கடந்த ஒரு வார காலமாக தியேட்டரில் அந்தகன் படம் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. பிரசாந்த் இந்த படத்திற்காக அதிபயங்கர பிரமோஷன்வேலைகள் செய்து வந்தார். டி நகர் பகுதியில் ஹெல்மெட் போடாமல் பைக் ஓட்டி டிராபிக் போலீஸிடம் அபராதம் எல்லாம் கட்டினார். அப்படி தில்லாலங்கடி வேலையெல்லாம் காட்டினார் அந்தகன்.
ஹிந்தியில் வெளிவந்த அந்தாதூன் படத்தின் ரீமேக் தான் இந்த படம். அதனால் கதை தெரிந்தும் கூட தியேட்டரில் நல்ல வரவேற்பு கிடைத்தது. அந்த காலத்தில் இருந்தே பிரசாந்துக்கு ரசிகர்கள் பட்டாளம் ஏராளம், இன்றுவரை அந்த கிரேஸ் குறையவில்லை.
முதல் நாளன்று இந்த படம் வெறும் 63 லட்சம் மட்டுமே வசூலித்தது, ஆனால் அதன்பின் படிப்படியாக லீவு நாட்களில் தியேட்டர்களில் ஹவுஸ்ஃபுல் காட்சிகள் ஓடியது. இதன் மூலம் இந்த படம் இதுவரை 3.75 கோடிகள் வசூலித்துள்ளது. இப்பொழுது மக்கள் தொடர்ந்து கொடுக்கும் ஆதரவால் படத்தின் வசூல் உயரும் என்கிறார்கள்.
அஞ்சு வருடம் கழித்து பிரசாந்துக்கு கொட்டிய பணமழை
டாப் ஸ்டார் பிரசாந்தின் தந்தை தியாகராஜன் தான் இந்த படத்தை இயக்கியுள்ளார். மொத்தமாக 10 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்த படம் எப்படி பார்த்தாலும் 12 கோடிகள் வரை வசூலித்து விடும் என்கிறார்கள். இன்னும் சாட்டிலைட், டிஜிட்டல் என வியாபாரம் இருக்கிறது, அதனால் போட்ட முதலுக்கு மோசமாகாமல் காப்பாற்றி விடும்.
ஒரு ஹீரோ ஐந்து வருடம் கழித்து ரீ என்ட்ரி கொடுப்பது என்பது சாதாரண விஷயம் இல்லை. 2017 ஆம் ஆண்டு ராம்சரண் நடிப்பில் வெளிவந்த “வினைய விதைய ராமா” படத்தில் அண்ணனாக நடித்திருந்தார் பிரசாந்த். இப்பொழுது விஜய்யின் கோட் படத்திலும் நடித்து வருகிறார்.
இந்தப் படத்தின் மூலம் சிம்ரன் மற்றும் வனிதா விஜயகுமார் ரீஎன்ட்ரி கொடுத்துள்ளனர். சிம்ரனுக்கு அடுத்தடுத்த படங்களில் புக்காகி வருகிறது. இப்பொழுது சப்தம் என்ற ஒரு படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார் சிம்ரன். வனிதா விஜயகுமாருக்கும் அடுத்தடுத்து வாய்ப்புகள் வந்த வண்ணம் இருக்கிறது.