Trp Rating: இந்த வாரம் என்னென்ன சீரியல்கள் எந்த இடத்தை பிடித்திருக்கிறது என்று சுடச்சுட டிஆர்பி ரேட்டிங் வெளியாகி உள்ளது. அதாவது முதல் ஐந்து இடத்தையும் சன் தொலைக்காட்சி பெற்று விஜய் டிவியை அதள பாதாளத்திற்கு தள்ளி உள்ளது. என்னென்ன படங்கள் எத்தனை ரேட்டிங் பெற்றுள்ளது என்பதை இப்போது பார்க்கலாம்.
சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிங்க பெண்ணே தொடர் 9.03 ரேட்டிங் பெற்று முதல் இடத்தில் இருக்கிறது. இதைத்தொடர்ந்து இரண்டாவது இடத்தில் 8.58 ரேட்டிங் பெற்ற கயல் சீரியல் இரண்டாம் இடத்தை பிடித்திருக்கிறது. இப்போது விறுவிறுப்பான கதை களத்துடன் இந்த தொடர் சென்று கொண்டிருக்கிறது.
மேலும் மூன்றாவது இடத்தை 7.63 ரேட்டிங் பெற்று சின்ன மருமகள் தொடரும் நான்காவது இடத்தை 7.52 ரேட்டிங் உடன் வானத்தைப்போல தொடரும் பெற்றிருக்கிறது. குறிப்பாக வானத்தைப்போல தொடர் இறுதிக்கட்டத்தை இப்போது நெருங்கி இருக்கிறது.
32வது வார டிஆர்பி ரேட்டிங்
ஐந்தாவது இடத்தை 7.21 பெற்று சுந்தரி தொடர் பிடித்திருக்கிறது. அடுத்ததாக 7.06 ரேட்டிங்கில் மல்லி தொடர் ஆறாவது இடத்தை பிடித்துள்ளது. ஏழாவது இடத்தில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்கும் ஆசை தொடர் 6.90 ரேட்டிங் பெற்று பின்னுக்கு தள்ளப்பட்டுள்ளது.
மேலும் எட்டாவது இடத்தை பாக்கியலட்சுமி தொடர் மற்றும் ஒன்பதாவது இடத்தை பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 தொடர் ஆகியவை பெற்றிருக்கிறது. கடந்த சில வாரங்களாகவே விஜய் டிவியின் சிறகடிக்க ஆசை தொடர் முதன்மை இடத்தில் இருந்து வந்தது.
ஆனால் இப்போது முதல் ஐந்து இடங்களை கூட பிடிக்க முடியாமல் விஜய் டிவி திணறி உள்ளது. இதற்கு காரணம் சுவாரசியம் இல்லாத கதைக்களம் மற்றும் தொடரை ஜவ்வாக இழுத்து வருவது தான் என ரசிகர்கள் கருத்து கூறி வருகிறார்கள்.
பின்னுக்கு தள்ளப்பட்ட சிறகடிக்க ஆசை
- பிக்பாஸ் சீசன் 8 தொகுப்பாளர் இந்த ஹீரோவா.!
- டிஆர்பி யில் பட்டையை கிளப்பும் டாப் 6 சீரியல்கள்
- சன் டிவியை விட விஜய் டிவியில் சுவாரசியமாக போகும் 6 சீரியல்கள்