புதன்கிழமை, அக்டோபர் 30, 2024

தம்பி ஜப்பான், அண்ணன் ஜெர்மனா.? தங்கலான் வெற்றியால் பா ரஞ்சித்க்கு அடித்த ஜாக்பாட்

Pa Ranjith: சமீபத்தில் திரையரங்குகளில் வெளியாகி சக்கை போடு போட்டுக் கொண்டிருக்கிறது பா ரஞ்சித்தின் தங்கலான் படம். அவருடைய ஒவ்வொரு படமும் மிகப்பெரிய தாக்கத்தை தமிழ் சினிமாவில் ஏற்படுத்தி வருகிறது. அந்த வகையில் ரஜினியுடன் கபாலி படத்தில் கூட்டணி போட்டார்.

இதைத்தொடர்ந்து சியான் விக்ரம், பா ரஞ்சித்தின் கூட்டணி ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது. அந்த எதிர்பார்ப்பை பா ரஞ்சித் பூர்த்தி செய்த நிலையில் தங்கலான் படம் வசூலை வாரி குவித்து வருகிறது. இந்த வெற்றியால் இப்போது மாஸ் ஹீரோவுடன் கூட்டணி போட்டிருக்கிறார்.

அதாவது சூர்யாவுடன் தான் பா. ரஞ்சித்தின் அடுத்த படம். சூர்யா இப்போது கங்குவா படத்தில் நடித்துள்ள நிலையில் விரைவில் இந்த படம் ரிலீஸ் ஆக உள்ளது. இதை தொடர்ந்து ஞானவேல் ராஜாவின் ஸ்டுடியோ கிரீன் தயாரிப்பில் பா ரஞ்சித்தின் இயக்கத்தில் சூர்யாவின் ஜெர்மன் என்ற படம் உருவாக இருக்கிறது.

மாஸ் ஹீரோ உடன் கூட்டணி போடும் பா ரஞ்சித்

german
german

ஏற்கனவே சூர்யாவின் தம்பி கார்த்தி ஜப்பான் என்ற படத்தில் நடித்து இருந்த நிலையில் இப்போது சூர்யா ஜெர்மன் என்ற டைட்டில் நடிப்பது பேசுபொருளாக மாறி இருக்கிறது. மேலும் இந்த படம் எப்போதும் போல ரஞ்சித்தின் சாயலில் இருக்குமா அல்லது சூர்யாவுக்காக கதையில் மாற்றம் இருக்குமா என எதிர்பார்க்கப்படுகிறது.

சூர்யா இப்போது கங்குவா ரிலீஸுகாக பெரிதும் காத்துக் கொண்டிருக்கிறார். இந்த சமயத்தில் இப்போது பா ரஞ்சித்துடன் சூர்யா கூட்டணி போட்டிருப்பது அவரது ரசிகர் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. அதோடு வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யாவின் வாடிவாசல் படமும் விரைவில் தொடங்க இருக்கிறது.

சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் பேசிய வெற்றிமாறன் விடுதலை 2 படத்தின் படப்பிடிப்பு முடிந்தவுடன் வாடிவாசல் விரைவில் தொடங்கும் என்று கூறினார். சூர்யாவுக்கு இவ்வாறு அடுத்தடுத்த படங்கள் வரிசை கட்டி நிற்கிறது. அது கங்குவாவில் இருந்து அவரது வெற்றி முகம் ஏறுமுகமாக அமைய உள்ளது.

தடம் பதித்த பா ரஞ்சித்தின் தங்கலான்

- Advertisement -spot_img

Trending News