Thangalaan Collection: விக்ரம் நடிப்பில் கடைசியாக வெளிவந்த சில படங்கள் பெரிய அளவில் போகவில்லை. அதனாலயே தங்கலான் படத்தை அனைவரும் உன்னிப்பாக கவனித்து வந்தனர். பா ரஞ்சித் இயக்கத்தில் உருவான இப்படம் கடந்த 15ஆம் தேதி வெளியானது.
இப்படத்திற்காக விக்ரம் எந்த அளவுக்கு கஷ்டப்பட்டார் என்பதை ஏற்கனவே மேக்கிங் வீடியோ மூலம் நாம் பார்த்திருந்தோம். ஆனால் படத்தை பார்க்கும் போது தான் அவர் எந்த அளவுக்கு தன்னை வருத்திக்கொண்டு நடித்திருக்கிறார் என்பதை உணர முடிகிறது.
அந்த அளவுக்கு உசுர கொடுத்து நடித்த அவருக்கு இப்போது எல்லா பக்கம் இருந்தும் பாராட்டுக்கள் கிடைத்து வருகிறது. படம் குறித்து சில நெகட்டிவ் விமர்சனங்கள் சோசியல் மீடியாவில் உலா வந்து கொண்டு தான் இருக்கிறது.
பிளாக்பஸ்டர் ஹிட் கொடுத்த விக்ரம்
ஆனால் தரமான படத்திற்கு இதெல்லாம் தடையே கிடையாது. அதை நிரூபிக்கும் வகையில் தங்கலான் முதல் நாளிலேயே உலக அளவில் 26.44 கோடிகளை தட்டி தூக்கி இருந்தது. அதைத்தொடர்ந்து நேற்றைய தினமும் திரையரங்குகளில் கூட்டம் குவிய ஆரம்பித்தது.
அந்த வகையில் இப்படம் இரண்டாவது நாளில் 20 கோடிகளை தட்டி தூக்கி இருக்கிறது. ஆக மொத்தம் இந்த இரண்டு நாளில் மட்டுமே தங்கலான் 46 கோடிகளை தாண்டிவிட்டது. இது வார இறுதி நாட்களில் இன்னும் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதன் மூலம் சரிந்து கிடந்த விக்ரமின் மார்க்கெட்டும் தலை நிமிர்ந்து உள்ளது. அவருக்கு விஜய், அஜித் போன்று ரசிகர்கள் வட்டம் இல்லை என்று சொல்கின்றனர்.
ஆனால் விஜய் அஜித் தலைகீழாக நின்று தண்ணீர் குடித்தாலும் கூட இப்படி ஒரு நடிப்பை வெளிப்படுத்த முடியாது. இது விக்ரமால் மட்டுமே முடியும் என்பது மறுக்க முடியாத உண்மை. அதுவே அவருக்கான வெற்றியை இப்போது தேடி கொடுத்துள்ளது.
வசூல் வேட்டையாடும் விக்ரமின் தங்கலான்
- விக்ரம், பா ரஞ்சித் கூட்டணி தாக்கத்தை ஏற்படுத்தியதா.?
- சொல்லப்படாத தமிழர்களின் வலி, கதி கலங்க வைத்த விக்ரம்
- விக்ரமின் 2 வருட உழைப்பு வொர்க் அவுட் ஆனதா.?