புதன்கிழமை, ஜனவரி 15, 2025

சீரியலில் நடித்து நடிகையாக மாறிய 5 ஹீரோயின்கள்.. அபி பிரக்கியாவுக்கு தூது போன மிருணாள்

Serial actress became big screen: ஒரு காலத்தில் வெள்ளித்திரையில் ஜொலித்த பிரபலங்கள் பலரும் சின்னத்திரைக்கு வருவதும், சின்னத்திரையில் இருந்து பலர் வெள்ளித்திறைக்கு போவதும் வாடிக்கையாகவே இருந்து கொண்டிருக்கிறது. ஆனால் எந்த துறையாக இருந்தாலும் திறமை இருந்தால் தான் அவர்களால் நீடித்து நிற்க முடியும். அப்படி சீரியலில் இருந்து சினிமாவிற்கு சென்ற பலருக்கும் தொடர்ந்து வாய்ப்புகள் தக்க வைத்துக் கொள்ள முடியாது.

இருந்தாலும் சிலருக்கு நல்ல வாய்ப்புகள் அமைந்ததால் திரை உலகில் கொடி கட்டி பறக்கும் வாய்ப்பை பெற்றிருக்கிறார்கள். அந்த வகையில் சீரியலில் நடித்த பிறகு படங்களில் மூலம் வாய்ப்புகளை பெற்று ஹீரோயினாக ஜொலித்து வரும் பாலிவுட் நடிகைகளை பற்றி தற்போது பார்க்கலாம்.

சீரியலில் நடித்து ஹீரோயினாக ஜொலிக்கும் நடிகைகள்

மிருணாள் தாக்கூர்: 2018-ம் ஆண்டு லவ் சோனியா என்ற படத்தின் மூலம் பாலிவுட்டில் நடிகையாக அறிமுகமானார். அதன் பின் சூப்பர் 30, பாட்லா ஹவுஸ் ஆகிய பாலிவுட் படங்களின் மூலம் பரிச்சயமான. அடுத்ததாக சீதா ராமம், ஹை நன்னா தெலுங்கு படத்தின் மூலம் பிரபலமாகி தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக மாறிவிட்டார். ஆனால் இதற்கு முன் குங்கும் பாக்யா, குச் கேத்தி யே கமோஷியான் என்ற சீரியலில் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்தார். அதுவும் குங்கும் பாக்யா சீரியல் தமிழில் டப் பண்ணி ஜீ தமிழில் இரு மலர்கள் என்ற தொடர் மூலம் அனைவரது மனதையும் கொள்ளை அடித்தார். அந்த வகையில் அபி மற்றும் அக்கா பிரக்யா வாழ்க்கைக்கு தூது போன அம்மு கேரக்டரில் ரசிகர்களை கவர்ந்து விட்டார்.

தீபிகா படுகோன்: பாலிவுட்டின் முன்னணி நடிகையாக வலம் வரும் தீபிகா படுகோன் இந்தியாவின் அதிக சம்பளம் வாங்கும் நடிகைகளில் ஒருவராக இருக்கிறார். ஆனால் ஆரம்பத்தில் மாடலாக இருந்து தொலைக்காட்சி மூலம் சீரியல்குள் நுழைந்து ‘கஹானி கர் கர் கி’யில் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்தார். அதன்பின் பாலிவுட்டுக்கு சென்று ஓம் சாந்தி ஓம், காக்டெய்ல், பிகு மற்றும் பத்மாவத், பதான், ஜவான், கல்கி 2898 போன்ற பல வெற்றி படங்களில் நடித்து ஹீரோயினாக ஜொலித்துவிட்டார்.

வித்யா பாலன்: இவர் ஆரம்பத்தில் தொலைக்காட்சியில் இருந்து தான் திரை வாழ்க்கையை தொடங்கி இருக்கிறார். ஹம் பாஞ்ச் என்ற சீரியலில் நடித்திருந்தார். அதன்பின் வெள்ளிதிரையில்ல் கிடைத்த வாய்ப்பைப் பயன்படுத்தும் விதமாக பரினீதா என்ற படத்தில் அறிமுகமானார். லஹே ரஹோ முன்னா பாய், பூல் பூலையா, நோ ஒன் கில்ட் ஜெசிகா, பா, கஹானி, இஷ்கியா, தி டர்ட்டி பிக்சர், மிஷன் மங்கல், சகுந்தலா தேவி என பல ஹிட் படங்களில் நடித்துள்ளார்.

யாமி கௌதமி: மாடலிங் மூலம் சினிமாவிற்குள் இவருடைய பயணத்தை ஆரம்பித்தார். அதன்பின் யே பியார் நா ஹோகா காம், சந்த் கே பார் சலோ போன்ற சீரியல்களில் நடித்தார். பின்னர் விக்கி டோனர் என்ற படத்தின் மூலம் பாலிவுட்டில் ஹீரோயினாக அறிமுகமானார். பட்லாபூர், காபில் உரி தி சர்ஜிக்கல் ஸ்ட்ரைக், பூட் போலிஸ், OMG 2, ஆர்ட்டிக்கிள் 370 என பல ஹிட் படங்களில் நடித்து பிரபலமாகிவிட்டார்.

மௌனி ராய்: கியுங்கி சாஸ் பி கபி பாஹு தி, டெவோன் கே தேவ், மகாதேவ் என்ற சீரியல் மூலம் இவருடைய பிரபலமானார் தொடங்கினார். அதன் பின் ஜூனூன்- ஐசி நஃப்ரத் தோ கைசா இஷ்க் மற்றும் நாகினி சீரியல்களிலும் நடித்திருந்தார். இதில் நாகினி என்ற பெயரில் தமிழ் சேனல்களிலும் டப்பிங் செய்து ஒளிபரப்பானது. இதனை தொடர்ந்து 2018 இல் ‘கோல்ட்’ படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமானார். ரோமியோ அக்பர் வால்டர, மேட் இன் சைனா மற்றும் லண்டன் கான்ஃபிடென்ஷியல் ஆகிய படங்களில் நடித்தார். பின்னர் பாலிவுட்டில் மிகப்பெரிய வெற்றிப் படமாக அமைந்த ‘பிரம்மாஸ்திரா’ படத்தில் நெகட்டிவ் ரோலில் நடித்திருந்தார். இதில் இவருடைய நடிப்புக்கு மிகப்பெரிய பாராட்டு கிடைத்தது.

Trending News