Sirakadikkum Asai Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற சிறகடிக்கும் ஆசை சீரியலில், சிறந்த ஜோடி யார் என்ற நிகழ்ச்சியில் மீனா மற்றும் முத்து தான் பெஸ்ட் என்று சொல்வதற்கு ஏற்ப எதார்த்தமான பதிலை கூறி மற்றவர்களை ஆச்சரியப்படுத்தி வைத்தார்கள். அதிலும் கடைசியாக கேட்ட கேள்விக்கு முத்து அம்மாவையும் விட்டுக் கொடுக்காமல், பொண்டாட்டி தன் மீது வைத்திருக்கும் காதலையும் தெளிவாக புரியும் படி உணர்த்திக் கட்டி விட்டார்.
இதற்கு இடையில் ரொம்பவே ஜம்பமாக நாம் தான் வெற்றி பெறுவோம் என்று அலட்டிக்கொண்ட மனோஜ் ஒவ்வொரு விஷயத்திலும் அவமானப்பட்டு ஜட்ஜ்க்கு எதிராக கேள்வி கேட்டு தெனாவட்டு காட்டினார். கடைசியில் மற்றவர்களிடம் கைத்தட்டலை வாங்க வேண்டும் என்று ரோகினிடம் கூட்டு சேர்ந்து பிளான் பண்ணிய மனோஜை ஜட்ஜ் அனைவரது முன்னிலையில் குறும்படம் போட்டு காட்டிவிட்டார்.
கடைசியில் அவமானப்பட்டு ஏமாந்து போய் நிற்கும் மனோஜ்
இதனால் ரோகினி மற்றும் மனோஜ் அவமானத்தில் தோற்றுப் போய் விட்டார்கள். அத்துடன் சிறந்த லவ்வர் என்ற விருதை ரவி மற்றும் சுருதி பெற்று விட்டார்கள். அடுத்ததாக சிறந்த ஜோடி என்று முதல் பரிசை தட்டியது முத்து மீனா. இவர்களுக்கு தான் ஒரு லட்ச ரூபாய் பணமும் கிடைத்திருக்கிறது. இதனை தொடர்ந்து ரோகிணி மற்றும் மனோஜ் தான் ஜெயித்து விட்டு வருவார்கள் என்று விஜயா ஆரத்தி ரெடி பண்ணி காத்துக் கொண்டிருக்கிறார்.
அப்படி வந்த மனோஜ் மற்றும் ரோகினி நாங்கள் ஜெயிக்கவில்லை என்று சொல்லிய நிலையில் பின்னர் ரவி மற்றும் சுருதி வருகிறார்கள். உடனே விஜயா, இந்த சின்ன வயசுல சிறந்த ஜோடி என்று ஜெயித்துக் காட்டிவிட்டீர்கள் என்று சொல்லி ஆரத்தி எடுக்கப் போகிறார். அப்பொழுது ரவி நாங்கள் ஜெயிக்கவில்லை என்று சொல்லிய நிலையில் முத்து மற்றும் மீனா தாரை தப்பட்டையோடு வீட்டிற்கு வருகிறார்கள்.
அதன் பின் அங்கே அனைவரும் சேர்ந்து முத்து மீனாவை பாராட்டி மாலை மாற்றிக் கொண்டு வீட்டுக்கு உள்ளே கூப்பிடுகிறார்கள். பிறகு இவர்கள் தான் ஜெயித்திருக்கிறார்கள் என்று விஜயவால் நம்ப முடியவில்லை. அத்துடன் இதை ஏற்றுக் கொள்ள முடியாமல் வயிற்றெரிச்சலில் கொந்தளிக்கிறார். வழக்கம்போல் விஜயா, முத்துவை மட்டம் தட்டி பேச ஆரம்பித்து விட்டார்.
ஆனால் இதையெல்லாம் கண்டு கொள்ளாத முத்து, அப்பா காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கிக் கொள்கிறார். அப்பொழுது நிகழ்ச்சியில் ஒரு கணவன் மனைவி என்றால் எப்படி இருக்கணும், அவர்களுக்கான புரிதல் எந்த அளவிற்கு இருக்க வேண்டும் என்பதை பற்றி நிறைய கேள்விகள் கேட்கப்பட்டது.
அது மட்டும் இல்லாமல் கணவன் மனைவி சண்டை போட்டால் தான் அவர்களுக்குள் ஒளிவு மறைவு இல்லாமல் நல்ல ஒரு வாழ்க்கையை வாழ்ந்ததாக இருக்கும் என்று கூறியிருக்கிறார்கள் என முத்து சொல்கிறார்.
இப்படி சொல்லும் பொழுது ரோகினியை குத்தி காட்டி மனோஜிடம் ரோகிணி ஏதோ மறைக்கிறார் என்பது போல் முத்து உணர்ந்து சொல்லும் விதமாக அண்ணாமலையிடம் ரோகிணி பற்றி வத்தி வைக்கிறார். ஏற்கனவே விஜயாவுக்கு ரோகிணி மேல் சந்தேகம் வந்துவிட்டது. தற்போது முத்து சொல்லிய நிலையில் ரோகிணி பற்றி விசாரிக்க வேண்டும் என்று விஜயா முடிவெடுக்கிறார்.
இதனை தொடர்ந்து முத்து நினைத்தபடி பணம் சேர்த்து வைத்து கொஞ்சம் கொஞ்சமாக மாடியில் அவர்களுக்கான ஒரு ரூமை கட்டி விடுவார். ஆனால் மனோஜ், பேராசையால் அகல காலைலை வைத்து பிசினஸில் நஷ்டம் ஏற்பட்டு தோற்றுப் போய் நிற்கப் போகிறார்.
சிறகடிக்கும் ஆசை சீரியலில் நடந்த சம்பவங்கள்
- முத்து மீனாவை கண்டுக்காமல் உதாசீனப்படுத்தும் போட்டியாளர்கள்
- ரோகினி மேல் சந்தேகப்பட்டு மனோஜை குழப்பிய விஜயா
- பிளாக் மெயில் விஷயத்தை உளறி கொட்டிய ரோகிணி