Singapenne: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிங்க பெண்ணே சீரியல் நாளுக்கு நாள் சவ்வாய் இழுத்துக் கொண்டிருக்கிறது. கிராமத்தில் இருந்து நகரத்திற்கு வரும் ஆனந்தி அங்கு நடக்கும் சவால்களை எப்படி சிங்கப்பெண் போல் எதிர்கொள்கிறாள் என்பதுதான் நாடகத்தின் கதை.
ஆனால் கடந்த சில மாதங்களாக விக்ரமன் படம் போல் முக்கோண காதல் கதையை வைத்து இயக்குனர் எவ்வளவு போரடிக்க வைக்க முடியுமோ அத அளவுக்கு செய்து விட்டார். அன்பு மற்றும் ஆனந்தி குடோனுக்குள் மாட்டியது, அதன் பின்னர் ஆனந்தி அன்புவின் உதவியுடன் மித்ரா மற்றும் கருணாகரனை பழிவாங்க நினைத்தது என எல்லாமே சூப்பராக இருந்தது.
இதுக்கு இல்லையா சார் ஒரு எண்டு?
திடீரென இவர்கள் எல்லோரையும் ஆனந்தியின் சொந்த ஊரான சவரக்கோட்டைக்கு தீமிதி திருவிழாவுக்கு அழைத்து செல்வதில் ஆரம்பித்த கதை ஒரே மாதிரியாக போய்க்கொண்டிருக்கிறது.
ஆனந்தியின் சொந்த வீட்டில் வைத்து அவளிடம் காதலை சொல்ல துடிக்கும் அன்பு, நேரடியாக ஆனந்தியின் அப்பாவிடம் பெண் கேட்க துடிக்கும் மகேஷ் என கடந்த இரண்டு வாரங்களாக ஒரே கதை தான்.
இரண்டு பேரில் ஒருவர் ஏதாவது ஒரு முடிவை தடாலடியாக எடுத்து வாயை திறந்து பேசினால் கூட பரவாயில்லை.
ஒவ்வொரு முறையும் இவர்கள் முடிவு எடுக்கும் போதெல்லாம் ஏதாவது ஒரு காரணம் சொல்லி இந்த விஷயத்தை தள்ளிப் போடுவது சீரியல் பார்ப்பவர்களுக்கே போர் அடிக்க ஆரம்பித்து விட்டது.
அதுவும் இவர்கள் எல்லோருடனும் சேர்ந்து கிராமத்திற்கு வந்து ஆனந்தியை பழிவாங்க போகிறேன் என்று மித்ரா இருப்பது, சீரியல் வில்லிகளுக்கெல்லாம் அவமானம் என்று தான் சொல்ல வேண்டும்.
போதாத குறைக்கு கிராமத்தில் ஆனந்தி வீட்டுக்கு பிரச்சனை, இதை அன்பு மற்றும் மகேஷ் இருவரும் இணைந்து தீர்த்து வைப்பதை இன்னும் ஒரு மாதத்திற்கு வைத்து ஓட்டுவார்கள் போல.
ஊருக்குள் ஆனந்திக்கு ஒரு வில்லன், ஆனந்தியின் அப்பா பெயரை கெடுக்க நடக்கப்போகும் சம்பவம், ஊருக்குள் நடக்கும் போட்டியில் அன்பு மற்றும் மகேஷ் கலந்து கொள்வது எதார்த்தத்தை மீறியதாக இருக்கிறது.
எந்த விதத்தில் இந்த கதை கதாநாயகியை சிங்க பெண்ணாக காட்டுகிறது என்று கூட புரியவில்லை. இன்னொரு பக்கம் ஆனந்திக்கு அப்பப்போது மயக்கம் வருவதும், ஒரு வேலை மகேஷ் மற்றும் ஆனந்தி அந்த பார்ட்டியில் தவறாக ஏதேனும் செய்திருப்பார்களோ, அதனால் ஆனந்தி கர்ப்பமாக இருக்கிறாளோ என்ற சந்தேகத்தை கொடுக்கிறது.
சிங்க பெண்ணே சீரியல் ரசிகர்களை பொறுத்த வரைக்கும் அன்பு மற்றும் ஆனந்தி சேர வேண்டும், மகேஷ் மற்றும் அன்பு இருவருக்கும் இடையேயான நட்பு அப்படியே இருக்க வேண்டும் என்பதுதான் ஆசை.
இதை அப்படியே வைத்து இந்த முக்கோண காதல் கதையை எவ்வளவு நாள் நேர்த்தியாக இயக்குனர் நகர்த்தப் போகிறாரோ என தெரியவில்லை.
ஆனால் ஆனந்தி கிராமத்திற்கு வந்ததிலிருந்து சிங்க பெண்ணே சீரியல் ரசிகர்களுக்கு நாடகம் ஒருவித சலிப்பை ஏற்படுத்தி இருக்கிறது. நாடகத்தை மீண்டும் பழைய பார்முக்கு கொண்டு வர வேண்டும் என்றால் வார்டன் மற்றும் மகேஷ் இருவருக்கும் ஆன ஃப்ளாஷ்பேக் என்னவென்று சொல்ல ஆரம்பிக்கலாம். ஆனால் இயக்குனர் எண்டு போடாமல் ஒரே கதையை வைத்து போர் அடித்துக் கொண்டிருக்கிறார்.