Demonte Colony 2 Movie Review: அஜய் ஞானமுத்து இயக்கத்தில் அருள் நிதி நடிப்பில் கடந்த 2015 ஆம் ஆண்டு டிமான்ட்டி காலனி வெளிவந்தது. ஒரே இரவில் அடுத்தடுத்து மரணத்தை சந்திக்கும் நண்பர்களும் அதற்கு பின்னால் இருக்கும் செயினும் தான் படத்தின் மையக்கரு.
இப்படியும் பார்வையாளர்களை அலற வைக்கலாம் என நிரூபித்த படமும் இதுதான். இன்னும் சொல்லப்போனால் பேய் சீசனை ஆரம்பித்த பெருமையும் இப்படத்திற்கு உண்டு. கிட்டத்தட்ட ஒன்பது ஆண்டுகளுக்குப் பிறகு இதன் இரண்டாம் பாகம் இன்று வெளியாகி உள்ளது. இதன் விமர்சனத்தை இங்கு விரிவாக காண்போம்.
படத்தின் ஒன் லைன்
முதல் பாகத்தில் அருள்நிதியின் கேரக்டர் இறப்பது போல் முடிக்கப்பட்டு இருக்கும். அதை அப்படியே தொடர்ச்சியாக கொண்டு வந்து அவர் இறக்கவில்லை என ட்விஸ்ட் வைத்து படத்தை தொடங்கியுள்ளனர். அப்படி என்றால் அவர் எப்படி தப்பித்தார்? அந்த செயின் என்ன ஆனது? அதன் பின்புலம் என்ன? என்பதை தான் இரண்டாம் பாகத்தில் சுவாரசியத்துடன் திகில் கலந்து கொடுத்துள்ளார் இயக்குனர்.
பொதுவாக இரண்டாவது பாகத்தை எடுக்கும் போது அது முற்றிலும் வேறுபட்டதாக இருக்கும். ஆனால் இப்படம் அப்படி இல்லாமல் இருப்பதே பெரும் பலமாக இருக்கிறது. அதேபோல் வழக்கமான பேய் காட்சிகள் மொக்கை ஃபிளாஷ்பேக் என்ற கிரிஞ்சான விஷயங்களும் இதில் இல்லை.
15 ஆம் நூற்றாண்டில் நடந்த ஒரு சம்பவம் 2021 ஆம் ஆண்டு வரை தொடர்வதாக தான் இயக்குனர் கதையை கொண்டு சென்றுள்ளார். அதற்கேற்றவாறு பல திருப்புமுனை காட்சிகளை வைத்து ஆடியன்ஸை எங்கும் நகர முடியாதபடி கட்டி போட்டு உள்ளார்.
நிறை குறைகள்
இதில் அருள்நிதியின் நடிப்பு வழக்கம் போல இருக்கிறது. எதார்த்தத்தை மீறாமல் அலட்டாத அவருடைய நடிப்பும் பிளஸ் ஆக இருக்கிறது. அதை போல் பிரியா பவானி சங்கருக்கும் கனமான கதாபாத்திரம் கொடுக்கப்பட்டிருக்கிறது. இவர்களை அடுத்து அருண்பாண்டியன் பிக்பாஸ் அர்ச்சனா ஆகியோரின் கேரக்டர்களும் சிறப்பு.
மேலும் கதையை குழப்பி அடிக்காமல் சொல்ல வந்ததை தெளிவாக சொல்லி அடுத்த பாகத்துக்கான லீடையும் கொடுத்திருக்கின்றனர். அதேபோல் திரில்லர் படங்களுக்கு பின்னணி இசை ரொம்பவும் முக்கியம். அதை உணர்ந்து இசையமைப்பாளர் தன் பங்கை சிறப்பாக செய்துள்ளார்.
இப்படி படத்தில் பல நிறைகள் இருந்தாலும் விஎப்எக்ஸ் கொஞ்சம் சொதப்பலாக இருக்கிறது. ஆனால் அதை தவிர்த்து விட்டு பார்த்தால் டிமான்ட்டி காலனி 2 தியேட்டரில் பார்க்க வேண்டிய படம் தான். அதிலும் திகில் பிரியர்களுக்கு இது நிச்சயம் நல்ல அனுபவமாக இருக்கும். ஆக மொத்தம் இப்படம் பார்ட் 2 ராசியை உடைத்தெறிந்துள்ளது.
சினிமா பேட்டை ரேட்டிங்: 3.25/5
சீட்டின் நுனியில் அமர வைத்த டிமான்ட்டி காலனி 2
- பார்ட் 2 ராசியை முறியடிக்குமா டிமான்ட்டி காலனி 2.?
- அருள்நிதியை சுற்றும் அமானுஷ்யம்
- தப்பிக்க முடியாத ஆபத்தான உலகத்தில் சிக்கித் தவிக்கும் ஆத்மா