Bhakkiyalakshmi Serial Memes: சீரியல் என்றால் இல்லத்தரசிகளை கவரும் வகையில் பெண்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து அவர்கள் தான் எல்லாமே என்று சொல்லும் அளவிற்கு நாடகங்கள் இருக்கும். அதனாலேயே பொதுவாக பெண்கள் ஒரு சீரியலை கூட மிஸ் பண்ணாமல் எல்லா சீரியல்களுமே முடிந்தவரை மாற்றி மாற்றி பார்த்து வருவார்கள். அப்படித்தான் விஜய் டிவியில் முதன் முதலாக சீரியல் என்று பார்க்க ஆரம்பித்து டிஆர்பி ரேட்டிங்கில் இடம் பிடித்தது பாக்கியலட்சுமி சீரியல்.
புதுசா கல்யாணம் ஆனவங்க தகதகன்னு மின்னுவாங்க என்று சொல்வதற்கு ஏற்ப பாக்கியலட்சுமி சீரியல் புதுசாக வந்த பொழுது இல்லத்தரசிகள் மட்டுமில்லாமல் குடும்பத்தில் இருப்பவர்கள் அனைவரும் சேர்ந்து பார்க்கும் படியாக குடும்ப சீரியலாக இருந்தது. ஆனால் வர வர மாமியாரு கழுதை போல ஆனாளாம் என்று சொல்லுக்கு ஏற்ப பாக்கியலட்சுமி சீரியல் தற்போது முழுக்க முழுக்க சக்காளத்தி சீரியலாக மாறிவிட்டது.
அதாவது பாக்யா வேண்டாம் என்று கோபி, ராதிகாவை இரண்டாவது திருமணம் செய்தார். அதே மாதிரி அப்பாக்கு பிறந்தது தப்பாகாது என்று சொல்வதற்கு ஏற்ப கோபி எட்டடி பாய்ந்தால் பிள்ளை 16 அடி பாயும் என்று நிரூபித்துக் காட்டும் விதமாக செழியன், பொண்டாட்டி மாசமாக இருப்பதால் வேறு ஒரு பென்னுடன் நெருங்கி பழக ஆரம்பித்து விட்டார். பிறகு வீட்டுக்கு எல்லாம் இவங்களோட சங்கதி தெரிந்ததற்கு பின் செழியன் அடக்கி வாசித்து விட்டார்.
இன்னும் சொல்ல போனால் கோபி கல்யாணம் பண்ணி இருக்கும் ராதிகாவிற்கும் கோபி இரண்டாவது புருஷன் தான். இப்படி ஒரே வீட்டில் கோபி செழியன் செய்த மாதிரி எழிலும் ஏதாவது இரண்டாவது பொண்டாட்டி கதையை கொண்டு வந்துருவாங்களோ என்று எதிர்பார்த்து நிலையில் டைரக்டர் அங்கு தான் ஒரு ட்விஸ்ட்டை வைத்து விட்டார்.
உனக்கு ரெண்டாவது பொண்டாட்டி எல்லாம் கிடையாது, உன் பொண்டாட்டிக்கு நீ இரண்டாவது புருஷனாக தான் இருப்பாய் என்று கொண்டு வந்து விட்டார். அதோடு விடாமல் அந்த புருஷனையும் கதைக்கு கொண்டு வந்து அமிர்தா என் பொண்டாட்டி என்று பல திருப்பங்களை வைத்து பார்ப்பவர்களை சோதித்து விட்டார்.
இதனால் தற்போது பாக்கியலட்சுமி சீரியல் குடும்பங்கள் பார்க்கும் நாடகமாக இல்லாமல், இதெல்லாமா ஒரு சீரியலா? இப்படிப்பட்ட ஒரு கேவலமான சீரியலை யாரும் தடுத்து நிறுத்த மாட்டாங்களா என்று புலம்பும் அளவிற்கு பாக்கியலட்சுமி சீரியலின் மீம்ஸ்கள் டிரெண்டாகி வருகிறது. இந்த பாக்கியலட்சுமி சீரியலுக்கு தயவு செய்து சுபம் போட்டு விடுங்கள் என்று வெறிகொண்டு கமெண்ட் பண்ணி வருகிறார்கள்.
பாக்கியலட்சுமி சீரியலில் நடந்த சம்பவங்கள்
- பாக்யாவை பற்றி தவறாக போட்டு கொடுத்த சகுனி
- கோபியின் அடுத்த டார்கெட் ரெஸ்டாரண்ட்
- ராதிகா கொடுத்த சவுக்கடியால் பாக்கியா உடன் சேர நினைக்கும் கோபி