திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

தங்கமயிலிடமிருந்து சரவணனை காப்பாற்றிய செந்தில்.. சக்திவேல் போட்ட பிளானில் சிக்க போகும் பாண்டியன்

Pandian Stores 2 Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில், பல தில்லாலங்கடி வேலைகளை பார்த்து தங்கமயில் எப்படியோ பாண்டியனின் மருமகளாக வந்து விட்டார். வந்ததோடு நிறுத்தாமல் மொத்த குடும்பத்தையும் தன் கண்ட்ரோலில் வைத்திருக்க வேண்டும் என்பதற்காக அம்மா சொன்னபடி ஒவ்வொரு காயாய் நகர்த்தி வருகிறார். அந்த வகையில் சரவணனை கூட்டிட்டு ஹனிமூன் போய்விட்டார்.

போன இடத்தில் சின்ன சின்ன பிரச்சனைகள் ஏற்பட்டாலும் சரவணன் தங்கமேல் சந்தோஷமாக இருந்து போட்டோ மற்றும் மகிழ்ச்சியான தருணங்களை குடும்பத்தில் இருப்பவர்களுக்கு அனுப்பி வைத்திருக்கிறார். இதை பார்த்து பாண்டியன் குடும்பத்தில் சந்தோஷப்பட்டு பாண்டியன் மருமகளை பெருமை பித்தம் விதமாக கம்மி செலவில் ஹோட்டலை புக் பண்ணி சாமர்த்தியமாக தங்கமயில் ஒரு நல்ல மருமகளாக நடந்து கொண்டார் என்று பாண்டியன் பெருமையாக பேசி விட்டார்.

பித்தலாட்டம் பண்ணியும் ஓவராக ஆட்டம் போடும் தங்கமயில்

ஆனால் தங்கமயில் பண்ணிய கூத்து என்னவென்று செந்தில், கதிர் மற்றும் மீனாவுக்கு மட்டுமே தெரியும். இருந்தாலும் அண்ணனுக்காக எதுவும் சொல்லாமல் அனைவரும் வாயை மூடி கொண்டார்கள். இதனை அடுத்து தங்கமயில் சரவணனுடன் இருக்கும் புகைப்படத்தை பார்த்த பாக்கியம் உடனே தங்கமயிலுக்கு போன் பண்ணி நீ இப்படி எல்லாம் சந்தோஷமாக சிரித்து பேசக்கூடாது.

கொஞ்சம் விரைப்பாக இருந்து கோபத்துடன் இருக்கிற மாதிரி ஓவராக சீன் போடணும். அப்பதான் மாப்பிள்ளை உன் பக்கம் நின்று உனக்காக பேசுவார். உன் காலடியில் கிடந்து குடும்பத்திற்கு எதிராக மாறுவார். அப்படி மட்டும் மாறிவிட்டால் உன்னை பற்றி விஷயங்கள் தெரிந்தால் கூட பெரிசாக மாப்பிள்ளை கோபப்பட மாட்டார். உன் உடன் வெளியே வந்து விடுவார். அந்த சமயத்தில் பணம் இல்லாமல் கஷ்டப்படக்கூடாது.

அதனால் இப்பொழுதே மாப்பிள்ளை சம்பாதிக்கும் பணத்தை நீ வாங்கி சேர்த்து வைக்கும் அளவிற்கு சாமர்த்தியமாக நடந்து கொள் என்று தவறான எண்ணங்களை மகளுக்கு பாக்கியம் சொல்லிவிட்டார். இதை கேட்ட தங்கமயிலும் அம்மா சொல்வது சரிதான் என்று சரவணன் இடம் கோபப்பட்டு பேசாமல் வெளியே வந்து விடுகிறார். இது எதுவும் புரியாத சரவணன், என்ன இப்போது தானே சிரிச்சு பேசிட்டு போன அதுக்குள்ள இப்ப கோபப்படுகிறார் என்று புலம்புகிறார்.

உடனே செந்திலுக்கு போன் பண்ணி இந்த பொண்ணுங்கள புரிஞ்சிக்கவே முடியல. எந்த நேரத்தில் எப்படி இருப்பாங்கன்னு தெரிய மாட்டேங்குது. எப்படி தான் சமாளிப்பது என்று செந்தில் இடம் ஐடியா கேட்கிறார். அதற்கு செந்தில் அப்படி இருக்கும் பொழுது சில சமயம் நீ கண்டுக்காமல் போய்விடு. அதன் பிறகு தானாக அவர்கள் என்னை கண்டுக்கவே மாட்டாங்க என்று நம்மிடம் அவர்களை வந்து பேசுவார்கள் என்று சரவணனுக்கு ஒரு நல்ல ஐடியா கொடுக்கிறார்.

அதன்படி சரவணனும், கோபமாக இருக்கும் தங்கமயிலை கண்டு கொள்ளாமல் தூங்கி விடுகிறார். உள்ளே வந்த தங்கமயில், சரவணனை பார்த்ததும் கடுப்பாக நிற்கிறார். இதனைத் தொடர்ந்து ராஜி, நம்முடைய அம்மாவுக்கு ஏதோ பிரச்சனை. அதனால் தான் அப்பா கோபப்பட்டு வெளியே அனுப்பி சண்டை போட்டார் என்று நினைத்து அழுகிறார். இதை பார்த்த கதிர், ராஜிக்கு ஆறுதலாக பேசி சமாதானப்படுத்துகிறார்.

இதனைத் தொடர்ந்து ராஜியின் சித்தப்பா சக்திவேலுக்கு, நகை மீது சந்தேகம் வந்துவிட்டது. அதனால் அந்த நகை எங்கே என்று கண்டுபிடிக்கும் விஷயத்தில் தீவிரமாக இறங்குகிறார். அப்பொழுது நகை அனைத்தும் ராஜிக்கு போயிருக்கிறது என்று தெரிந்தால் நிச்சயம் இதை வைத்து பிரச்சினை பண்ணுவார்.

அதோடு பாண்டியன் வீட்டு முன்னாடி நின்னு சொத்துக்காகவும் நகைக்காகவும் தான் எங்க வீட்டுப் பெண்ணை கல்யாணம் பண்ணி வச்சியா? அதோடு மட்டும் இல்லாமல் அவளை டியூச்சனுக்கும் அனுப்பி கொடுமைப்படுத்துகிறாய் என்று பிரச்சனை பண்ணி அவமானப்படுத்த போகிறார். இது எதுவும் தெரியாதா பாண்டியன் வழக்கம்போல் கதிர் மற்றும் ராஜிடம் கோபப்பட்டு சண்டை போட போகிறார்.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் நடந்த சம்பவங்கள்

Trending News