புதன்கிழமை, டிசம்பர் 25, 2024

ரோகினியை நம்பி நடுத்தெருவுக்கு போகும் மனோஜ்.. தம்பிக்காக முத்துவின் பேச்சை மதிக்காமல் போன மீனா

Sirakadikkum Asai Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற சிறகடிக்கும் ஆசை சீரியலில், தன் மிகப்பெரிய தொழில் அதிபர் என்ற மெதப்பில் மனோஜ் ஓவராக ஆட்டம் ஆடி வருகிறார். அந்த வகையில் விலை உயர்ந்த பொருட்களை பயன்படுத்தி ஆடம்பரமாக வாழ்ந்தால்தான் கெத்தாக இருக்கும் என்று கிரெடிட் கார்டு மூலம் 50 ஆயிரத்துக்கும் மேல் வாட்ச், அம்மாவுக்கு 15,000 ரூபாயில் புடவை, ரோகினிக்கு செயின் மற்றும் பல கிப்டுகளை வாங்கிட்டு வந்திருக்கிறார்.

அதே நேரத்தில் அப்பாவுக்கு ஒரு துண்டு மட்டும் 50 ரூபாய்க்கு வாங்கிட்டு வந்து கொடுத்திருக்கிறார். இதெல்லாம் வாங்கி வந்து முத்து மற்றும் மீனா முன்னாடி கெத்து காட்டுகிறார். பிறகு ரோகிணி தனிப்பட்ட முறையில் கூப்பிட்டு இவ்வளவு செலவு பண்ணனுமா என்று கேட்ட நிலையில் இதெல்லாம் நாம் அடுத்த கட்ட முன்னேற்றத்திற்கு ஒரு படிக்கற்கள். இப்படி இருந்தால்தான் நாம் கெத்தாக இருக்க முடியும். அதுக்காக தான் கிரெடிட் கார்டு மூலமாக எல்லாத்தையும் வாங்கிக் கொண்டேன்.

மீனாவிடம் தம்பியை பற்றி சொல்லப் போகும் முத்து

இப்போதுதான் நம்முடைய ஷோரூம் நல்ல லாபத்தில் வருகிறது, அதன் மூலம் நாம் மாதா மாதம் வட்டி அசலையும் சேர்த்து கட்டி விடலாம் என்று சொல்கிறார். அத்துடன் நீ என் பொண்டாட்டியாக என்கூட இருக்கும் வரை எனக்கு எந்த கவலையும் இல்லை. நீ தான் என்னுடைய அதிர்ஷ்ட தேவதை. நீ வந்த பிறகு தான் என்னுடைய வாழ்க்கையை பிரகாசமாக அமைந்திருக்கிறது.

அதனால் நான் என்ன பண்ணினாலும் நீ என் பக்கபலமாக இருப்பது சந்தோஷமாக இருக்கிறது என்று ரோகிணியை ஓவராக நம்பி உள்ளதும் போச்சு கண்ணா என்று சொல்வதற்கு ஏற்ப கடைசியில் நடுத்தெருவில் நிற்கப் போகிறார். இதை கேட்டதும் ரோகிணியும் சந்தோஷத்தில் மனோஜ் சொல்வதால் சரி என்று ஏற்றுக் கொள்கிறார். இதனை தொடர்ந்து முத்து சவாரிக்கு போன இடத்தில் சிட்டி மற்றும் சத்தியா ஒரு வீட்டில் பிரச்சனை பண்ணுகிறார்.

அந்த வகையில் முத்து இவர்களிடம் இருந்து அந்த நபரை காப்பாற்றும் விதமாக அடாவடியாக இறங்கி பத்திரத்தில் கையெழுத்து போட்டு சிட்டி மற்றும் சத்யாவை வெளியே அனுப்புகிறார். அப்பொழுது சத்யாவிடம், இவனை நம்பி ஏமாந்து போய் நடுத்தெருவில் நிற்காதே. உன்னை நம்பி உன் குடும்பம் இருக்கிறது அதற்காக நீ கொஞ்சம் யோசித்து செயல்படு என்று சொல்கிறார்.

ஆனால் சத்தியா, முத்துவை பார்த்து உன் அட்வைஸ் எனக்கு தேவையில்லை, நீ போய் உன் வேலையை பாரு என்று கூறிவிட்டார். அந்த கடுப்பில் வீட்டுக்கு வந்த முத்துவிடம், மீனா சத்யாவுக்கு பிறந்தநாள் கோவிலில் பூஜைக்கு கொடுத்திருக்கிறோம். அதனால் அவன் கூப்பிடுகிறான், வாங்க நம்ம போயிட்டு வரலாம் என்று சொல்கிறார். ஆனால் முத்து அதற்கெல்லாம் நாம் போக வேண்டாம் நீயும் போகக்கூடாது என்று கண்டிஷனாக சொல்லி வெளியே கிளம்பி விட்டார்.

இதனால் என்ன பண்ணுவது என்று தெரியாமல் குழப்பத்தில் இருக்கும் மீனாவிடம் சுருதி என்ன ஆச்சு என்று கேட்கிறார். அப்பொழுது என் தம்பிக்கு பிறந்தநாள் அதனால் கோவிலுக்கு பூஜைக்கு கொடுத்திருக்கிறோம். ஆனால் அவர் வரமாட்டேன் என்று சொல்லி என்னையும் போகக்கூடாது என்று தடுத்து விட்டார் என சொல்லுகிறார். இத கேட்டதும் சுருதி, அவர் வருவதும் வராமல் போவதும் அவருடைய இஷ்டம். ஆனால் உங்களைப் போக கூடாது என்று சொல்வதற்கு எந்த உரிமையும் இல்லை.

சத்யா உங்களுடைய தம்பி அதற்காக கண்டிப்பா நீங்க போய் தான் ஆகணும் என்று மீனாவிடம் சொல்லி அனுப்பி வைக்கிறார். மீனாவும் கோயிலுக்கு போய் பூஜை செய்து முடித்த பிறகு பிரசாதம் வழங்குகிறார். அங்கே முத்து போய் பிரசாத்தை வாங்கி கோபத்துடன் மீனாவை பார்க்கிறார். இதனால் இவர்களுக்குள் ஒரு சின்ன பிரச்சனை ஆரம்பித்தாலும் சத்யா பற்றிய விஷயங்கள் முத்து, மீனாவிடம் சொல்ல ஒரு வாய்ப்பு வரப்போகிறது.

சிறகடிக்கும் ஆசை சீரியலில் நடந்த சம்பவங்கள்

Trending News