Pandian Stores 2 Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில், பாக்கியம் போட்ட பிளானில் தங்கமயில் தோற்றுப் போனதால் சரவணனிடம் சிரித்து பேசி தங்கமயில் போட்டோக்களை எடுக்கிறார். எடுத்த போட்டோக்களை வழக்கம்போல் குரூப்பில் அனுப்பி எப்படி இருக்கிறது என்று எல்லாரும் மெசேஜ் அனுப்புங்க. யாருமே மெசேஜ் அனுப்பாமல் இருக்கிறது எனக்கு கஷ்டமாக இருக்கிறது என்று வாய்ஸ் மெசேஜ் அனுப்பி வைத்திருக்கிறார்.
இதை கேட்டதும் பாண்டியன், பாவம் அந்த பிள்ளை நம்மள பேச சொல்லி மெசேஜ் போட்டு இருக்கிறது. அதனால் எல்லோரும் ஒரு மெசேஜ் போட்டு விடுங்கள் என்று சொல்லி பாண்டியனும் அனைத்து போட்டோங்களும் அற்புதமாக இருக்கிறது. நல்ல சந்தோஷமாக எல்லா பக்கமும் சுத்தி பார்த்துட்டு வாங்க என்று வாய்ஸ் மெசேஜை அனுப்பி வைக்கிறார்.
தங்கமயிலை லெஃப்ட் அண்ட் ரைட் வாங்கும் மீனா
அதோடு நிறுத்தாமல் கோமதியையும் மெசேஜ் அனுப்ப சொல்லி வற்புறுத்துகிறார். இதனால் கோபப்பட்ட கோமதி, எனக்கு அதுதான் வேலையா வீட்ல இவ்ளோ வேலை இருக்கு. நானும் தான் எல்லா பக்கமும் போயிட்டு வந்து போட்டோக்களை எல்லாம் உங்களுக்கு அனுப்பி வைத்தேன். அப்போதெல்லாம் நல்லா இருக்கு என்று எதுவுமே சொல்லி பாராட்டவில்லை.
புதுசாக வந்த மருமகள் மட்டும் உங்களுக்கு கண்ணுக்கு தெரிகிறதா என்று பாண்டியனிடம் புலம்புகிறார். உடனே பாண்டியன், தெரியாத்தனமா வந்து உன்னிடம் பேசிட்டேன் என்ன ஆள விடு என்று சொல்லி கிளம்புகிறார். இருந்தாலும் கோமதி சொல்வது சரிதானே என்று வீடியோ கால் மூலம் கோமதியை பேரழகி என்று பாராட்டி ஐஸ் வைத்து பேசுகிறார்.
உடனே கோமதியும், அசடு வழிந்து வீடியோ காலில் பாண்டியனிடம் ரொமான்ஸ் பண்ணுகிறார். இதை பார்த்து மீனா மற்றும் ராஜி, கோமதியை கிண்டல் அடிக்கிறார். அடுத்ததாக சரவணன் மற்றும் தங்கமயில் ஹோட்டலில் சாப்பிடக் கொண்டிருக்கிறார்கள். அப்போது சரவணனின் பிறந்த நாளை பெருசாக கொண்டாட வேண்டும் என்று தங்கமயில் ஓவர் பிளானை சொல்லுகிறார்.
இதனைக் கேட்ட சரவணன், எங்க வீட்டில் பெருசாக பிறந்தநாள் கொண்டாட மாட்டோம். அப்பா அம்மா கோவிலுக்கு போய் பூஜை பண்ணிட்டு ஒரு புது டிரஸ் வாங்கி கொடுப்பார்கள் என்று சொல்கிறார். இதனைத் தொடர்ந்து இவர்கள் வந்த ஹனிமூன் நாட்கள் முடிவடைந்து வீட்டிற்கு திரும்பிய நிலையில் பாண்டியன் மறுபடியும் தங்க மயிலை புகழ்ந்து பேசுகிறார்.
5000 ரூபாய் ஹோட்டலில் சந்தோஷமாக நேரத்தை செலவழித்து விட்டு வந்தார்கள். இதுதான் ஸ்மார்ட் வொர்க் என்று பாண்டியன், தங்கமயிலை பாராட்டுகிறார். இது கேட்டும் தங்கமயில் ஆமாம் மாமா என்று சொல்லி உண்மையை மறைத்து விட்டார். ஆனால் இதை எல்லாம் பார்த்து கடுப்பான மீனா, தங்கமயிலை தனியாக கூப்பிட்டு நீங்க ரூம் புக் பண்ணியது ஐயாயிரம் ரூபாய் இல்லை 26 ஆயிரம் ரூபாய் என்று எனக்கு தெரியும்.
மீதி பணத்துக்கு என்ன பண்ணிங்க, யார் எப்படி கொடுத்தாங்க என்றும் எனக்கு தெரியும். எல்லா விஷயத்தையும் மாமாவிடம் மறைக்க கூடாது என்று எங்களை பற்றி எல்லாத்தையும் போட்டு கொடுப்பீங்களா. அதே மாதிரி இந்த விஷயத்தையும் ஏன் மாமாவிடம் சொல்லவில்லை, இந்த உண்மையும் சொல்ல வேண்டியது தானே என்று தங்கமயில் இடம் மீனா கேட்கிறார்.
அதற்கு பதில் சொல்ல முடியாமல் முழிக்கும் தங்கமயிலை, இனியாவது மற்றவர்கள் விஷயத்தில் தலையிடாமல் இருங்கள் அதுதான் உங்களுக்கு நல்லது என்று மீனா, தங்கமயிலை பிளாக் மெயில் பண்ணி விட்டார். உடனே தங்கமயில், அம்மா பாக்கியத்திற்கு போன் பண்ணி மீனாக்கு தெரிந்த உண்மையை பற்றி சொல்கிறார். அதற்கு பாக்கியம் வீடு மீனா எதுவும் யாரிடமும் சொல்ல மாட்டாள். அப்படியே சொல்லி தெரிந்தால் பார்த்துக் கொள்ளலாம். அதையும் சமாளித்து விடலாம் என்று தங்கமயிலை சமாதானப்படுத்தி விட்டார்.
பாண்டியன் ஸ்டோர்ஸில் நடந்த சம்பவங்கள்
- Pandian Stores 2: ராஜியின் அண்ணன் சொதப்பியதால் அவஸ்தைப்பட போகும் பாண்டியன் குடும்பம்
- பாண்டியன் மருமகள் போட்ட பிளானை சுக்கு நூறாக உடைத்த செந்தில்
- ராஜி மூலமாக பாண்டியனுக்கு ஏற்படப் போகும் அவமானம்