3 சாக்லேட் பாய்ஸ் சொந்த குரலில் பாடிய பாடல்கள்.. அஜித் முதலும் கடைசியுமாய் பாடகர்களுக்கு விட்ட சவால்

விஜய், சிம்பு, சிவகார்த்திகேயன் போன்ற ஹீரோக்கள், இவர்கள் நடித்த படங்களில் எப்படியும் ஏதாவது ஒரு பாடல் பாடி விடுவார்கள். அப்படி இவர்கள் பாடிய பாடல்கள் எல்லாம் மக்களுக்கு மிகவும் பரிச்சயம். ஆனால் தமிழ் சினிமாவில் சாக்லேட் பாயாக வலம் வந்த 3 பேர் ஆளாளுக்கு ஒரே ஒரு பாடலை மட்டும் பாடியுள்ளனர்.

அஜித், பிரசாந்த், அரவிந்த்சாமி இவர்கள் மூன்று பேரும் பாடிய பாடல்கள் தான் இப்பொழுது வெளி உலகத்துக்கு தெரிந்துள்ளது. அதிலும் அஜித் பாடிய பாடல் செம ஹிட் அடித்துள்ளது. அஜித் குரலா என்று அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

அஜித் முதலும் கடைசியுமாய் பாடகர்களுக்கு விட்ட சவால்

வாலி: இந்த படத்தில் வரும் “ஓ சோனா” பாடலை பாடியது அஜித் தானாம். இந்த பாடல் அப்பவே செம ஹிட் அடித்துள்ளது. வைரமுத்து எழுதிய வரிகளை ஹரிஹரன் மற்றும் அஜித் இருவரும் சேர்ந்து பாடியுள்ளனர். இதுதான் அஜித் பாடிய முதல் மற்றும் கடைசி பாடல்.

அரவிந்த்சாமி: பணக்கார தொழிலதிபர் குடும்பத்தைச் சேர்ந்தவர் அரவிந்த்சாமி. இவரை நடிக்க கூட்டிட்டு வந்தவர் மணிரத்தினம். சினிமாவை விட்டு விலகியை இவர் “தனி ஒருவன் படத்தின் மூலம் ரீ என்ட்ரி கொடுத்தார். அதன் பின் நடித்த போகன் படத்தில் “போகன் கூடுவிட்டு கூடு” பாடல் இவர்தான் பாடியுள்ளார்.

பிரசாந்த்: என்பது காலகட்டத்தில் சாக்லேட் பாயாக வளம் வந்தவர் பிரசாந்த். இப்பொழுது சினிமாவில் இரண்டாவது இன்னிசை தொடங்கி இருக்கிறார். சமீபத்தில் இவர் நடிப்பில் அந்தகண் படம் வெளியானது. விஜய்யின் கோட் படத்திலும் நடித்துக் கொண்டிருக்கிறார். பிரசாந்த் பார்த்தேன் ரசித்தேன் படத்தில் “வா என்றது உலகம்” பாடலை பாடி அசத்தியுள்ளார்.

பொழுதுபோக்கு

புகைப்படங்கள்