ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 22, 2024

பிக் பாஸ் சீசன் 8ல் களம் இறங்கும் 3 போட்டியாளர்கள்.. களைக்கட்ட போகும் விஜய் டிவியின் டிஆர்பி

Vijay Tv Bigg Boss: தெருவுல, பக்கத்து வீட்ல ஒரு சண்டை வந்தாலே அதை வேடிக்கை பார்த்து புரணி பேசுவதை பலரும் வாடிக்கையாக வைத்திருக்கிறார்கள். அப்படிப்பட்டவர்களுக்கு தினம் தினம் வீட்டிலிருந்தபடியே சண்டை சச்சரவுகளை பார்க்கும் படியாக வசதியை ஏற்படுத்திக் கொடுப்பது தான் பிக் பாஸ் நிகழ்ச்சி. விஜய் டிவியில் கடந்த ஏழு சீசன் வரை வெற்றிகரமாக முடிந்திருக்கிறது. அதற்கு முக்கிய காரணம் கமலஹாசன் தொகுத்து வழங்கியது தான்.

ஆனால் தற்போது வருகிற பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியை தற்காலிகமாக நான் தொகுத்து வழங்கப் போவதில்லை என்று கமல் அவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு இருந்தார். இதனால் அவருக்கு பதிலாக யார் தொகுத்து வழங்குவார் என்று ஒரு விவாதம் நடந்த நிலையில் தற்போது விஜய் சேதுபதி தொகுத்து வழங்கப் போகிறார் என்ற தகவல் வெளியாகி உள்ளது. ஆனால் இன்னும் சேனல் தரப்பில் இருந்து அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிடவில்லை.

வெளியான முதல் மூன்று போட்டியாளர்களின் லிஸ்ட்

இந்நிலையில் வருகிற அக்டோபர் முதல் வாரத்தில் பிக் பாஸ் சீசன் 8 தொடங்க இருப்பதால் கமுக்கமான முறையில் போட்டியாளர்களை தேர்வு செய்து வருகிறார்கள். அந்த வகையில் பப்லு பிரித்திவிராஜ், ரோபோ சங்கர், பாடகி கல்பனா, ரியாஸ்கான், அமலா ஷாஜி மற்றும் நடிகர் அஸ்வின் இவர்கள் கலந்து கொள்ள போவதாக லிஸ்ட் சமீபத்தில் வெளியாகி வந்தது.

இவர்களை தொடர்ந்து முதல் போட்டியாளராக தேர்வாகியிருப்பது பாரதி கண்ணம்மா சீரியல் மூலம் அறிமுகமான டாக்டர் பாரதி என்கிற அருண். இவரிடம் பேச்சு வார்த்தைகள் முடிந்த நிலையில் பிக் பாஸ் போவதற்கு தயாராகி இருக்கிறார். கடந்த சீசனில் இவருடைய காதலி அர்ச்சனா கலந்துகொண்டு டைட்டில் வின்னராக ஜெயித்து தற்போது படங்களில் நடிக்கும் வாய்ப்பை பெற்று வருகிறார்.

அந்த வகையில் அர்ச்சனா ரெக்கமண்டில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் அருண் கலந்து கொள்ளப் போகிறார். இவரை தொடர்ந்து பாரதி கண்ணம்மா சீரியலில் பாரதியை கல்யாணம் பண்ணி ஆக வேண்டும் என்று வில்லியாக மாறிய வெண்பா என்கிற பரீனாவும் தேர்வாகி இருக்கிறார். தற்போது சின்னத்திரையில் எந்த வாய்ப்பும் இல்லாததால் ரியாலிட்டி ஷோவில் கலந்து கொண்டு இவருடைய திறமைக்கான வாய்ப்பை பெற்றுக்கொள்ள முடிவெடுத்து விட்டார்.

இவர்களைத் தொடர்ந்து மூன்றாவதாக தேர்வாகி இருப்பது யார் என்றால் பிரபல யூடுயூபர் டிடிஎப் வாசனின் காதலி ஜோயாவும் தேர்வாகியிருக்கிறார். இவர் ஏற்கனவே குக் வித் கோமாளி 5 சீசனில் கலந்து கொண்டு சமீபத்தில் தான் எலிமினேட் ஆனார். ஆனால் இவருக்கு இருக்கும் ரசிகர்களால் இவரை பிக் பாஸ் நிகழ்ச்சிக்குள் விட்டு டிஆர்பி ரேட்டிங்கில் இடம் பிடித்திடலாம் என்று விஜய் டிவி பிளான் பண்ணிவிட்டது. அந்த வகையில் அக்டோபர் மாதம் முதல் மூன்று மாதம் வரை விஜய் டிவி களைக்கட்ட போகிறது.

Trending News