ரிலீசுக்கு முன்பே கை மேல நூறு கோடி லாபம் பார்த்த தயாரிப்பாளர்.. விஜய்யால் எகிறிய கோட் ப்ரீ பிசினஸ்

Goat Pre Business: விஜய் நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் கோட் அடுத்த மாதம் ரசிகர்களின் பார்வைக்கு வருகிறது. வெங்கட் பிரபு இயக்கியுள்ள இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

ஏ ஜி எஸ் என்டர்டெயின்மென்ட் படத்தை தயாரித்துள்ளது. இதில் விஜய் அப்பா மகன் என்ற இரு வேடங்களில் நடித்துள்ளார். அதில் மகன் கதாபாத்திரம் மூலம் இளமையாக காட்டப்பட்டுள்ளது.

சமீபத்தில் வெளியான ட்ரெய்லரில் இளவயது விஜய் தான் ரசிகர்களை அதிகம் கவர்ந்துள்ளார். அச்சு அசல் விஜய் 20 வயதில் எப்படி இருப்பாரோ அப்படியே இருந்தது அந்த தோற்றம். அதனாலேயே படத்தை காணும் ஆவல் இப்போது ரசிகர்களிடம் அதிகமாக இருக்கிறது.

அதேபோல் படத்தின் பிரீ பிசினஸ் கூட தயாரிப்பாளருக்கு கோடிக்கணக்கில் லாபத்தை கொடுத்திருக்கிறது. பொதுவாகவே விஜயின் படங்களுக்கு பிசினஸ் அதிகமாக இருக்கும். ஆனால் இந்த முறை கோட் படத்திற்காக போட்ட பட்ஜெட்டை தாண்டி ப்ரீ பிசினஸ் லாபமாக அமைந்திருக்கிறது.

கைமேல் லாபம் பார்த்த கோட் தயாரிப்பாளர்

அதன்படி இதன் சாட்டிலைட் உரிமையை ஜி நெட்வொர்க் 93 கோடிகளை கொடுத்து வாங்கி இருக்கிறது. அதை போல் ஓடிடி உரிமையை நெட்பிளிக்ஸ் 140 கோடிக்கு வாங்கி இருக்கிறது. மேலும் ஆடியோ உரிமையை டி சீரிஸ் 26 கோடிக்கும் ஓவர்சீஸ் தியேட்டரிக்கல் உரிமை 77 கோடிக்கும் விற்பனையாகியுள்ளது.

அதைத்தொடர்ந்து தமிழக தியேட்டர் உரிமையை ரோமியோ பிக்சர்ஸ் 92 கோடிக்கு வாங்கி இருக்கிறது. அதேபோல் ஆந்திரா, தெலுங்கானா திரையரங்கு உரிமையை மைத்ரி மூவி மேக்கர்ஸ் 30 கோடிக்கு பெற்றுள்ளது.

மேலும் கர்நாடகா தியேட்டர் உரிமை 14 கோடிக்கும் கேரளா திரையரங்கு உரிமை 17 கோடிக்கும் வியாபாரம் ஆகி இருக்கிறது. அதேபோல் ஹிந்தி டப்பிங் ரைட்ஸ் 50 கோடிக்கு பிசினஸ் ஆகியுள்ளது.

ஆக மொத்தம் ரிலீசுக்கு முன்பே கோட் வியாபாரம் 539 கோடிகளை தட்டி தூக்கி இருக்கிறது. இப்படத்தின் மொத்த பட்ஜெட் என்று பார்க்கையில் அது 300-ல் இருந்து 325 கோடியாக இருக்கிறது. அப்படி என்றால் தயாரிப்பாளருக்கு இப்போது கை மேல் பலன் தான்.

அது மட்டும் இன்றி கோட் படத்தின் அட்வான்ஸ் டிக்கெட் புக்கிங் நிச்சயம் சாதனை படைக்கும் என கணிக்கப்படுகிறது. அதே போல் முதல் நாள் வசூலே 100 கோடியை தாண்டி விடும் என்கின்றனர். ஆக மொத்தம் தமிழ் சினிமாவின் முதல் ஆயிரம் கோடி படம் என்ற பெருமையை கோட் தட்டி சென்றாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை.

வாயை பிளக்க வைக்கும் கோட் ஃப்ரீ பிசினஸ்

Next Story

- Advertisement -