Pa.ranjith: இயக்குனர் பா. ரஞ்சித்தின் படங்கள் பொதுவாகவே ஒடுக்கப்பட்ட மற்றும் தாழ்த்தப்பட்ட சமூகத்தினருக்காக போராடும் விதமாக தான் இருக்கும். பெரும்பாலும் ஜாதி அரசியல் படங்களை தான் எடுத்து வருகிறார். அப்படித்தான் மெட்ராஸ், கபாலி, அட்டகத்தி போன்ற படங்களை எடுத்து வந்தார். ஆனால் இந்த படங்களை எல்லாம் தாண்டி சர்பட்டா பரம்பரை படத்தின் மூலம் ரஞ்சித்துக்கு மிகப் பெரிய திருப்புமுனை கிடைத்துவிட்டது.
அந்த வகையில் தமிழ் சினிமாவில் வெற்றி படங்களை கொடுக்கும் இயக்குனர்கள் லிஸ்டில் இணைந்து விட்டார். விக்ரமை வைத்து இயக்கிய தங்கலான் கடந்த வாரம் திரையரங்குகளில் வெளியாகி வெற்றி பாதையை நோக்கி பயணிக்கிறது. இந்த சூழ்நிலையில் இவர் போலவே, ஒடுக்கப்பட்ட சாதிக்கும் தாழ்த்தப்பட்ட சமூகத்திற்கும் குரல் கொடுக்கும் விதமாக தொடர்ந்து படங்களை எடுத்து வரும் மாரி செல்வராஜின் வாழை படமும் வருகிற ஆகஸ்ட் 23ஆம் தேதி அனைத்து திரையரங்களிலும் வெளிவர இருக்கிறது.
மனசுல இருக்க ஆதங்கத்தை கொட்டி தீர்த்த பா ரஞ்சித்
இது சம்பந்தமாக ஆடியோ வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடந்தது. இதில் மாரி செல்வராஜ், பா.ரஞ்சித், வெற்றிமாறன், சூரி, விக்ரம் மற்றும் பலர் கலந்து கொண்டார்கள். அப்பொழுது மேடையில் பேசிய பா ரஞ்சித், மாரி செல்வராஜ் மற்றும் நான் எடுக்கும் படங்களுக்கு மோசமான விமர்சனங்களை வைக்கும் பொழுது ரொம்பவே வலி நிறைந்த வேதனையை கொடுக்கிறது.
அதாவது நாங்கள் எடுக்கக்கூடிய படங்களில் ஹீரோக்கள் ஏன் எதிர்த்து அடிக்க கூடாது, அப்படியே அவமானத்தையும் கஷ்டங்களையும் தாங்கிக் கொள்ள வேண்டும் என்று ஏன் அப்படி ஒரு சூழ்நிலையை உருவாக்க வேண்டும் என்று எனக்கு புரியவில்லை. அப்படி என்றால் நாங்கள் எப்படிப்பட்ட படங்களை தான் எடுக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறீர்கள் என எனக்கு புரியவில்லை. இப்படிப்பட்ட சமூகத்தை ஏன் உருவாக்கி கொடுத்திருக்கிறது என்பது தான் எங்களுடைய ஆதங்கம் என கூறியிருக்கிறார்.
இதை வைத்து தான் மாரி செல்வராஜ், மாமன்னன், கர்ணன் மற்றும் வாழை போன்ற படங்களை எடுத்திருக்கிறார் என்று பேசி முடித்த நிலையில் சில இயக்குனர்கள் எங்களுடைய படத்தை பார்த்து இது நல்லா இருக்கிறது என்று எந்த வித விமர்சனமும் கொடுக்க முன் வருவதில்லை. ஆனால் அவர்கள் எங்களுடைய படத்தை பார்த்துக் கொண்டு தான் வருகிறார்கள்.
அப்படிப்பட்டவர்களால் ஏன் எங்க படத்தை புகழ முடிவதில்லை என்று பல நாட்கள் நான் சிந்தித்து இருக்கிறேன். ஆனால் தற்போது அப்படிப்பட்டவரையே வாழைப் படத்தின் டிரைலரை பார்க்க வைத்து அதை வீடியோ எடுத்து தற்போது போட்டு இருப்பதை பார்க்கும் பொழுது சந்தோசமாக இருக்கிறது என்று கூறியிருக்கிறார். இப்படி பா ரஞ்சித் குதர்க்கமாக கலாய்த்து பேசியதை யார் என்றால் இயக்குனர் மணிரத்தினத்தை தான்.
இவர் இப்படி பேசும்போது கீழே இருந்து மாரி செல்வராஜ் சிரித்துக்கொண்டே வேடிக்கை பார்த்து கைதட்டுகிறார். இப்படி இவர்களுடைய இந்த பஞ்சாயத்து போய்க் கொண்டிருப்பதை ப்ளூ சட்டை மாறன் அவர் பங்குக்கு உள்ளே புகுந்து பதனி வேலையை பார்த்து விட்டார்.
அந்த வகையில் மணி சார் வாழைப் படத்தை பார்த்துட்டு பாராட்டி இருக்கிறார். அப்படி என்றால் நீங்க ஏன் பொன்னியின் செல்வன் படத்தை பாராட்டவில்லை என்று கேட்டு பா ரஞ்சித் மற்றும் மாரி செல்வராஜ் மைண்ட் வாய்ஸ் ஆக பாராட்டுவதற்கு பாய்ண்ட் கிடைக்கல தக்கலைப் வரட்டும் வரட்டும் என்று கலாய்த்து போட்டிருக்கிறார்.