கிரைம் திரில்லர் படமாக வெளிவந்த 5 படங்கள்.. ஸ்மார்ட் வில்லனாக கம்பேக் கொடுத்த அபிமன்யு

5 films released as crime thrillers: தமிழ் சினிமாவில் எத்தனையோ படங்கள் வந்திருந்தாலும் சில படங்களை மறுபடியும் பார்க்க வேண்டும் என்று ஆசைப்படுவது வழக்கம் தான். அதிலும் சில படங்களை பார்க்க முடியாமல் அப்படியே மறந்து விடுவோம். ஆனால் காலம் போக்கில் அந்த படங்களின் இருக்கும் கதைகளின் மகத்துவம் என்ன என்பதை புரிந்து கொண்ட பின்பு மறுபடியும் தேடிப்பார்த்து அந்த படத்தை பார்த்து விடுவோம். அப்படி சில படங்கள் மீண்டும் பார்க்கும் வகையில் நல்ல கதைகளுடன் விறுவிறுப்பான காட்சிகளுடன் இருக்கிறது. அந்த படங்களை பற்றி தற்போது பார்க்கலாம்.

துருவங்கள் பதினாறு: கார்த்திக் நரேன் இயக்கத்தில் 2016 ஆம் ஆண்டு கிரைம் திரில்லர் படமாக துருவங்கள் பதினாறு வெளிவந்தது. இதில் ரகுமான், அஸ்வின் குமார், அஞ்சனா ஜெயப்பிரகாஷ், யாஷிகா ஆனந்த் மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். சின்னச் சின்ன தவறுகள் தானே என்று நினைத்து நாம் செய்யும் செயல்கள் எப்படி ஒருவருடைய வாழ்க்கையை ஆழமாகப் பாதிக்கிறது என்பதுதான் இப்படத்தின் கதை. ஒரு கொலையை செய்த குற்றவாளியை கண்டுபிடிக்கும் விதமாக ஏற்படக்கூடிய ஒவ்வொரு காட்சிகளும் சுவாரசியமான திருப்பங்களுடன் நம்முடைய கவனத்தை வேறு எங்கேயும் திசை திருப்பாத வகையில் கச்சிதமாக காட்சிகள் அமைக்கப்பட்டிருக்கும்.

தேசிய விருதை தட்டி தூக்கிய படம்

ஆரண்ய காண்டம்: தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் கடந்த 2010 ஆம் ஆண்டு ஆரண்ய காண்டம் கேங்ஸ்டர் திரைப்படமாக வெளிவந்தது. இதில் ஜாக்கீ ஷெரப், ரவி கிருஷ்ணா, சம்பத்ராஜ் மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். நிஜவாழ்க்கையில் சோக உணர்வை வரவழைக்கும் தருணங்களில் சிரிப்பை வரவழைக்கும் பிளாக் காமெடி என்பதற்கு ‘மும்பை எக்ஸ்பிரஸ்’ படத்துக்கு அடுத்து ஆரண்ய காண்டமே சிறந்த உதாரணம். குமாரராஜா வசனம் எழுதிய ‘ஓரம் போ’ படத்தில்கூட இந்த பிளாக் காமெடி ஆங்காங்கே வரும். இப்படம் சிறந்த இயக்குனருக்கான தேசிய விருதை பெற்றது.

குரங்கு பொம்மை: நித்திலன் சுவாமிநாதன் இயக்கத்தில் கடந்த 2017 ஆம் ஆண்டு கிரைம் திரில்லர் திரைப்படமாக குரங்கு பொம்மை படம் வெளிவந்தது. இதில் விதார்த், பாரதிராஜா, டெலினா டேவிட் மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். பணத்தின் மீதான பேராசை ஒரு நல்ல நட்பை, அன்பை, உறவை எப்படி சீர்குலைக்கிறது என்பதற்கு உதாரணமாக குரங்கு பொம்மை படமே சாட்சியாக இருக்கிறது. இதில் ஒவ்வொரு கதாபாத்திரங்களின் நடிப்பும் எதார்த்தமாகவும், இயல்பாகவும் இருந்ததால் படம் பாராட்டக்கூடிய அளவிற்கு வெற்றி பெற்றிருக்கிறது.

தனி ஒருவன்: மோகன் ராஜா இயக்கத்தில் 2015 ஆம் ஆண்டு ஜெயம் ரவி, அரவிந்த்சாமி, நயன்தாரா நடிப்பில் தனி ஒருவன் திரைப்படம் வெளிவந்தது. ஒட்டுமொத்த உலகத்தையும் தன் கைக்குள் கொண்டு வர வேண்டும் என்று சிறுவயதிலேயே ஸ்மார்ட் ஆக வேலை பார்த்த ஒரு பையன் வளர்ந்த பிறகும் அனைத்தையும் வளைத்து போடும் அளவிற்கு சூப்பர் ஸ்மார்ட் வில்லனாக மாறிய நிலையில் அவரை எதிர்கொள்ளும் தனி ஒருவனாக ஹீரோ படை எடுப்பதை இப்படத்தின் கதையாக அனைவரையும் கவர்ந்திருக்கிறது.

குற்றம் 23: இயக்குனர் அறிவழகன் இயக்கத்தில் கடந்த 2017 ஆம் ஆண்டு அருண் விஜய், மகிமா நம்பியார், தம்பி ராமையா நடிப்பில் குற்றம் 23 திரைப்படம் வெளிவந்தது. இப்படத்தின் கதையானது செயற்கை கருத்தரிப்பினால் ஏற்படும் முறைகேடுகளை மையமாக வைத்து க்ரைம்ட் திரில்லர் படமாக வெளிவந்தது. கருவுற்ற பெண்கள் சிலர் அடுத்தடுத்து தற்கொலை செய்துகொள்வது விசாரணைக்கு மிகவும் சிக்கலாக்குகிறது. இந்தச் சம்பவங்களுக்குப் பின்னால் இருக்கும் மர்மம் என்ன என்பதுதான் மீதிக் கதையாக சஸ்பென்ஸ் நிறைந்த காட்சிகளுடன் அமைந்திருக்கும்.

Trending News

- Advertisement -spot_img