறார்கள்.

அப்பொழுது வடிவு, கொழுந்தன் பழனிச்சாமியையும் இன்னைக்கு ஈவினிங் வர சொல்லலாமா என்று கேட்கிறார். அதற்கு ராஜியின் சித்தப்பா சக்திவேல் அவன் எதற்கு, அவன் எல்லாம் ஒன்னும் கூப்பிட வேண்டாம். அவனுக்கு தெரிஞ்சா அந்த குடும்பத்துக்கும் எல்லா விஷயமும் தெரிந்துவிடும். அவங்களுக்கு இப்போதைக்கு எதுவும் தெரிய வேண்டாம். அதுதான் இந்த கல்யாணத்துக்கு நல்லது என்று சொல்கிறார்.

மீனாவிடம் புலம்பி தவிக்கும் ராஜி

உடனே ராஜி அப்பா முத்துவேல், நீ சொல்றது தப்பு. நம்ம தம்பி என்ன இருந்தாலும் நம்மளுடைய ரத்த சொந்தம். அவன் எந்த தப்பும் பண்ணவில்லை. அதனால் அவன் இல்லாமல் எப்படி ஒரு விசேஷத்தை பண்ண முடியும். அவன் கண்டிப்பாக இன்னைக்கு ஈவினிங் வரவேண்டும். வடிவு நீ போன் பண்ணி கூப்பிடு என்று சொல்லி விடுகிறார். இவர் இப்படி சொன்னதும் சக்திவேல் மூஞ்சி வாடி போய்விட்டது.

அத்துடன் குமரவேலுவிடம் வரவர உங்க பெரியப்பா பேச்சு சரியே இல்லை. கொஞ்சம் கொஞ்சமாக அவர் மனசுல மகள் மீது பாசம் வர ஆரம்பித்துவிட்டது. அதிலும் ராஜிக்கு கல்யாணம் ஆன பிறகு மொத்தமாகவே மாறிவிட்டார். என்னையும் அவ்வப்போது அலட்சியப்படுத்தி பேசுகிறார். இதெல்லாம் எங்க போய் முடிய போகிறது தெரியவில்லை பார்க்கலாம் என்று சொல்கிறார்.

அந்த வகையில் கூடிய விரைவில் ராஜி அப்பாக்கும் சித்தப்பாக்கும் சண்டை வந்து பிரச்சினை பெருசாக வெடிக்க போகிறது என்பது போல் தெரிகிறது. இதனை தொடர்ந்து ராஜி டியூஷன் எடுத்துக் கொண்டிருக்கும் பொழுது அந்த வீட்டில் உள்ளவர்கள் சாப்பாடு ஆர்டர் போட்டு இருக்கிறார்கள். அப்பொழுது அதை டெலிவரி பண்ணும் விதமாக கதிர் வந்திருக்கிறார். இது தெரியாமல் யார் என்று ராஜி பார்க்க போகிறார்.

அப்பொழுது வெளியே கதிர் நிற்பதை பார்த்துவிட்டு வீட்டிற்குள் ஓடிவிடுகிறார். பிறகு இதை பார்த்து பயந்து போன ராஜி வீட்டுக்கு வந்து மீனாவிடம் சொல்கிறார். அதற்கு மீனா, உன்னை தான் அவன் பார்க்கவில்லை அப்புறம் ஏன் பயப்படுற என்று கேட்கிறார். உடனே ராஜி, டெலிவரி பண்ணும் பொழுது அந்த அக்கா என் பெயர் ராஜேஸ்வரி என்று கூப்பிட்டு விட்டார்கள் என்று சொல்கிறார்.

அதற்கு உன் பெயர் ராஜேஸ்வரி என்று கதிருக்கு எப்படி தெரியும். அப்படியே இருந்தாலும் எத்தனையோ ராஜேஸ்வரி இருப்பாங்க உன்னைய அவன் யோசிச்சிட்டு இருக்க போகிறான் பேசாமல் விடு என்று சொல்கிறார். உடனே ராஜி அது மட்டும் இல்லாமல் வெளியே என் செப்பல் இருப்பதை பார்த்தான். அதனால் அவனுக்கு சந்தேகம் வந்துருமோ என்று பயமாக இருக்கிறது என்று சொல்கிறார்.

இதற்கு பேசாமல் நான் எல்லாம் உண்மையும் அவனிடம் சொல்லி தைரியமாக டியூஷன் எடுக்க போகலாமா என்று யோசிக்கிறேன் என மீனாவிடம் சொல்கிறார். இதை கேட்ட மீனா, உடனே போய் சொல்லு, பிரச்சனை பெருசாக வெடிக்கட்டும். நீயும் நானும் சேர்ந்து மாட்டுவோம் என்று சொல்கிறார். இதை கேட்டு கவலைப்படும் ராஜிக்கு, தேவை இல்லாமல் எதையும் யோசித்து கவலைப்படாத.

கதிரிடமிருந்து இப்பொழுது எஸ்கேப் ஆகிவிட்டாய், அதை நினைத்து சந்தோஷப்பட்டு கொள். உண்மை தெரியவரும் போது பார்த்துக்கலாம். அதை எப்படி சமாளிக்கலாம் என்று ஐடியா என்னிடம் இருக்கு. நீ தேவையில்லாமல் கவலைப்படாதே என்று ஆறுதல் படுத்தி விட்டார். இதனை தொடர்ந்து பாண்டியன், கடையில் பழனிச்சாமி பற்றி பெருமையாக சொல்லி பாசத்துடன் பேசுகிறார். இதை பார்த்த செந்தில், இவ்வளவு வருஷம் ஆகியும் இந்த அப்பாவை புரிஞ்சுக்கவே முடியலையே என்று சொல்லி புலம்புகிறார்.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் நடந்த சம்பவங்கள்

Trending News