Sirakadikkum Asai Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற சிறகடிக்கும் ஆசை சீரியலில், சிறந்த தம்பதிகள் என்ற விருதை வாங்கி பரிசு தொகையாக ஒரு லட்ச ரூபாய் பணத்தை பெற்ற முத்து மற்றும் மீனா உச்சகட்ட சந்தோஷத்தில் வீட்டிற்கு வருகிறார்கள். ஆனால் இவர்கள்தான் ஜெயிப்பார்கள் என்று எதிர்பார்க்காத விஜயாவிற்கு கொஞ்சம் கூட சந்தோசமே இல்லாமல் வைத்திருச்சல் படுகிறார்.
ஆனாலும் முத்து மீனா இந்த விருது எங்கள் வாழ்க்கைக்கு கிடைத்த முதல் பரிசு, அதிலும் என்னை ஊக்கப்படுத்தி இந்த அளவுக்கு ஜெயிக்க வைத்தது மீனா தான் என்று முத்து பெருமையாக அண்ணாமலையிடம் சொல்கிறார். ஆனால் இந்த மனோஜ் தோற்றுப் போனாலும் ரொம்பவே கெத்தாக முத்து வாங்கிய விருது ஒண்ணுமே இல்லை. முத்து மீனாவுக்கு பாவப்பட்டு அந்த விருதை கொடுத்து இருக்கிறார்கள் என்று ஜம்பமாக பேசுகிறார்.
ரோகினியை கண்மூடித்தனமாக நம்பும் மனோஜ்
உடனே முத்து கணவன் மனைவி சந்தோசமாக வாழ்வதற்கு படிப்பு முக்கியமில்லை. அவர்களுக்கு உண்மையான அன்பும் பாசமும் இருந்தால் சிறந்த கணவன் மனைவியாக தான் இருப்பார்கள் என்று கூறுகிறார். பிறகு ரோகிணி, முத்து மீனாவிடம் தோற்றுப் போய் விட்டோமே என்று வருத்தப்படுகிறார். அப்பொழுது மனோஜ், ரோகிணியை சமாதானப்படுத்தும் விதமாக நாம் தான் சிறந்த ஜோடி.
நீ வந்த பிறகுதான் என்னுடைய வாழ்க்கை பிரகாசமாக ஜொலிக்க ஆரம்பித்தது. நீ எனக்கு கிடைத்த மிகப்பெரிய பொக்கிஷம். உன்னை போல் எனக்கு யாரும் இந்த அளவுக்கு என்னை நம்பினதில்லை என்று ஓவராக ரோகிணியை புகழாரம் சூடுகிறார். இதைக் கேட்டதும் ரோகிணியும் வானத்தில் மிதக்க ஆரம்பித்து விட்டார். இதனை தொடர்ந்து ஒரு லட்ச ரூபா பணம் வந்ததும் பத்திரமாக சேர்த்து வைத்து மாடியில் ரூம் கட்டலாம் என்று முத்து மீனா முடிவு பண்ணி விட்டார்கள்.
அடுத்ததாக முத்து சவாரிக்கு போன இடத்தில் ஒரு நபரை டிராப் பண்ணும் பொழுது அந்த வீட்டில் பிரச்சனை நடக்கிறது. அங்க போய் முத்து பார்க்கும் பொழுது லோக்கல் ரவுடி சிட்டியுடன் சேர்ந்து மீனாவின் தம்பி சத்யா அந்த குடும்பத்தில் இருப்பவர்களுக்கு டார்ச்சர் கொடுக்கிறார். இதை வீடியோ எடுத்த முத்து, அந்த பிரச்சினையை தட்டி கேட்டு சிட்டியை வெளியே அனுப்பி விடுகிறார்.
அத்துடன் மச்சான் என்கிற முறையில் மீனாவின் தம்பிக்கும் அட்வைஸ் பண்ணி, உன்னை நம்பி இருக்கும் குடும்பத்திற்கு துரோகம் நினைக்காத. ஒழுங்கா படிச்சு உருப்பட வழிய பாரு என்று அட்வைஸ் பண்ணுகிறார். ஆனாலும் சத்யா, அதை நீங்க ஒன்னும் சொல்லத் தேவையில்லை. எனக்கு என்ன பண்ணனும் தெரியும் என்று முத்துவை உதாசீனப்படுத்துகிறார்.
இதனை தொடர்ந்து விஜயா நடத்தி வரும் நடன பயிற்சி வகுப்பில் சும்மா டைம் பாஸ்க்கு சேர்ந்திருக்கும் ஒரு மாணவனால் பிரச்சனை வரப்போகிறது. அந்த வகையில் விஜயா நடத்தும் நடனப் பயிற்சியை இழுத்து மூடும் விதமாக அதை க்ளோஸ் பண்ணப் போகிறார்கள்.
இதனை அடுத்து மனோஜ் கிரெடிட் கார்டு மூலமாக ஓவராக கடன் வாங்கி அதை செலுத்த முடியாமல் வட்டிக்கு மேல் வட்டியாகி கடையை இழந்து தவிக்குமாறு ஏமாறப் போகிறார். என்னதான் படிச்சாலும் சுய புத்தி நிதானம் இல்லை என்றால் தோல்வி தான் சந்திக்க நேரிடும் என்பதற்கு உதாரணமாக மனோஜ் ஒவ்வொரு விஷயத்திலும் தோற்றுப் போய் வருகிறார்.
இதனால் ரோகிணி மற்றும் மனோஜ்க்கு மனக்கசப்பு ஏற்படவும் வாய்ப்பு இருக்கிறது. ஏனென்றால் கிரெடிட் கார்டு வாங்கும்போதே ரோகிணி வேண்டாம் என்று மறுத்தார். ஆனால் அதை எதையும் மனோஜ் காது கொடுத்து கேட்காமல் பேராசையால் ஏமாந்து போகப் போகிறார். அடுத்ததாக அந்த பணம் ரோகிணி அப்பா கொடுத்தது இல்லை அண்ணாமலையின் பணத்தை திருடிட்டு போய் ஏமாந்த பணம் திருப்பி கிடைத்தது.
அதன் மூலம் தான் மனோஜ் மற்றும் ரோகிணி ஷோரூம் கடைய ஆரம்பித்து வைத்திருக்கிறார்கள் என்பதும் தெரிய வரப்போகிறது. அப்பொழுதுதான் ரோகினி செய்த பித்தலாட்டம் விஜயாவுக்கு தெரிய வரப்போகிறது. இதனை தொடர்ந்து ஒவ்வொரு விஷயங்களிலும் ரோகிணி கையும் களவுமாக மாட்டப் போகிறார். அப்பொழுதுதான் மனோஜ் எந்த அளவுக்கு ஒரு ஏமாளியாக இருந்திருக்கிறார் என்பது புரியும்.
சிறகடிக்கும் ஆசை சீரியலில் நடந்த சம்பவங்கள்
- விஜயா மூஞ்சில் கரியை பூசிய வாரிசு
- மனோஜ்க்கு போடப்பட்ட குறும்படம், வெற்றி பெற்ற மீனா
- மனோஜை கண்கலங்க வைத்த ரோகினிக்கு விஜயா கொடுத்த பதிலடி