புதன்கிழமை, ஜனவரி 15, 2025

நெட்ஃபிளிக்ஸ்ல மிஸ் பண்ணாம பார்க்க வேண்டிய 5 படங்கள்.. கம்மி பட்ஜெட்டில் சம்பவம் செஞ்ச மண்டேலா

Netflix 5 Best Movies: என்னதான் திரையரங்குகளில் படத்தை பார்த்தாலும் மறுபடியும் பார்க்க வேண்டும் என்றால் டிவியில் போடும் வரை இப்பொழுது வெயிட் பண்ண தேவையில்லை. ஏனென்றால் திரையரங்களில் வந்து கொஞ்ச நாளிலேயே ஓடிடி தலங்களில் அந்த புது படங்கள் எல்லாம் வரிசை கொண்டு வந்து விடுகிறது. இதனால் விடுமுறை தினங்களில் குடும்பத்துடன் சேர்ந்து அந்த படங்களை பார்த்து விடலாம். அப்படி நெட்ஃபிளிக்ஸ்ல மிஸ் பண்ணாமல் பார்க்க வேண்டிய படங்கள் எக்கச்சக்கமாக இருக்கிறது. அதில் சில படங்களை பற்றி தற்போது பார்க்கலாம்.

யோகி பாபுக்கு கதாநாயகனாக கை கொடுத்த மண்டேலா

மண்டேலா: மடோன் அஸ்வின் இயக்கத்தில் கடந்த 2021 ஆம் ஆண்டு யோகி பாபு, ஷீலா மற்றும் பலர் நடிப்பில் மண்டேலா திரைப்படம் வெளிவந்தது. இப்படத்தின் கதையானது இரண்டு அரசியல் கட்சிகளுக்கு இடையே நடக்கும் தேர்தலை மையமாக வைத்து கிராமத்தில் ஏற்படக்கூடிய பஞ்சாயத்தின் படி தேர்தலில் வாக்குகள் எந்த அளவிற்கு முக்கியம் என்பதற்கு அடிப்படையாக யோகி பாபுவின் ஒத்த ஓட்டு அங்கு இருக்கும் அரசியல்வாதி தலையெழுத்தை மாற்றக் கூடியதாக அமைந்திருக்கும். இப்படம் கம்மி பட்ஜெட்டில் எடுக்கப்பட்டாலும் ஒரு விழிப்புணர்வு படமாக தரமான சம்பவத்தை செய்திருக்கிறது.

ரெடி பிளையர் ஒன்று(Ready Player One): ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் இயக்கத்தில் 2018 ஆம் ஆண்டு Ready Player One திரைப்படம் வெளிவந்தது. இப்படத்தின் கதையானது வரக்கூடிய பிரச்சனையை தீர்க்க முயற்சி செய்தாலும், கொஞ்சம் கொஞ்சமாக அதோட வாழவும் பழகிக் கொள்கிறோம். இந்த இடத்தில் எதிர்காலத்தில் உலகத்தில் ஏற்படும் பிரச்சனைகளை சமாளிக்கும் விதமாகவும் அதிலிருந்து தப்பித்துக் கொள்ளவும் மக்கள் அனைவரும் தேர்ந்தெடுப்பது தான் OASIS.

இது ஒர்டு விர்ச்சுவல் ரியாலிட்டி உலகம். OASISன் கிரியேட்டரான ஜேம்ஸ் ஹேலிடே தனது முழு சொத்தையும் கேமில் இருக்கும் புதிர்களைக் கண்டுபிடித்து வெல்பவர்களுக்கு வழங்குவதாக அறிவித்துவிட்டு மறைகிறார். இந்த விளையாட்டில் யார் வின் பண்ணுகிறார்கள் என்பதை வாழ்க்கையை அனுபவத்துடன் ஒவ்வொரு காட்சிகளும் அறிவில் சம்பந்தமாக நகரும்.

தி சோசியல் நெட்வொர்க்(The social Network): டேவிட் பின்ஷர் இயக்கத்தில் 2010 ஆம் ஆண்டு தி சோசியல் நெட்வொர்க் திரைப்படம் வெளிவந்தது. ஃபேஸ்புக்கின் உருவாக்கத்தைச் சுற்றியுள்ள கதையானது ஒரு பொழுதுபோக்கு அம்சமாக, உணர்ச்சிப்பூர்வமாக ஒவ்வொரு காட்சிகளும் மாறுகிறது.

இரட்டா (Iratta): ரோஹித் எம்.ஜி.கிருஷ்ணன் இயக்கத்தில் ஜோஜு ஜார்ஜ், அஞ்சலி நடிப்பில் கடந்த ஆண்டு சஸ்பென்ஸ் க்ரைம் திரில்லர் கதையாக இரட்டா திரைப்படம் வெளிவந்தது. கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தின் வாகாமன் காவல் நிலையம் ஒரு விழாவுக்காக தயாராகிக் கொண்டிருக்கிறது. அடுத்த காம்பவுன்டில் இரண்டு சிறுவர்கள் கிரிக்கெட் விளையாடுகின்றனர்.

அவர்களது வளர்ப்பு நாய் விக்கெட் கீப்பீங் செய்கிறது. அப்பகுதியில் உள்ள சில பயனாளிகளுக்கு கட்டி முடிக்கப்பட்ட வீடுகளைக் கொடுக்கும் அந்த விழாவுக்கு இன்னும் சில மணி நேரங்களில் அமைச்சர் வரப்போகிறார். அந்த நேரத்தில் திடீரென்று சத்தம் கேட்ட பொழுது, ஸ்டேஷனின் ஏஎஸ்ஐ வினோத் (ஜோஜு ஜார்ஜ்) ரத்த வெள்ளத்தில் இறந்து கிடக்கிறார். இதுகுறித்து வினோத்தின் உடன்பிறப்பும், டிஎஸ்பியுமான பிரமோத்துக்கு (ஜோஜு ஜார்ஜ்) தகவல் தெரிவிக்கப்படுகிறது. ஸ்டேஷனில் என்ன நடந்தது? என்பது கண்டறியும் விதமாக இக்கதை நகரும்.

அமெரிக்கன் கேங்ஸ்டார்(American Gangster): ரிட்லி ஸ்காட் இயக்கத்தில் டென்சல் வாஷிங்டன், ரஸ்ஸல் குரோவ் நடிப்பில் கடந்த 2007 ஆம் ஆண்டு அமெரிக்காவின் வாழ்க்கை வரலாற்றுக் குற்றப் படமாக வெளிவந்தது. வறுமையில் பிறந்து, சுயமாக உருவாக்கிய ஆப்பிரிக்க-அமெரிக்க ‘தொழில்முனைவோர்’ தனது உள்ளூர் ஹார்லெம் சார்ந்த செயல்பாட்டை விரிவுபடுத்தினார்.

தாய்லாந்தில் ஒரு மன்னனுடன் நேரடியாகக் கையாள்வதன் மூலம், அவர் வியட்நாமில் இருந்து திருப்பி அனுப்பப்பட்ட இறந்த வீரர்களின் சவப்பெட்டிகளுக்குள் தடை செய்யப்பட்ட மாத்திரைகளை கடத்தினார். இதற்கிடையில் தலைவனை வேட்டையாட ஒரு நேர்மையான துப்பறியும் நபர் (க்ரோவ்) நியமிக்கப்படுகிறார். இதை கண்டறியும் விதமாக ஒவ்வொரு விஷயங்களும் சாமர்த்தியமாக வைத்து பரபரப்பான காட்சிகளை உருவாக்கி இருக்கிறார்கள்.

Trending News