Bhakkiyalakshmi Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாக்கியலட்சுமி சீரியலில், பாக்கியா வீட்டில் இருந்து கொண்டு ஈஸ்வரி செய்த அராஜகத்தால் எழில் மற்றும் அமிர்தா வீட்டை விட்டு வெளியேறும்படி நிலைமையாகி விட்டது. பாக்கியாவும், எழில் மற்றும் அமிர்தா இங்கே இருந்தால் நிம்மதியாக இருக்க மாட்டார்கள். லட்சியத்திலும் ஜெயிக்க முடியாது என்பதற்காக ஈஸ்வரிடமிருந்து காப்பாற்றும் விதமாக வீட்டை விட்டு அவர்களை வெளியே அனுப்பி விட்டார்.
ஆனாலும் எழில் இல்லாமல் எப்படி இருக்க போறோம் என்று அழுது ஆர்ப்பாட்டம் பண்ணிய பாக்யா ஒரு மனநிலைக்கு பிறகு இதுதான் எதார்த்தம் என்பதை புரிந்து கொண்டார். வீட்டை விட்டு வெளியேறிய எழில் ஒரு நல்ல வீடு பார்க்கும்வரை ஹோட்டலில் தங்கிக் கொள்ளலாம் என்று அமிர்தாவை கூட்டிட்டு போகிறார். இந்த விஷயத்தை அரைகுறையாக புரிந்து கொண்டு கோபியிடம் போட்டு கொடுத்து பாக்யாவை டேமேஜ் பண்ணி விட்டார் இனியா.
மகனை பார்த்ததற்காக பாக்கியா போட்ட பிளான்
இதுதான் சான்ஸ் என்று கோபி, பாக்யவை திட்டி விட்டு எழிலை பார்த்து பேசுவதற்கு ஹோட்டலுக்கு போனார். அங்கே போய் எழில் இடம் பாசமாக பேசி வீட்டிற்கு கூப்பிட்டார். ஆனால் எழில் இதற்கெல்லாம் அசராமல் கோபியை நோஸ்கட் பண்ணி விட்டார். இதனால் ஏமாற்றத்துடன் கோபி அங்கே இருந்து கிளம்பிவிட்டார்.
இதனைத் தொடர்ந்து பாக்யாவின் மாமனாருக்கு 80-வது பிறந்தநாள் வருவதால் அதை பெரிசாக கொண்டாடலாம் என்று பாக்யா முடிவு எடுத்திருக்கிறார். இதை கேள்விப்பட்ட பாக்யாவின் மாமனார் தற்போது குடும்பம் இருக்கும் சூழ்நிலையில் இது தேவையா என்று கேட்கிறார். ஆனால் பாக்யா, இது நான் செய்யக்கூடிய கடமை. இதை நான் செஞ்சு தான் ஆகணும் என்று சொல்கிறார்.
உடனே ஈஸ்வரி, எழில் விஷயத்தில் என்ன முடிவு எடுத்திருக்கிறாய்? என்று கேட்கிறார். அதற்கு பாக்யா அவன் வரணும் என்று நினைத்தால் வரலாம். நான் எதுவும் சொல்ல மாட்டேன் கூப்பிடவும் மாட்டேன் என்று பாக்கியார் கூறிவிட்டார். ஆனால் ஈஸ்வரி எதுவுமே தெரியாத போல், ரொம்ப நல்லவர் போல் எழிலுக்கு போன் பண்ணி தாத்தாவுக்கு எண்பதாவது பிறந்தநாளை பெருசாக கொண்டாடுகிறோம்.
நீ வருகிறாயா என்று கேட்கிறாய், அதற்கு எழில் நான் வரவில்லை நான் வந்தால் உங்களுக்கு சங்கடமாக இருக்கும் என்று சொல்கிறார். உடனே ஈஸ்வரி முதலை கண்ணீர் வடித்து அமா நீ வந்திடாத வந்தா எனக்கு கஷ்டமாக இருக்கும் என்று சொல்லி எழிலை மேலும் காயப்படுத்தி விட்டார். ஆனாலும் பாக்யாவிற்காக எழில் மற்றும் அமிர்தா தாத்தாவின் 80 பிறந்தநாள் விழாவில் கலந்து கொள்ள வருவார்கள். ஏனென்றால் இந்த ஏற்பாடு பாக்யா பண்ணுவதற்கு முக்கிய காரணமே எழிலை பார்ப்பதற்காகத்தான்.
பாக்கியலட்சுமி சீரியலில் நடந்த சம்பவங்கள்
- பாக்யாவை பற்றி தவறாக போட்டு கொடுத்த சகுனி
- ஈஸ்வரி இடம் மாட்டிக் கொண்டு தவிக்கும் பாக்யா மருமகள்
- பாக்கியாவிற்கு அடுத்து அமிர்தாவை டார்ச்சர் பண்ணும் ஈஸ்வரி