Maniratnam : மணிரத்னம் படத்தில் ஒரு சின்ன காட்சியிலாவது வாய்ப்பு கிடைக்காதா என பலர் காத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் ஒரு மிகப்பெரிய சூப்பர் ஹிட் படத்தின் வாய்ப்பு வந்தும் மைக் மோகன் அந்த படத்தை நிராகரித்து விட்டார். அதற்கான காரணத்தை பல வருடம் கழித்து இப்போது கூறியிருக்கிறார்.
மணிரத்னம் பொன்னியின் செல்வன் என்ற மாபெரும் பிரம்மாண்ட படத்தை கொடுத்த நிலையில் இப்போது தக் லைஃப் படத்தை எடுத்து வருகிறார். கமல், சிம்பு போன்ற பிரபலங்கள் இந்த படத்தில் நடித்து வருகிறார்கள். மணிரத்னத்தின் இயக்கத்தில் மைல்கள்ளாக இருப்பது அஞ்சலி படம்.
இந்த படத்தில் முதலில் மைக் மோகன் நடிக்க வைக்க தான் மணிரத்னம் அணுகி இருக்கிறார். ஆனால் அப்போது சில காரணங்களினால் மைக் மோகன் இந்த படத்தை நிராகரித்த நிலையில் இதற்கான காரணம் என்னவென்பது தற்போது கூறியிருக்கிறார்.
மணிரத்னத்தின் ஹிட் படத்தில் நடிக்க மறுத்த மைக் மோகன்
அதாவது அந்த படத்தில் மனநலம் குன்றிய குழந்தையை தனி அறையில் படுக்க வைப்பது போன்ற காட்சிகள் அமைக்கப்பட்டு இருக்கும். அந்தக் கருத்து எனக்கு ஏற்றுக்கொள்ளும்படி இல்லாத காரணத்தினால் தான் அஞ்சலி படத்தில் நான் நடிக்கவில்லை என்று மோகன் கூறியிருக்கிறார்.
இப்படி ஒரு கல்நெஞ்சக்காரனை பார்த்ததில்லை என்பது போல மோகன் பேசி இருக்கிறார். இதைப் பார்த்த சிலர் விதி படத்தில் ஒரு பெண்ணின் வாழ்க்கையை நாசமாக்கி கைவிடும் கதாபாத்திரத்தில் நடித்த நல்லவர்தான் இவர் என்று கமெண்ட் செய்துள்ளனர்.
மேலும் சிலர் நல்லவேளை மோகன் நடிக்கவில்லை, அந்த கதாபாத்திரத்தில் அற்புதமாக ரகுவரன் நடித்திருந்தார் என்றும் கூறியுள்ளனர். பாட்ஷா படத்தில் ரகுவரனுக்கு எப்படி நெகடிவ் கதாபாத்திரத்திற்கு பாராட்டு கிடைத்ததோ, அதேபோல் அஞ்சலி படத்தில் நல்ல அப்பாவுக்கான பாராட்டும் கிடைத்தது
காலத்தால் அழியாத மணிரத்னத்தின் படைப்பு
- மணிரத்னம் வரை கூட்டிட்டு போன உலகநாயகன்
- மணிரத்னம் ரீஎண்ட்ரி கொடுத்து தூக்கி விட்ட 4 ஹீரோக்கள்
- க பார்ட் 2 படங்களால் மணிரத்னம், ஷங்கருக்கு ஏற்பட்ட கெட்ட பெயர்