புதன்கிழமை, ஜனவரி 15, 2025

பிரபு மனசை குளிர வைக்க அதிரடியாக இறங்கிய ஆதிரை.. வேல்விழியுடன் சேர்ந்து சித்தி செய்யும் சதி

Marumagal Serial: சன் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற மருமகள் சீரியல் ஆரம்பித்ததிலிருந்து டிஆர்பி ரேட்டிங்கில் நான்காவது இடத்தை பிடித்து மக்களின் பேவரிட் ஆக இருக்கிறது. இதற்கு முக்கிய காரணம் எதார்த்தமான குடும்பங்களில் நடக்கும் பிரச்சினைகளையும், அதை சமாளிக்க போராடும் கதாபாத்திரங்களையும் தூக்கி நிறுத்தும் விதமாக கதைகள் நகருந்து வருகிறது.

அந்த வகையில் கஞ்சத்தனமாக இருக்கும் பிரபு, குடும்ப பாரதத்தில் இருந்து தப்பித்துக் கொள்வதற்காக கல்யாணம் செய்துவிட்டால், வரப்போற பொண்ணு தனி குடித்தனம் போக வேண்டும் என்று தன்னை தனியாக கூட்டி போய்விடுவார். அதன் மூலம் இந்த குடும்பத்திற்காக நாம் செலவு செய்யும் விஷயத்திலிருந்து தப்பித்துக் கொள்ளலாம் என்று நினைத்து கல்யாணம் பண்ணுவதற்கு பிரபு முடிவு எடுத்து விட்டார்.

வேல்விழியுடன் சேர்ந்த மனோகரி

இன்னொரு பக்கம் ஆதிரை படிப்பில் கெட்டிக்காரியாகவும், குணத்தில் லட்சுமியாக இருந்தாலும் வீட்டில் சித்தியின் கொடுமையை அனுபவிக்கும் ஒரு பாவப்பட்ட மகளாக பல கஷ்டங்களை பட்டு வருகிறார். இதனைப் பார்த்த ஆதிரையின் அப்பா, இந்த கொடுமையில் இருந்து ஆதிரை தப்பிக்க வேண்டும் என்றால் நல்லபடியாக கல்யாணத்தை நடத்தி வைக்க வேண்டும் என்று முடிவு பண்ணி விட்டார்.

அந்த வகையில் ஆதிரையின் அப்பாவும், பிரபுவின் அப்பாவும் சிறு வயதில் இருந்தே சிநேகிதர்களாக இருந்திருக்கிறார்கள். இவர்களுடைய திடீரென்று சந்திப்பு சம்மந்தியாக வேண்டும் என்ற முடிவு எடுக்க வைத்தது. அதனால் ஆதிரைக்கும் பிரபுக்கும் கல்யாணம் ஏற்பாடுகளை பண்ணி விடலாம் என்று முடிவெடுத்து பொண்ணு பார்க்க விஷயமும் நடத்தி வைத்தார்கள்.

இதற்கிடையில் ஆதிரை மற்றும் பிரபு சந்தித்த ஒவ்வொரு விஷயங்களிலும் டாம் அண்ட் ஜெரியாக சண்டை போட்டாலும் கல்யாண விஷயம் என்று வரும் பொழுது இரண்டு பேருக்குமே ஏதோ ஒரு சந்தர்ப்பங்களில் பிடித்து போய்விட்டது. அதனால் இவர்களுடைய கல்யாணம் தற்போது நிச்சயதார்த்தம் வரை வந்திருக்கிறது.

இருந்தாலும் இவர்களுடைய கல்யாணத்தை நிறுத்த வேண்டும் என்றும் பிரபுக்கு கல்யாணமே நடக்கக்கூடாது என்று பிரபுவின் சித்தப்பா மகளாக இருக்கும் வேல்விழி பல சதிகளை செய்து வருகிறார். அந்த வகையில் பிரபுவுக்கு போன் பண்ணி உனக்கு நிச்சயதார்த்தம் நடக்கும் அந்த கோவிலுக்கு நாங்கள் குடும்பத்துடன் வருகிறோம். வந்ததும் உன் நிச்சயதார்த்தத்தை நான் எப்படி நிறுத்தப் போகிறேன் என்பதை சவால் விட்டு சொல்கிறேன் என்று பிரபுவிடம் சொல்லி பயமுறுத்தி விட்டார்.

இதனால் பயந்து போன பிரபு, கோவிலுக்கு போனதும் ஆதிரையே நேரில் சந்தித்து இந்த கல்யாணத்தை நிறுத்துவதற்காக வேல்விழி என்னவேனாலும் உன்னிடம் வந்து என்னைப் பற்றி தவறாக சொல்லுவாள். அதை பற்றி நீ எதுவும் நம்பிடாதே என்று சொல்கிறார். உடனே ஆதிரை கொஞ்சம் கூட யோசிக்காமல், இப்பொழுதுதான் வேல்விழி என்கிட்ட நல்ல வாங்கி கட்டிட்டு போனா, திருப்பி என் பக்கம் தலை வைத்து கூட பார்க்க மாட்டாள்.

அதனால் நீங்கள் எதை நினைத்தும் கவலைப்பட வேண்டாம் என்று பிரபு மனசு குளறும்படி ஆதிரை அதிரடி காட்சியை இறக்கி விட்டார். இதே மாதிரி இந்த நிச்சயதார்த்தத்தை நிறுத்த வேண்டும் என்று ஆதிரையின் சித்தி மனோகரி, பிரபுவை பார்த்து ஆதிரைப்பற்றி தவறாக சொல்லி நிச்சயதார்த்தத்தை நிறுத்தி விடலாம் என்று பிரபுவிடம் பேச வருகிறார். ஆனால் நிச்சயம் பிரபு இதையெல்லாம் நம்பாமல் ஆதிரையை கல்யாணம் செய்து விடுவார்.

இதற்கு இடையில் இவர்களுடைய கல்யாணத்தையும் சந்தோஷத்தையும் கெடுக்க வேண்டும் என்று நினைக்கும் வேல்விழிவுடன் ஆதிரையின் சித்தி மனோகரி கூட்டு சேர்ந்து சதி வேலைகளை செய்து ஏமாந்து நிற்கப் போகிறார்.

Trending News