Bhakkiyalakshmi Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாக்கியலட்சுமி சீரியலில், எழில் தனியாக போனதால் கோபி போய் பேசி ஆறுதல் படுத்தி வந்தார். ஆனாலும் எழில் யாரோட சப்போர்ட்டும் இல்லாமல் என்னால் என் குடும்பத்தை பார்க்க முடியும். அம்மா எது சொன்னாலும் எங்களுடைய நல்லதுக்காகத்தான் இருக்கும் என்று எனக்கு நம்பிக்கை இருக்கிறது. அதனால் இந்த சைடு கேப்பில் வந்து பாசத்தை கொட்டி நாடகத்தை நடத்த வேண்டாம் என்று சொல்லி எழில், கோபியை திருப்பி அனுப்பி விட்டார்.
இதனால் விரக்தியில் வீட்டிற்கு வரும் கோபி, கொஞ்சம் டல்லாக இருப்பதை உணர்ந்த ராதிகா எதுவும் பேசாமல் சாப்பாட்டை தட்டில் வைக்கிறார். இதை பார்த்து கடுப்பான கோபி, நான் என்ன நிலைமையில் இருக்கிறேன் என்று கொஞ்சம் கூட புரிந்து கொள்ளாமல் நீ பேசாமல் இப்படி நடந்து கொள்வது எனக்கு பிடிக்கவில்லை என்று சொல்கிறார். அப்பொழுது பக்கத்தில் இருந்த மயூவை பார்த்து கோபி பேசுகிறார்.
பாக்கியா ஏற்பாடு பண்ணும் ஃபங்ஷனுக்கு போகும் கோபி
ஆனால் அதையும் பேசவிடாமல் தடுக்கும் விதமாக ராதிகா, மயூவை தூங்க கூப்பிடுகிறார். உடனே கோபி, மயூ உனக்கு மட்டும் பொண்ணு இல்லை, எனக்கும் பொண்ணு தான். ஏன் எப்ப பார்த்தாலும் உனக்கு மட்டும் தான் பொண்ணு மாதிரி பேசிக் கொள்கிறாய். எனக்கு இனியா, எழில், செழியன் எப்படியோ அதே மாதிரி தான் மயூவும் என்று சொல்கிறார். ஆனால் ராதிகா கொஞ்சம் திமிராக இருந்ததால், கோபி கோபத்தில் சாப்பாட்டை கீழே தட்டி விட்டு தூங்கி விடுகிறார்.
பிறகு மறுநாள் வாக்கிங் போகும் பொழுது செழியனை பார்த்து பேசுகிறார். அப்போது செழியன் தான் மறுபடியும் அப்பாவாக போகிற சந்தோஷமான விஷயத்தை கோபியிடம் சொல்கிறார். இதை கேட்டதும் கோபி சந்தோஷத்தில் மகனை கட்டி அரவணைத்து மகிழ்ந்து கொள்கிறார். இதனை அடுத்து பாக்கியா, மாமனாருக்கு எண்பதாவது பிறந்த நாள் வருகிறது என்பதால் அதை கொண்டாடலாம் என்று முடிவெடுத்து இருக்கிறார்.
இதை கேட்டதும் செழியன் எல்லா வேலையும் நான் பார்த்துக்கொள்கிறேன். பெரிய மண்டபத்தை புக் பண்ணி பெருசாக பண்ணலாம் என்று சொல்கிறார். அதற்கு பாக்கியா அவ்வளவு நமக்கு நாள்கள் இல்லை. அதனால் கோவிலில் வைத்து தெரிந்தவர்களை கூப்பிட்டு வைத்து பண்ணிடலாம் என்று சொல்கிறார். இதை கேட்ட ஈஸ்வரி எதுவும் சொல்லாமல் இருந்த நிலையில் மாமனார் இப்போது குடும்பம் இருக்க சூழலில் இது தேவையா என்று கேட்கிறார்.
அதற்கு பாக்யா இதை எல்லாம் தள்ளிப் போட முடியாது, பண்ண வேண்டிய நேரத்தில் பண்ணினால் தான் சந்தோசமாக இருக்க முடியும் என்று சொல்கிறார். உடனே ஃபங்ஷனுக்கு ஏற்பாடு பண்ணுவதற்கு அனைவரும் சம்மதம் தெரிவித்து விட்டார்கள். அடுத்ததாக கோபி, ராதிகா வீட்டில் தனிமையாக இருப்பது போல் உணர்கிறார். அந்த நேரத்தில் பாக்யாவுடன் இருக்கும் பொழுது நம் வேலை விட்டு வரும் வரை பாக்கியா காத்துக் கொண்டிருந்து நமக்கு பிடித்த சாப்பாடுகளை பக்கத்தில் நின்று பரிமாறுவதை நினைத்து பார்த்து பீல் பண்ணுகிறார்.
அந்த வகையில் கொஞ்சம் கொஞ்சமாக பாக்யாவின் அருமை கோபிக்கு புரிய ஆரம்பிக்கிறது. இருந்தாலும் பாக்கியாவிடம் தோற்றுப் போய் விடக்கூடாது என்பதற்காக அவ்வப்போது பாக்யாவுக்கு கொடச்சலும் கொடுத்து வருகிறார். இதை எல்லாம் தாண்டி ஈஸ்வரி மற்றும் மாமனாருக்கு நடத்தப் போகும் 80வது பிறந்தநாள் விழாவில் கோபி ராதிகாவை விட்டுவிட்டு தனியாக பங்க்ஷனில் கலந்து கொள்கிறார்.
அங்கே கோபி வருவது பிடிக்கவில்லை என்றாலும் வேறு வழி இல்லாமல் கோபியை அனைவரும் ஏற்றுக் கொள்கிறார்கள். பிறகு ஈஸ்வரி மற்றும் தாத்தாவும் சேர்ந்து கோபியை ஆசீர்வாதம் பண்ணி அனுப்புகிறார்கள். அதே மாதிரி அந்த பங்க்ஷனில் எழில் அமிர்தா மற்றும் நிலா பாப்பா அனைவரும் வந்து ஆசிர்வாதம் வாங்கி ஒட்டுமொத்த குடும்பமாக சந்தோஷப்பட்டு கொள்கிறார்கள். இந்த விஷயம் ராதிகாவிற்கு தெரிய வரும்போது இத வச்சு கோபியிடம் பிரச்சினை பண்ணப் போகிறார்.
பாக்கியலட்சுமி சீரியலில் நடந்த சம்பவங்கள்
- பாக்கியாவிற்கு அடுத்து அமிர்தாவை டார்ச்சர் பண்ணும் ஈஸ்வரி
- பாக்யாவை பற்றி தவறாக போட்டு கொடுத்த சகுனி
- ராதிகா கொடுத்த சவுக்கடியால் பாக்கியா உடன் சேர நினைக்கும் கோபி