Vikram : தங்கலான் படம் இப்போது திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. சினிமாவுக்காக மிகப்பெரிய அர்ப்பணிப்பை கொடுக்கக்கூடிய சியான் விக்ரம் இந்த படத்திற்காக தனது உசுரை கொடுத்து நடித்துள்ளார் என்பது படத்தில் மேக்கிங் வீடியோ மூலம் தெரிகிறது.
அதோடு அவருடைய வாழ்க்கையில் சந்தித்த கரடு முரடான விஷயங்களை சமீபத்தில் விக்ரம் பேசி இருந்தார். அதாவது கல்லூரி படித்து முடித்துவிட்டு சினிமாவில் நுழைந்த போது விக்ரமின் வாழ்கையில் துரதிர்ஷ்டமான சம்பவம் நடந்துள்ளது.
தங்கலான் மேக்கிங் போட்டோ
அதாவது விக்ரமின் முழங்கால் தொடங்கி கணுகால் வரை முற்றிலுமாக நசுக்கப்பட்டு இருந்தது. இதனால் மருத்துவர்கள் அவரது காலை எடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டனர். அதன் பிறகு 23 சர்ஜரி செய்யப்பட்டது. மூன்று வருடங்கள் மருத்துவமனையிலேயே விக்ரம் இருந்துள்ளார்.
23 சர்ஜரி செய்த விக்ரம்
மேலும் சர்ஜரிக்கு பின்பு விக்ரமால் நடக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. விக்ரமின் அம்மா என் பையனால் நடக்க முடியாதா என மருத்துவரிடம் கேட்கும்போது, அவருடைய காலை எடுக்கச் சொன்னார்கள், நான் காலை துண்டிக்காமல் காப்பாற்றி இருக்கிறேன் என்று சொன்னாராம்.
சீயானின் வாழ்க்கையை திருப்பி போட்ட தங்கலான்
ஆனாலும் விக்ரம் நான் நடப்பேன், கண்டிப்பாக என்னால் சினிமாவில் ஒரு சின்ன கதாபாத்திரத்திலாவது நடிக்க வேண்டும் என்று அவரது அம்மாவிடம் சொன்னாராம். அதன் பிறகு சினிமாவில் எந்த சிறிய வாய்ப்பு கிடைத்தாலும் அதனை பயன்படுத்திக் கொள்ள தயாராக இருந்துள்ளார்.
சாவின் விளிம்புக்கே சென்ற விக்ரம்
கொஞ்சம் கொஞ்சமாக சினிமாவில் வளர்ந்து இப்போது தங்கலான் மூலம் விருட்சமாகி உள்ளார். இப்போது இந்த படத்தின் மேக்கிங் புகைப்படங்களை பார்த்தாலே விக்ரமின் கடின உழைப்பு மற்றும் சினிமா மீது ஈடுபாடு தெள்ளத் தெளிவாக தெரிகிறது.
தங்கலானுக்கு உயிரக்கொடுத்த சீயான் விக்ரம்
- பாக்ஸ் ஆபிஸை கலக்கும் விக்ரம், பா.ரஞ்சித் கூட்டணி
- விக்ரம் மார்க்கெட்டை தூக்கி நிறுத்திய தங்கலான்
- தங்கலான், டிமான்ட்டி காலனி 2 வசூலில் பின் வாங்கிய கீர்த்தி சுரேஷ்