ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 22, 2024

காவிரியை விட்டுப் பிரியாமல் இருக்க விஜய் எடுக்கப் போகும் முடிவு.. சுயநினைவுக்கு திரும்பிய வெண்ணிலா

Mahanadhi Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற மகாநதி சீரியலில், காவிரி விஜய்யை கல்யாணம் பண்ணின பிறகும் நவீனை மறக்காமல் இன்னும் காதலித்து வருகிறார். அதனால் விஜய்யை விட்டுவிட்டு நவீனுடன் சேர்ந்து விடுவாள் என்று யமுனா தவறாக புரிந்து கொண்டு காவிரி மனதை நோகடிக்கும் வகையில் புண்படுத்தி பேசுகிறார். ஆனால் காவிரி மனதிற்குள் விஜய் தான் இருக்கிறார். இருந்தாலும் இவர்கள் இருவரும் ஒப்பந்தத்தின்படி தான் கல்யாணம் பண்ணி இருக்கிறார்கள்.

அதனால் ஒரு வருடம் முடிந்த பிறகு பிரிந்து போய்விடுவார்கள் என்பது நவீனை தவிர வேறு யாருக்கும் தெரியாததால் தான் எல்லா குழப்பத்துக்கும் பிரச்சினையாக இருக்கிறது. அத்துடன் இந்த ஒரு விஷயத்தை வைத்து தான் காவிரி நம்மளை தேடி வருவார் என்று நவீனம் தவறாக புரிந்து காத்துக் கொண்டிருக்கிறார். இதற்கெல்லாம் ஒரே வழி காவேரி மற்றும் விஜய் இருவரும் மனதிற்குள் இருக்கும் காதலை வெளிப்படையாக சொல்லி பேசி புரிந்து கொண்டால் எல்லா பிரச்சினையும் சுமுகமாக தீர்த்து விடலாம்.

காவிரியை விட்டுப் பிரிய மாட்டேன் என்று பிடிவாதமாக இருக்கும் விஜய்

ஆனால் அதை விட்டுவிட்டு விஜய்க்கு தன் மீது விருப்பமில்லை என்று நினைத்து காவிரி மனதிற்குள்ளே அழுது புலம்புகிறார். இன்னொரு பக்கம் விஜய், எக்காரணத்தைக் கொண்டும் யாருக்காகவும் நான் காவிரியை விட்டு பிரியவும் மாட்டேன் விட்டுக் கொடுக்கவும் மாட்டேன் என்று தெளிவான முடிவில் காதலித்து வருகிறார். இதற்கிடையில் மிகப்பெரிய குட்டையை குழப்பம் விதமாக யமுனா செய்யும் ஒவ்வொரு விஷயமும் காவிரிக்கு பிரச்சினையாக இருக்கிறது.

இதனை தொடர்ந்து விஜய் வழக்கம் போல் காவிரி மற்றும் குடும்பத்தில் இருப்பவர்களிடம் பாசத்தையும் அரவணைப்பையும் காட்டுகிறார். இதை பார்த்ததும் காவிரி நீங்க இப்படி இருந்தால் பிரியும் பொழுது எங்கள் குடும்பத்திற்கு ரொம்பவே கஷ்டமாக இருக்கும். அதனால் நீங்க உங்க எல்லையை மீறி யாரிடமும் பேச வேண்டாம். அப்பொழுதுதான் நான் உங்களை விட்டுப் போகும் பொழுது யாருக்கும் ரொம்ப கஷ்டமாக இருக்காது என்று சொல்கிறார்.

இதை கேட்டதும் விஜய் மனதிற்குள் நான் உன்னை அவ்வளவு சீக்கிரத்தில் விட்டு விட மாட்டேன் என்று சொல்லி மனதை தேற்றுகிறார். ஆனால் இருவருமே ஒருத்தர் இல்லாமல் இருக்க முடியாது என்று நினைக்கும் அந்த தருணத்தில் காதலை சொல்ல முன் வருவார்கள். அதிலும் விஜய்க்கு தற்போது காவிரி இல்லாமல் ஒரு நொடி கூட இருக்க முடியாது என்று புரிந்து விட்டது.

அந்த வகையில் அடிக்கடி காவிரி சொல்லும் ஒப்பந்தத்தின் படி திருமணத்தை இல்லாமல் ஆக்கி விட வேண்டும் என்று விஜய் நிஜமாகவே கல்யாணம் பண்ணலாம் காதலை சொல்லலாம் என்று முடிவு எடுக்கப் போகிறார். ஆனால் இந்த தருணத்தில் யாரும் எதிர்பார்க்காத ஒரு திருப்புமுனை ஏற்பட போகிறது. புத்தி சுயநினைவு இல்லாத வெண்ணிலாவுக்கு திடீரென்று விஜய் ஞாபகம் வந்து பழைய நினைவுகள் திரும்பப் போகிறது.

அப்பொழுது விஜய்யை தேடி வரும் வெண்ணிலாவின் கதை காவிரிக்கு தெரிந்து விடும். உடனே காவிரி, வெண்ணிலா மற்றும் விஜய்யும் சேர்ந்தால்தான் சந்தோசமாக இருப்பார்கள் என்று தியாகி மாறி இவர்களை சேர்த்து வைக்க முயற்சி எடுப்பார். ஆனால் இதற்கு எந்த காரணத்தைக் கொண்டும் விஜய் சம்மதம் தெரிவிக்க மாட்டார். அந்த வகையில் சந்தர்ப்ப சூழ்நிலை காரணமாக ஒருவரை ஒருவர் காதலை மனதுக்குளே வைத்துக் கொண்டு இருக்கப் போகிறார்கள்.

மகாநதி சீரியலில் நடந்த சம்பவங்கள்

Trending News