Thangalaan Collection: சமூக வலைத்தளம் முழுவதுமே இப்போது தங்கலான் பற்றிய பேச்சு தான் அதிகமாக இருக்கிறது. ஒரு சிலர் படம் பற்றிய குறைகள் சொன்னாலும் ஒட்டுமொத்த ஆடியன்ஸும் தங்கலானை பாராட்டி கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
அதில் பா ரஞ்சித் மறைக்கப்பட்ட நம் முன்னோர்களின் வரலாற்றை சொல்லிய விதமும் அதற்கு விக்ரம் தன் நடிப்பின் மூலம் உயிர் கொடுத்த விதமும் பாராட்டுகளை பெற்று வருகிறது. இப்படத்திற்குப் பின் ஒவ்வொருவரும் எந்த அளவுக்கு தங்களுடைய உழைப்பை கொடுத்துள்ளனர் என்பதும் திரையில் தெளிவாகவே தெரிகிறது.
அதேபோல் இன்னொரு நாயகனாக தன் இசையின் மூலம் மீண்டும் கைத்தட்டலை வாங்கி இருக்கிறார் ஜி வி பிரகாஷ். அதேபோல் பார்வதி, மாளவிகா மோகனன், பசுபதி ஆகியோரின் கதாபாத்திரங்கள் மட்டுமல்லாமல் ஒவ்வொருவரின் கேரக்டரும் குறை சொல்ல முடியாத அளவுக்கு இருக்கிறது.
இப்படியாக தங்கத்தை தேடிச் சென்ற முன்னோர்கள் எந்த அளவுக்கு வலியை கடந்தார்கள் என்பதை அழுத்தம் திருத்தமாக சொல்லி இருக்கிறார் ரஞ்சித். திரைக்கதையில் மிகச்சில சறுக்கல் இருந்தாலும் படத்தை அது பெரிய அளவில் பாதிக்கவில்லை.
தங்கலான் பாக்ஸ் ஆபிஸ் வசூல் ரிப்போர்ட்
அதனாலேயே தற்போது படத்திற்கான ஆரவாரம் அதிகரித்து இருக்கிறது. அதன்படி விடுமுறை தினமான நேற்று படத்தைப் பார்க்க ரசிகர்களின் கூட்டம் அதிகமாக இருந்தது. அதன்படி தமிழ்நாட்டில் மட்டுமே இப்படம் 11 கோடியை வசூலித்திருக்கிறது.
அதை தொடர்ந்து மலையாளம், தெலுங்கு ஆகிய மொழிகளையும் சேர்த்தால் தங்கலான் முதல் நாள் இந்திய அளவில் 13 கோடிகளையும் உலக அளவில் 26.44 கோடிகளையும் வசூலித்துள்ளது. மேலும் நேற்றை விட இன்று ஆன்லைன் டிக்கெட் புக்கிங் கணிசமாக உயர்ந்துள்ளது.
அதன்படி காலை காட்சிகளுக்கே பல திரையரங்குகள் ஹவுஸ்புல் ஆகிவிட்டது. அதனால் இரண்டாவது நாளான இன்று படத்தின் வசூல் இன்னும் உயரும் என தெரிகிறது. அதே போல் வார இறுதி நாட்களிலும் தங்கலான் கொடி பறக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.
மேலும் படத்தை பார்க்காமலேயே சிலர் சோசியல் மீடியாவில் நெகட்டிவ் கருத்துக்களை பரப்பி வருகின்றனர். உண்மையில் விக்ரமுக்காக படத்தை எத்தனை முறை வேண்டுமானாலும் பார்க்கலாம். தேசிய விருது மட்டுமல்ல பல விருதுகளையும் அவர் வாரி குவிப்பார் என ரசிகர்கள் தங்கலானுக்கு சப்போர்ட் செய்து வருகின்றனர்.